Home » Editorial » ஊரிலிருந்து உலகம் வரை

 
ஊரிலிருந்து உலகம் வரை


admin
Author:

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலானராகத் தேர்ந்தெடுக்கப்பட்டடுள்ள பெட்ரோஸ்காலி அவர்கட்குத் தன்னம்பிக்கை சார்பாக வாழ்த்துக் கூறுகிறோம்.

1945 ஆம் ஆண்டு ஐ.நா. சபை தோற்றுவித்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சைனா ஆகிய நாடுகளுக்கு எதையும் எதையும் ஒத்து செய்யும் அதிகாரம் ( Veto Power ) வழங்கப்பட்டது. அப்பொழுது 50 நாடுகளே ஐ.நா. சபை சபையில் உறுப்பு நாடுகளாக இருந்தன.

இன்று ஐ.நா. சபைகளில் 166 நாடுகள் உறுப்புநாடுகளாக உள்ளன. இன்னும் 45 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களாட்சி முறைக்கு எதிரான சர்வாதிகாரம் போன்ற ‘ ரத்து அதிகாரத்தை ‘ வைத்துக்கொண்டு இருப்பது பொருந்தாத செயலாகும். உலகின் உயர்ந்த சபையாகி ஐ.நா. சபையாகி ஐ.நா.சபை – உலகுக்கு வழி காட்டியாகவும் முன்னுதாரணமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலாளர் – இந்தரத்து அதிகாரத்தை நீக்குவதிற்கான வழி வகைகளைக் கண்டு உலகில் அறநெறியினைக் காக்கவேண்டும் என தன்னம்பிக்கை ஆசிரியர் குழு கருத்து தெரிவிக்கின்றது.

இந்தியா அளவில் முன்னுரிமை கொடுத்தும் செயல்படவேண்டிய ‘ நதிகள் இணைப்புக் ‘ கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

நடுவன் அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி நாட்டு நலனுக்கு உகந்து நடவடிக்கைகளில் உடனே இறங்கிச் செயல்படவேண்டும் என்ற கருத்தினை தன்னம்பிக்கை ஆசிரியர் குழு வற்புறுத்துகின்றது.

கட்சி என்றும், அரசு என்றும் பாராமல் தமிழகத்தில் அரசு கட்டிலில் இருக்கின்ற பொதுமக்கள் வரவேற்பு, வானவேடிக்கை, ஊர்வலம், பவனி, தோரணங்கள் சுவரொட்டிகள் என்று வீண்செலவுகளுக்கு – ஆடம்பரச் செலவுகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு நாட்டின் பொருளதார வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கபூர்வமான செயலில் இறங்க ஆசிரியர் குழு கருத்து தெரிவிக்கின்றது.

நாட்டு மக்கள் வாய் மூடி மெளனிகளாக இல்லாமல் அநீதியை தட்டிக் கேட்கும் உரம் பெற்றவர்களாக – நல்ல செயல்களுக்கு ஒன்று சேரும் தரம்வாய்ந்தவார்களாகத் தங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் தன்னம்பிக்கை வற்புறுத்துகிறது.

நாம் ஆயிரம் கற்றுக்கொண்டே போவதைவிட, கற்றவற்றில் ஒன்றையாவது கடைபிடிப்போம்.

– ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1991

விரல்கள் அல்ல வேர்கள்!
ஊரிலிருந்து உலகம் வரை
சுமை.. சுமை.. சுமை
இரும்பைத் தங்கமாக்கும் கல் !
தன்னொழுக்கம் இல்லாத தலைவர்களால் நாடு சீர்குலையும்
உங்களைப் பிறர் விரும்ப வேண்டுமானால். . .
சுமைகளே சுகங்கள் !
புற்று நோயைப் பற்றி சில உண்மைகள்
சிந்தனைத் துளிகள்
மன உறுதி பெற பயிற்சி…