வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்

பல கோடி மக்களைப் பார்க்கிறோம். சிலர் மட்டும் எப்படி வெற்றி மேல் வெற்றி அடைகிறார்கள்? அவர்கள் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மனங்கலங்காமல் எப்படி செயல்படுகிறார்கள்?

காவலர் வேலைக்குச் செல்வதென்றால் அதற்குத் தேவையான படிப்பு அளவு, உயரம், எடை போன்ற தகுதிகளை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள். ஒரு மேலதிகாரியாக வேண்டுமென்றால், குறிப்பிட்ட கால அனுபவங்கள், வேலையில் திறமையை வெளிப்படுத்திய நடைமுறைகள் போன்றவற்றை வைத்து நிர்ணயிக்கிறார்கள்.

வெற்றியாளர்கள் எல்லாத் துறைகளிலும் உள்ளார்கள். வாழ்க்கையில் நாம் அவ்வப்போது சந்திக்கிறோம். கடந்த காலத்தில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருக்கிறோம்.

வெற்றியாளராக உருவாக தேவையான அடிப்படைப் பண்புகளை சுருக்கமாக, தெளிவாக இங்கு காண்போம். இந்த பண்புகளில் 10 அம்சங்களும் அவசியம் தேவை. ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலோ அல்லது குறைந்து விட்டாலோ அவரின் வெற்றியை பெருமளவு பாதிக்கும்.

வெற்றியாளராக விரும்புபவர்கள் கீழ்க்கண்ட கோடிட்ட பண்புகளை, சிறுதாளில் நான்கு பிரதிகளாக எழுதி, ஒன்றை எல்லா நேரமும் சட்டைப் பையில் வைத்திருக்கலாம். இரண்டாவது, தினமும் முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைக்கலாம். மூன்றாவது, தலைவைத்து படுக்குமிடத்தில் ஒட்டலாம். நான்காவது வேலை செய்யும் மேஜை மீது அல்லது எங்கு அதிகம் கண்ணில் படுமோ அதன் மீது ஒட்டி வைக்கலாம்.

Continue Reading »