Home » Articles » இன்று உனது நிகழை விரும்பு

 
இன்று உனது நிகழை விரும்பு


ஆனந்தி இரா
Author:

கனவுகளின் விதைகளை
காலத்தே பயிர் செய்க
காரியங்கள் –
பருவத்தே விளைந்து
அமோகப்படுத்தும்
உன்னை, உலகை!

விரக்தி, வெறுமை
வெற்றுப் பேச்சு விடு
முயற்சி, உழைப்பு
வெற்றிப்படி – அடி வை

அயர்ச்சி என்பதை
அந்நியப்படித்து
ஏற்றம் உண்டென்பதை
உறுதிப்படுத்து

தோள் தட்டலில்
கோளம் சுற்றும்
விரல் அசைவில்
வேகம் பிறக்கும்

வாழ்க்கை சிறிது
வாழ்ந்து காட்டு
வளமை எங்கும்
வசப்படுத்து

இமை மூடல்களின் பணியில்
காலம் கடுகிச் செல்லும்
திரும்பிப் பார்த்தல்
நாளயை எதிர்கொள்ளல்
முறையில்லை இங்கு
ஆம்!

நிரந்தரம் என்பது
நிச்சயிமில்லை
இன்று உனது
நிகழை விரும்பு

இரா. ஆனந்தி
இராஜாபாளையம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1992

காத்திரு தோழா….
இன்று உனது நிகழை விரும்பு
இன்றைய தமிழகமும் இந்தியாவும் ஒரு கண்ணோட்டம்
உயர்வின் ஊர்வலம்
வெற்றி தரும் இலட்சியங்கள்
நடை பழகும் ஒரு குழந்தை
சிந்தனைத்துளி
காத்திரு தோழா….