உங்கள் இலட்சியத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி (Goal Setting)

இலட்சியங்களைப் பற்றிய பொதுத்தன்மைகளைப் பற்றி அறிந்து கொண்டோம். தனக்கு என்று வரும்போது, அதைத் துல்லியமாக ஆராய்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும்.

  • நமத இலட்சியம் நமது திறமைக்கும் தகுதிக்கும் ஆர்வத்திற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
  • நமக்குத் தொடர்பே இல்லாத துறையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.

இந்த இரண்டு கருத்துக்களையும் நம் இலட்சியத் தேர்வுக்கு அடிப்படை விதிகளாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை

நாம் தேர்ந்தெடுக்கும் இலட்சியத்தை நாம் அடைந்துவிட முடியும் என்பதில் முதலில் நமக்கு நம்பிக்கை பிறக்க வேண்டும். அந்த நம்பிக்கை தொடர்ந்து இருக்க வேண்டும். நம் உள்ளுணர்வு சொல்லும் இந்த நம்பிக்கையே அடிப்படை மூலதனமாகும். இந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் பிறகு எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும் நம் இலட்சியத்தை நாம் நிறைவேற்றி விடலாம். ஒரு வயதானவர் பழனிமலை மீது ஏறுகிறார். அவர் சென்று அடைவாரா என்பதில் நமக்கு சந்தேகமாக இருக்கிறது அவ்வளவு தளர்ச்சி. ஆனால் அவர் உள்ளத்தில் அசாத்தியமான நம்பிக்கை. நான் நடந்தே சென்று உச்சியை அடைவேன் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லும்போது நமக்கும் கூட நம்பிக்கை பிறக்கிறது. அவர் உறுதியாக உச்சியை அடைந்துவிடுவார் என்று அத்தகைய நம்பிக்கை நம் முன் பிறக்க வேண்டும். அதை நாம் வளர்க்க வேண்டும்.

Continue Reading »