Home » Cover Story » தொலைபேசியில் நாம்…

 
தொலைபேசியில் நாம்…


கலியமூர்த்தி
Author:

தொலைபேசியில் நீங்கள் பேசத்துவங்கும் முன் சில…

பேசத்துவங்கும் முன் பேச வேண்டியதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இது தங்களது நேரத்தை மீதப்படுத்துகிறது. பேச வேண்டியதை மறவாமல் பேசவும் உதவுகிறது. அனைத்திற்கும் மேலாக தாங்கள் மற்றவரது நேரத்தை மதிப்பதை உணர்த்தும்.

தங்களது அலுவலக தொலைபேசியின் வாடகைச் செலவைக் குறைக்க அலுவலர் அனைவரிடமும் அவரவர் பேசியதற்கான எண்களைக் குறித்துச் சரிபார்த்து கையெழுத்திடச் சொல்லுங்கள்.

தொலைபேசியில் மறுமுனையில் பேசத் துவங்கியதும் தங்களது பெயரை கூறுங்கள். ஏன்? உங்களைத் தெரியப்படுத்துவதோடு உங்களை நீங்கள் மதிக்கிறீர் என்பதையும் நீங்கள் சொல்லப்போவது குறித்து பெறுமையடைகிறீர் எனத் தெரியப்படுத்துகிறது.

தாங்கள் அதிபராக இருந்தாலும் தங்களது அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளும்போது தங்களது பெயரைத் தெரிவிப்பது நல்லது. இது உங்களை அறிமுகப்படுத்துவேதாடு, அலுவலகத்தாரை தயார் செய்யவும் தங்களை மரியாதைக்குரியவராகவும் தெரியப்படுத்துகிறது. இதை மரியாதைக் குறைவு என எக்காரணம் கொண்டும் நினைத்துவிட வேண்டாம்.

தங்களை சந்திப்பதற்காக யாரேனும் நேரம் கேட்பாரேயாயின் அவரிடம் அதற்கான காரணத்தை கேட்டறியுங்கள். தொலைபேசியில் பேசி முடிக்க முடியுமாயின் அப்போதே முடித்துவிடுங்கள். இது இருவரது நேரத்தையும் மீதப்படுத்தும். (இவ்வாறு செய்யும்போது தாங்கள் அவரை மதிக்கிறீர்கள் என்பதையும் விலக்கவில்லை என்பதையும் உணர்த்தியாக வேண்டும்).

தங்களைத் தங்கள அலுவலகத்தில் மரியாதையுடையவராக ஆக்கிக் கொள்வதற்கு தங்களது தனிப்பட்ட தொடர்புகளை அலுவலக நேரத்திற்குப் பின் வைத்துக் கொள்ளவும்.

தங்களது அலுவலகத்திலோ, தொலைபேசியின் அதிகப்படியான உபயோகத்தைப் பொறுத்து அடுத்த தொடர்புக்கு விண்ணப்பிக்கலாம். உங்களுடன் தொடர்பு கொள்ள நினைப்பவருக்கு உதவியாக இருக்கும்.

தொலைபேசியில் அதிக நேரம் பேசுவதைத் தவிர்க்கவும். அனைத்து இடத்திலும் இது தங்களை மரியாதைக்குரியவராக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1993

தொலைபேசியில் நாம்…
சிந்தனையைத் தெளிவாக்கு
நெஞ்சோடு நெஞ்சம்
மனோபாவங்கள்
ஆசிரியரின் டைரி குறிப்பு
மிகையான தூக்கம் சோம்பல் – வகையாகத் தவிர்ப்பது எப்பது?