Home » Articles » டாக்டர் இல.செ.க. பாதையில்

 
டாக்டர் இல.செ.க. பாதையில்


பாலா கோவை
Author:

நண்பர்களே “நட்புக்கொள்வதில் நிதானமாக இருக்கவும். ஆனால் நட்புக் கொண்ட பின் அதில் உறுதியாகவும் நிலையாகவும் நிற்கவும்”

என்கிறார் சாக்ரடீஸ்.

நட்பு என்பது மனிதர்களுக்கிடையே அமையும் உறவுப் பாலம். இந்தப்பாலம் சரியானதாகவும், உறுதியானதாகவும் இருந்தால்துன்பக்கடலை கடந்து விடலாம்!

‘நட்பு’ என்பது வெறும் பொழுது போக்கிற்கு மடடும் என்று இருக்கக் கூடாது.

நண்பர்கள் ஒன்று சேர்ந்து நல்ல எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளலாம். ஒருவர் பிரச்சனையை அலசி ஆராய்ந்து தீர்வு காணலாம்.. ஏன்? நான்கு நண்பர்கள் ஒன்று கூடி ஒரு தொழிலைத் தொடங்க முற்படலாம்.

தொழிலைத் தொடங்கும் நண்பர்கள் சில கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும். இது கூட்டு முயற்சி. ‘கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது’ என்பது பழமொழி. எத்தனையோ கூட்டாளிகள் ஒற்றுமையில்லாமல் பொருள், புகழ் இழந்து அழிந்து போயிருகிறார்கள். நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் ஒருவர் முன் மற்றொருவர் நிற்க முடியாத அளவிற்கு வெறுத்து பிரிந்திருக்கிறார்கள். இந்த சிக்கலை தீர்த்துக் கொள்ள நாம் ஒருதீர்மானம் செய்து கொள்ளலாம்.

நான்கு பேர்கள் சேர்ந்து இத்தனை மாதங்கள் அல்லது இத்தனை ஆண்டுகள் மட்டும் கூட்டாக இருந்து தொழிலை செய்வதாக முடிவு எடுத்துக் கொள்ளலாம். பின்பு அனைவரும் உண்மையாக இருப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு கடும் உழைப்போடும் மனத்தூய்மையுடன் செயல்பட்டு, தொழிலை மேற்கொள்ளலாம்.

குறிப்பிட்ட காலம் முடிந்துவிட்டது. ஆனாலும் ஒற்றுமை நீடிக்கிறது. தொழிலும் வளர்ச்சி அடைந்திருகிறது. என்றால் மீண்டும் கூட்டாகவே செயல்படலாம்.

“தனது வளர்ச்சியை தடுக்க் கூடிய “ஒரு சூழ்நிலைக்குள் யாரும் தானாகவே தன்னைப் புகுத்திக் கொள்ளக் கூடாது” என்கிறார் அறிஞர் மார்ட்டன். நான்குபேர்கள் சேர்ந்து செயல்படும் போதுதான் நன்மை என்றிருக்கும் போது, தாம் ஏன் பிரிய வேண்டும்!

தூய்மையான உள்ளங்களும், கடும் உழைப்பும், திட்டமிட்ட செயல்களும் சேரும் போது வாழ்க்கையில் வெற்றி! வெற்றி! வெற்றிதான்

– கோவை பாலா.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1993

சாதனையாளர்களின் மூன்று குணங்கள்
பிரச்சனையா உங்களுக்கா?
டாக்டர் இல.செ.க. பாதையில்
தன்னம்பிக்கையின் உதயம்
விவேகானந்தரின் அறிவுரைகள்
உங்கள் பக்கம்
சாதனையாளர்களின் 3 குணங்கள்
சிந்தனைகள் மலர்க!
சாதனையாளர்களின் மூன்று குணங்கள்