Home » Articles » உயர்வின் ஊர்வலம்

 
உயர்வின் ஊர்வலம்


ராஜ்கவி
Author:

எண்ணக் கோட்டைகள்
உண்ணக் கனி தராது
நீ…
இன்று சுமக்கும்
‘உழைப்பு மூட்டைகள்’
நாளை உன்னையே சுமக்கவரும்

நீ
நிலத்திலிருந்தாலும்
‘மனம்’
வானம் வரையிலாவது
வாசம் செய்யட்டும்
அதனால்
உன் வீட்டின்
‘ஓலைக் கூரையாவது
ஓட்டுக் கூரையாகும்.

நீ
இதயத்தை மட்டும்
இழக்காதிருந்தால்
நீ இழந்தவைகள்
ஒரு நாள்
உன்னைத்தேடும்

முடியும் என்பது
முயற்சியின் வேதம்
தன்னால் நடக்கும்
தற்குரியின் வாதம்

அயர்வுகளை
நீ
அஸ்தமிக்கச் செய்
உயர்வுகள் உன்னை நோக்கி
ஊர்வலமே நடத்தும்

கவிஞர் ஆர். ராஜ்கவி
எம்.ஏ., எம்.பில்.
வெள்ளாங்கோவில்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1992

காத்திரு தோழா….
இன்று உனது நிகழை விரும்பு
இன்றைய தமிழகமும் இந்தியாவும் ஒரு கண்ணோட்டம்
உயர்வின் ஊர்வலம்
வெற்றி தரும் இலட்சியங்கள்
நடை பழகும் ஒரு குழந்தை
சிந்தனைத்துளி
காத்திரு தோழா….