Home » Cover Story » சூப்பர் நினைவாற்றலுக்கு

 
சூப்பர் நினைவாற்றலுக்கு


admin
Author:

ஞாபக சக்திக்கும், தாது உப்புகள், அயர்ன் மற்றும் சிங்க் ஆகியவற்றிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் நடைபெற்ற பரிசோதனை ஒன்றில் இரத்தத்தில் இவ்விரு மினரல்கள் இருக்கவேண்டிய அளவை விடக்குறைவாக இருந்த 34 பெண்களை (வயது 18லிருந்து 40க்குள்) இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவினருக்கு அயர்ன் மாத்திரைகளும், ஒரு பிரிவினருக்கு சிங்க் மாத்திரைகளும் எட்டு வார காலத்திற்கு தொடர்ந்து தினமும் கொடுக்கப்பட்டன.

எட்டு வாரங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட நினைவாற்றலைப் பரிசோதிக்கும் சோதனைகளில் சிங்க் மாத்திரைகளை சாப்பிட்டவர்களால் கண்வழியே பார்த்த சம்பவங்களை நினைவு கூறும் ஆற்றல் அதிகரித்திருப்பதையும், அயர்ன் மாத்திரைகளைச் சாப்பிட்டவர்களால் பேசப்பட்ட விஷயங்களை நினைவு கூறும் ஆற்றல் அதிகரிப்பதையும் கண்டறிந்தார்கள்.

இரண்டு மினரல்களையும் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் சூப்பர் நினைவாற்றலை வளர்க்க முடியுமா முடியாது என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் இந்த இரண்டு மினரல்களும் ஒன்றாக கொடுக்கப்பட்டால் ஒன்று மற்றொன்று உடலில் சேர்வதைத் தடுத்துவிடும். இயற்கை உணவுகளான மீன், பீன்ஸ் மற்றும் கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது மேற்கூறிய பலன்களை நீங்கள் நிச்சயம் பெற உதவும்.

நன்றி: ஹெல்த்

 

1 Comment

Leave a Reply to malathi


 

 


October 1993

அக்டோபர் 10
மனச்சுமைகளை இறக்கி வைப்போம்
ஆசிரியரின் டைரி குறிப்பு
நாமே புத்திசாலிகள்
சூப்பர் நினைவாற்றலுக்கு
சிக்கனமும் சேமிப்பும்