– 1993 – October | தன்னம்பிக்கை

Home » 1993 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    அக்டோபர் 10

    அக்டோபர் 2 அனைவரும் அறிந்த நாள் அக்டோபர் 10ன் சிறப்பு என்ன? தமிழ் புதிய வரலாற்றில் தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட அமரர் மு. வரதராசனார் அவர்களின் நினைவு நாள் விழா, டாக்டர் மு.வ. அவர்கள் இளைஞரிடையே அதிக தொடர்பு கொண்டிருந்தார். மக்களது வாழ்க்கை நடையில் திருத்தம் ஏற்பட காரணமாக இருந்தார். அவருடைய படைப்புகள் இன்றும் உயிருடன் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் கொண்டிருந்த தொடர்பு.

    Continue Reading »

    மனச்சுமைகளை இறக்கி வைப்போம்

    மனச்சுமைகள் அதிகமாகி மன உளைச்சல் அடைந்தவர்கள், அதைக்குறைக்க நிறைய வழிகள் உண்டு. அவரவருக்கேற்ப ஆராய்ந்து தேர்ந்து, செயல்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டால் நிச்சயம் அதிலிருந்து மீளலாம்.

    Continue Reading »

    ஆசிரியரின் டைரி குறிப்பு

    நாவடக்கம்

    வளர்ந்து வரும் மனிதனுக்கு நாவடக்கம் மிகவும் இன்றியமையாதது. வளர்ந்து வரும் மனிதர்கள் துணிவாகப் பேசினாலும் திமிராகப் பேசுவதாகவே கருதுவார்கள். அதனால் துணிவைக்கூட மென்மையாகவே சொல்ல வேண்டும்.

    Continue Reading »

    நாமே புத்திசாலிகள்

    அமெரிக்காவில் அரசாங்கம் சமீபத்தில் வயது வந்தோர் கல்வி பற்றி ஓர் ஆய்வு நடந்தது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று கல்லூரிப் படிப்பை முடித்துள்ள அமெரிக்க மாணவர்களின் ஐந்தில் ஒருவர் ஆங்கிலத்தைப் படிக்கவோ, எளிய கணக்கைப் போடவோ இயலாத நிலையில் உள்ளனராம். ஆனால் இதை உணர்ந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. எனக்கு ஆங்கிலம் மிக நன்கு தெரியும் என்று கூறிக்கொள்கின்றனராம். கால்குலேட்டரை உபயோகப்படுத்திக் கூட்டல், கழித்தல் போடத் தெரியாத கல்லூரி மாணவர்களும் அங்கு உண்டாம். அரசாங்கம், தனது குழந்தைகளின் படிப்பில் தீவிர கவனம் செலுத்துமாறு பெற்றோரைக் கேட்டுள்ளது.

    Continue Reading »

    சூப்பர் நினைவாற்றலுக்கு

    ஞாபக சக்திக்கும், தாது உப்புகள், அயர்ன் மற்றும் சிங்க் ஆகியவற்றிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

    டெக்ஸாஸ் மாகாணத்தில் நடைபெற்ற பரிசோதனை ஒன்றில் இரத்தத்தில் இவ்விரு மினரல்கள் இருக்கவேண்டிய அளவை விடக்குறைவாக இருந்த 34 பெண்களை (வயது 18லிருந்து 40க்குள்) இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவினருக்கு அயர்ன் மாத்திரைகளும், ஒரு பிரிவினருக்கு சிங்க் மாத்திரைகளும் எட்டு வார காலத்திற்கு தொடர்ந்து தினமும் கொடுக்கப்பட்டன.

    Continue Reading »

    சிக்கனமும் சேமிப்பும்

    ஒரு சிற்றுண்டிச் சாலையில் நான்கு பேரோடு தேநீர் அருந்தச் சென்றாலும் கையில் பத்து ரூபாய் இருந்தால் தான் நாம் முன்னின்று தேவையானதைக் கொண்டுவரச் சொல்லலாம். அருகில் உள்ள ஓர் ஊருக்குச் செல்லவ வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய் இருந்தால் தான் தைரியமாகச சென்று வரலாம். நான்கு பேரோடு இருக்கும்போது கையில் காசு இல்லையானால் நல்லதைக்கூட, செய்யவேண்டிய சிறு செலவைக்கூடச் செய்ய முடியாமல் பின்தங்கியே நிற்க வேண்டிவரும். நமக்குள்ளேயே ஒரு வகையான தாழ்வு மனப்பான்மை தோன்றி நான்கு பேருக்குமிடையே கலகலப்பாகப் பேசக்கூட முடியாது. அன்றாட நடைமுறை தொடங்கி வாழ்க்கை முழுதும் பொருளாதாரம் இன்றி எதுவும் நடைபெறுவதில்லை என்பதை ஒவ்வொருவரும் நன்கு உணர்தல் வேண்டும்.

    Continue Reading »