Home » Cover Story » வாரத்திற்கு எட்டு நாள்

 
வாரத்திற்கு எட்டு நாள்


செயந்தி இரா
Author:

வாரத்திற்கு எட்டு நாள்

இந்தத் தலைப்பைப் படித்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் கனடாவில் – மற்றும் வளர்ந்த நாடுகளில் இந்த அதிசயம் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கனடாவில் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவர்களில் பெரும்பாலோர் இவ்வாறு எட்டு நாட்கள் உழைக்கிறார்கள். எப்படி என்று பாருங்கள். உதாரணத்திறகு ஒரு நடைமுறை நிகழ்ச்சியையே கொடுக்கிறேன்.

கனடாவில் இலவசப் படிப்பு கிடையாது. பணம் கட்டித்தான் படிக்க வேண்டும். அதுவும் ஒரே படிப்பாக இருந்தால் கூட சொந்த நாட்டில் பிறந்தவர்கட்கு ஒரு பருவத்திற்கு 500 டாலர் என்றால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு அதே படிப்பிற்கு 725 டாலர் என்று இருக்கும். குறைந்தது 25% அதிகமாக இருக்கும்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து வருகின்ற மாணவர்கள் நிதி உதவி இல்லாமல், எப்படியாவது சிரமப்பட்டுப் படித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் வந்துள்ள மாணவர்கள் தங்களின் ஒவ்வொரு நாளையும் இப்படித்தான் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அங்கு உணவு இடைவேளை எல்லாம 1/2 மணிக்குமேல் இருக்காது நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு அடுத்த வேலைக்குச் சென்று விடுவார்கள்.

ஒரு மாணவர் மாலை 4 மணிக்குப் பிறகு 4 1/2 – 8 1/2 வரை ஏதோ ஒரு வேலையை எடுத்துக் கொள்வார் – மீண்டும் 9-12 வரை ஒரு வேலையை எடுத்துக்கொள்வார். இப்படி வாரத்தில் 4 அல்லது 5 நாள் சிலர் 5 நாட்களுக்குக்கூட வேலை செய்வார்கள். இப்படிச் செய்வதால் தினம் குறைந்தது 7 மணி நேரம் கூடுதலாக வேலை செய்வார்கள்.

அந் நாட்டுக் கணக்குப் படி தினம் 10-12 நேரம் இயல்பான வேலை இருக்கும். நம் நாட்டு மாணவர்கள் மட்டுமின்றி பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற பெரும்பான்மையான மாணவர்கள் 16 மணி முதல் 18 – மணி நேரம் வரை உழைக்கிறார்கள். சராசரியாக தினம் குறைந்தது 5 மணி நேரம் கூடுதலாக வேலை செய்து 5 நாட்களிலும் 80 மணி நேரம் அதாவது 7 வது நாளுக்கு 15 மணி நேரமும் 8 வது நாளுக்கு 15 மணி நேரமும் ஆகக் கடினமாக உழைக்கிறார்கள். எந்தப் பகுதி நேர (Part – Time) வேலையும் கூட 30 மணிநேரத்திற்கு குறைவாக இருப்பதில்லை. உலகின் மிகச் சிறந்த தலைவர்களில் பெரும்பாலோர் ஒரு மணி நேரத்திற்கு 3-4 டாலர் என்ற கணக்கில் வேலை செய்துதான் தம் வாழ்வைத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் அவர்கள் வாரத்தில் 8 – நாள் ஊதியம் பெறுகிறார்கள். 8 – நாள் வேலை செய்கிறார்கள். 8 நாள் ஊதியம் பெறுகிறார்கள். படிப்பு போக சராசரி ஒரு நாளை 5 மணி நேரம் என்றால் கூட 8 நாட்களுக்கு 32 மணி நேர உழைபில் அவர்கள் சம்பாதித்தது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1992

குட்டிக்குரங்கின் வேண்டுகோள்
உனக்குள் ஒரு இன்பம்
வெற்றிதரும் இலட்சியங்கள்
விடுதலை
உங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள்
வியர்வையை நம்பு
வாரத்திற்கு எட்டு நாள்