Home » Articles » விடுதலை

 
விடுதலை


ஆனந்தி இரா
Author:

எதனின்று ?
எவற்றினின்று?
எப்போது? எவரிடது?
கேள்.

விடுதலை உண்டா?
உண்டு.
உன்னிலிருந்தே!
செல்.

அறிவு, ஆர்ம், சிந்தை
சொல், செயல்
அறி

கேட்பதைக் கொடு
வேண்டுமாயின் எடு
பகிர்தல் சுகம் வளர்க்கும்.
வளர்.

காண் – ஆவல் பொங்க.
பேசு இயலுமட்டும்.
கேள் வேண்டியவரை.
உணர் உணர்தலோடு.

வெற்றிடம் நிரப்ப
சுமை ஏற்று.
வலி நீங்க பாரம்குறை.

எட்டுதிக்கும்
தேடு – செய்திகளை!
கொணர்ந்திடு
புதியனவற்றை!

நேரம்புரிபட
கை கொடு.
ஸநேகமோடு உரையாடு
வாசி – மனிதனை
வாசம் செய் மனதோடு
சென்று சேர் ஒன்றும் வழியில்!

வெற்றிகொள்
உன்னை!

சிறப்பது சிறக்கும்
காலம் மெல்லச் சிரிக்கும்.

– இ. ஆனந்தி
139, ஸ்ரீ ரெங்கபாளையம்
இராஜபாளையம் – 626117


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1992

குட்டிக்குரங்கின் வேண்டுகோள்
உனக்குள் ஒரு இன்பம்
வெற்றிதரும் இலட்சியங்கள்
விடுதலை
உங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள்
வியர்வையை நம்பு
வாரத்திற்கு எட்டு நாள்