Home » Articles » உனக்குள் ஒரு இன்பம்

 
உனக்குள் ஒரு இன்பம்


ராஜ்கவி
Author:

மலைக்குத் தெரியுமா?
‘சிற்பங்கள்’
தனக்குள்
மலிந்து கிடப்பது

வைரமாவோமென்று
மரங்களுக்குத் தெரியுமா?

‘ஆற்றல்கள்’
இப்படித்தான்
உனக்குள்
அடங்கிக் கிடக்கின்றன.

ஒரு –
உன்னத வாழ்வின்
‘உதயம்’
உனக்குள்ளேயே
உறங்கிவிடுவதா?

செயல்களில் மட்டுமே
நம் முகவரிகள் பேசப்படும்

பேச்சுக்கள் –
நினைவுகள்
காற்றோடு
மனத்தோடு
கரையும் இரசாயன
மாற்றம் உடையவை

முயற்சிகளே
செயல்களே
எந்த மாற்றமும்
அடையாத அற்புத வடிவம்

நீ
நெருப்பு
உனக்கு
நீயே போர்த்துக் கொண்ட
சாம்பல் போர்வையை
உன் முயற்சிக்காற்றில்
ஊதிவிடு
மூண்டு
நெருப்பில்
உன் சோம்பல்கலாகும்

பிறகு
யாருக்கும் தெரியும்
ஒரு –
‘இமயம்’
உனக்குள்
ஒளிர்ந்திருந்த –
‘வரலாறு’

ஆர். ராஜ்கவி எம்.ஏ.எம்.பில்
வெள்ளக்கோவில்


Share
 

1 Comment

  1. ilanko Ponnambalam says:

    அற்புதம்

Post a Comment


 

 


March 1992

குட்டிக்குரங்கின் வேண்டுகோள்
உனக்குள் ஒரு இன்பம்
வெற்றிதரும் இலட்சியங்கள்
விடுதலை
உங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள்
வியர்வையை நம்பு
வாரத்திற்கு எட்டு நாள்