Home » Articles » கருத்தும் வாழ்வும்

 
கருத்தும் வாழ்வும்


admin
Author:

ஜே. கிருஷ்ணமூர்த்தி

மனிதன் என்றுமே தனிமையில்தான் வாழ்கிறான். அந்தத் தனிமையைப் போக்கத் தான் அவர் திருமணம் செய்துகொள்கிறான். அந்தத் தனிமை எனக்கில்லை. ஆகவே எனக்குத் திருமணம் தேவையில்லை.

“உண்மையைத்தெரிந்து கொள்ள நிச்சயமாக ஒரு வழி உண்டு. அந்த வழியை மனிதன் தானாகவே சுய முயற்சியினால் கண்டுபிடிக்க வேண்டும். அதற்குள் கடவுளோ, குருவோ, ஞானியோ, மதமே தேவையில்லை.

“உனக்குத் துணை நீ தான்; மற்றவர்கள் அல்ல. மற்றவர்கள் உனக்குத் துணை புரிவார்கள் என்ற எண்ண வளையத்திலிருந்து நீ வெளியே வந்தால்தான் உன்னால் முன்னேற முடியும். உன் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதைத்தான் நீ கேட்க வேண்டும். மதகுருக்கள், மடாதிபதிகள் போன்றவர்களால் உனக்கு உதவி புரிய முடியாது.

உண்மை என்பது உனக்குள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க உன்னால்தான் முடியும்.

கல்வி என்றால் புத்தகப் புழுவாக இருந்து பெறுவது அல்ல. அறிவை நோக்கிப் பயணம் செய்வதுதான் உண்மையான கல்வி.

அன்னிபெசண்ட் அம்மையார் எவ்வளவு முயற்சிகளை எடுத்துக் கொண்ட போதிலும் உலகப்புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களான ஆக்ஸ் போர்டு கேம்பிரிட்ஜ், லண்டன் எல்லா இடங்களிலுமே நுழைவுப் பரிட்சைகளில் வெற்றி பெறமுடியவில்லை.

பின்னாளில் உலகப் புகழ் பெற்ற கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் ஒரு மூலையில் சாதாரண நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த தன் தந்தை நாராயணய்யாவைக் காண வந்தார். அவர் மகனைத் திரும்பிப் பார்க்கவில்லை.

எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏற்றத் தாழ்வுகள் இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1992

தன்னம்பிக்கையின் தாய்
உங்களைப் பற்றிய விமர்சனங்களைச் சமாளிக்க எட்டு வழிகள்
கருத்தும் வாழ்வும்
வெற்றிதரும் இலட்சியங்கள்
இளைஞர்கள் எழுச்சியும் தன்னம்பிக்கையும் பெறவும்