Home » Cover Story » ஆசிரியரின் டைரி குறிப்பு

 
ஆசிரியரின் டைரி குறிப்பு


admin
Author:

மகான்கள்

மனிதர்கள் தங்களைப் பற்றி சிந்திக்கிறார்கள். மகான்கள் உலகத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.

மனநிறைவு

கடமையைச் செய்து முடித்த பொழுது ஏற்படுகின்ற மன நிறைவு மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும். ஒருவருக்காக நாம் தியாகம் செய்யும்போது ஏற்படுகின்ற மனநிறைவு உவகையைத் தரும். பெரு மகிழ்ச்சியைத் தரும்.

மன அழுக்கு

உடல் அழுக்குப்பட்டால் கூட பரவாயில்லை. மனம் அழுக்குப்படாத வகையில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மனத்தின் இயல்பு

மனம் செக்குமாடு போன்றது. தனக்கு விருப்பமானதையே சுற்றிச்சுற்றி வரும் இயல்புடையது.

எதிலும் ஒரு முடிவுக்கு வரும்போது துன்பங்கள் குறையத் தொடங்கி விடுகின்றன.

முயற்சி பெருகும்

முயற்சி உள்ளவர்களைச் சந்திக்கும்போது முயற்சி பெருகும். சோம்பேறிகளைச் சந்திக்கும்போது சோம்பல் பற்றிக் கொள்கிறது.

மனம்

கடிதம் வரத் தாமதம் ஆகும் என்று அறிவு கணக்கிட்டுச் சொன்னாலும் கூட, இன்று வராதா, நாளை வராதா என்று முன்கூட்டியே எதிர்பார்த்து ஏங்குவதில் மனம் சலிப்படைவதே கிடையாது.

மனிதனாகும் காலம்

துன்பங்களும், சோகங்களும் வரும்போதுதான் மனிதன் நின்று நிதானிக்கிறான். சிலர் அப்போது தான் மனிதர்கள் ஆகிறார்கள்.

மாமனிதர்

பிறர் குறையை மட்டும் சொல்பவன் சாதாரண மனிதன். தன் குறையையும் மறக்காமல் சொல்பவன் சிறந்த மனிதன். பிறர் குறையை மன்னித்து, தன் குறையைத் திருத்திக் கொள்பவன் உயர்ந்த மனிதன். எல்லாரிடத்திலும் நல்லதையே காண்பவன் மாமனிதன்.

முன்னேற்றம்

முன்னேற்றம் முயன்றதும் வந்துவிடுவது இல்லை. முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

முன்னேற்றம் உழைக்கத் தொடங்கியதும் வந்துவிடுவதில்லை. உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

முன்னேற்றம் என்பது தொடர்ந்த உழைப்பின் பயன்தான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1993

தொலைபேசியில் நாம்…
சிந்தனையைத் தெளிவாக்கு
நெஞ்சோடு நெஞ்சம்
மனோபாவங்கள்
ஆசிரியரின் டைரி குறிப்பு
மிகையான தூக்கம் சோம்பல் – வகையாகத் தவிர்ப்பது எப்பது?