– 1993 – September | தன்னம்பிக்கை

Home » 1993 » September

 
  • Categories


  • Archives


    Follow us on

    தொலைபேசியில் நாம்…

    தொலைபேசியில் நீங்கள் பேசத்துவங்கும் முன் சில…

    பேசத்துவங்கும் முன் பேச வேண்டியதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இது தங்களது நேரத்தை மீதப்படுத்துகிறது. பேச வேண்டியதை மறவாமல் பேசவும் உதவுகிறது. அனைத்திற்கும் மேலாக தாங்கள் மற்றவரது நேரத்தை மதிப்பதை உணர்த்தும்.

    Continue Reading »

    சிந்தனையைத் தெளிவாக்கு

    மக்களை மக்களிலிருந்து வேறுபடுத்துவது, மக்களிடம் இல்லாத மக்களிடம் உள்ள ஆறாவது அறிவு. இந்த அறிவு பகுத்தறிவு எனப்படுகிறது. மனிதனாகப் பிறந்தவர்களில் இதனைச் சரிவரப் பயன்படுத்துபவர்கள் அறிவு உடையவர்களாகவும், இதனைப் பயன்படுத்தாதவர்கள் அறிவு இல்லாதவராகவும் கருதப்படுகின்றனர். மனிதன் என்றால் மனத்தை உடையவன். மனம் இருப்பதால் நினைக்கும் ஆற்றல் பெற்றன். மனத்தின்கண் எழுகின்ற செயலின் அடிப்படை நினைவு, எண்ணம் ஆகியவற்றின் வாயிலாகத் தோன்றுகிறது. எண்ணமும், நினைவும், சொல்லும் இவற்றின் விளைவாகச் செயலும் ஏற்படுவதற்கு மூலகாரணமாக அமைவது சிந்தனை.

    Continue Reading »

    நெஞ்சோடு நெஞ்சம்

    பேராசிரியர் இல.செ.க. நினைவு சிந்தனைப் பேரவை துவக்கத்தை குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, ஆதரவு தெரிவித்தமைக்கு நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்களது விலாசங்களை ஆர்வமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்வதற்காக கீழே கொடுத்துள்ளோம்.

    Continue Reading »

    மனோபாவங்கள்

    அந்த இளைஞருக்கு சுமார் இருபத்தைந்து வயது இருக்கலாம். ஆடைகளை உடுத்துவதில் கவனமில்லை. பேச்சில் உற்சாகமில்லை. முகத்தை சரிவர சேவ் செய்யவில்லை. நடையில் தளர்வு. எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோன்று வெறுமையான பார்வை. யாரிடமும் பழக விரும்பாமல் தனித்து ஒதுங்குகிறார்.

    Continue Reading »

    ஆசிரியரின் டைரி குறிப்பு

    மகான்கள்

    மனிதர்கள் தங்களைப் பற்றி சிந்திக்கிறார்கள். மகான்கள் உலகத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.

    மனநிறைவு

    கடமையைச் செய்து முடித்த பொழுது ஏற்படுகின்ற மன நிறைவு மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும். ஒருவருக்காக நாம் தியாகம் செய்யும்போது ஏற்படுகின்ற மனநிறைவு உவகையைத் தரும். பெரு மகிழ்ச்சியைத் தரும்.

    Continue Reading »

    மிகையான தூக்கம் சோம்பல் – வகையாகத் தவிர்ப்பது எப்பது?

    மிகுதியாகத் தூங்குவதும் ஒரு நோய் தான். சோம்பல் தூக்கத்தின் நெருங்கிய தோழிதான். எனவே இந்த சோம்பலையும் தூக்கத்தையும் விரட்ட வழிதான் என்ன?

    மனித வாழ்வுக்குத் தூக்கம் மிக அவசியம். ஆனால் மிகையான தூக்கம் தான் கூடாது. ஓய்வு தேவை. ஆனால் ஓய்வாகவே இருக்கத் தூண்டும் சோம்பல்தான் கூடாது.

    Continue Reading »