Home » Articles » இரும்பைத் தங்கமாக்கும் கல் !

 
இரும்பைத் தங்கமாக்கும் கல் !


பி. ஸ்ரீ
Author:

– தாகூர்

உடம்பு இளைத்துத் துரும் பாகிவிட்டது. தலைரோமம் சடையாகி விட்டது. வாய்மூடி மௌனமாகவே இருக்கிறது மின்மினி போல மிளிரும் கண்களுடன் பைத்தியக்காரன் தேடிக்கொண்டே போகிறான். எதைத் தேடுகிறான்? ஏன் தேடுகிறான்? இரும்பைப் பொன்னாக்கும் கல்லைத் தேடுகிறான்.

கடற்கரையில் தேடுகிறான். எதிரே முடிவற்ற கடல் ஓலமிடுகிறது; ஓலமிட்டும் கொண்டே இருக்கிறது. அலைகள் தங்கள் பாசையில் என்னவோ பேசுகின்றன தொணதொணவென்று அவை சிரிக்கவும் செய்கின்றன.

அவை என்ன பேசுகின்றன; ஏன் சிரிக்கின்றன? தாங்கள் சேமித்து வைத்திருக்கும் இரத்தினங்களைப்பற்றிப் பேசுகின்றனவாம் அந்த பாசை மக்களுக்குப் புரியவில்லை, அந்த இரகசியம் பரசியமாகி விடவில்லை. என்னே மதியீனம்! என்றுதான் அலைகள் பரிகாசச் சிரிப்புச் சிரிக்கின்றனவாம்.

புத்திசாலியான மக்களுக்கே புரியவில்லையே – பைத்தியக் காரனுக்கு எப்படிப் புரியும்? எனினும் தேடுவதை விட்டு வைக்கவோ நிறுத்தி வைக்கவோ மனமில்லாமல் தேடுகிறான். தேவையை உயிராசையாக்கிக் கொண்டுவிட்டான். தனியே கடற்கரையில் தான் காணாத கல்லைந் தேடித் திரிகிறான் அந்தப் பித்தன்.

இதற்கு இரண்டு உபமானங்கள் காட்டுகிறார் கவிஞர் ‘ அடையமுடியாததை எட்டிப் பிடிக்கலாமா என்று கடலலை கொந்தளிக்கிறதாம். கிட்டாத குறிக்கோளை வைத்துக்கொண்டு வானச்சுடர்கள் சுழன்று கொண்டிருக்கின்றவனவாம். இந்த இரண்டு உவமைகளுடன் அந்தப் பித்தன் ஸ்பரிச வேதியை நீண்ட கடற்கரையில் தேடித் தவிப்பைக் காட்டுகிறார் கவிஞர்.

தான் விரும்பிய கல்லை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லையே என்றுதான் மேலும் மேலும் தேடிக்கொண்ருக்கிறான் பைத்தியக்காரன். ஒரு நாள் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் எதிரே வந்து நின்று, இடுப்பில், தங்கச் சங்கிலி அணிந்திருக்கிறீரே, அது எங்கே ஐயா கிடைத்தது உமக்கு? என்று கேட்கிறான். பைத்தியக்காரன், இந்த மாடு மேய்க்கும் பிள்ளை ஏன் அப்படிச் சொல்லுகிறான்?

‘ நான் இடுப்பில் வைத்திருந்தது இரும்புச் சங்கலிதானே’ என்ற நினைப்புடன் இப்போது ஒரே ஆச்சரியமாகிவிட்டது. ஆம்; இரும்பு தங்கமாக மாறியிருக்கிறது. எப்போது என் மாறியது? – எதனால்? இப்படித் தங்கமாக்கிய அந்த ஸ்பரிச வேதிக்கல் எங்கே? எங்கே கண்டேன்? ஐயோ? எங்கோ எறிந்து விட்டேனே’ – என்று அவன் தலையில் அடித்து கொண்டான்.

உண்மையில் கற்களைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்து எடுத்துச் சோதித்துப் பார்ப்பதற்தான் இடுப்பில் அந்த இரும்புச் சங்கலியை வைத்துக் கொண்டிருந்தான் தான் எடுத்த ஒவ்வொரு கல்லையும் கொண்டு சங்கிலியைத் தொட்டுப் பார்ப்பான், எறிந்து விடுவான் ‘ இது ஸ்பரிச வேதிக்கல், இல்லையே; என்று, இது நெடுங்காலப் பழக்கமாகி விட்டது.

அந்தக் கல்பட்டதால், ஏதோவது மாறுதல் ஏற்பட்டதா இரும்புச் சங்கலியில் என்பதைப் பாராமலே கல்லை வீசியெறிந்து விடவும். தொடங்கி விட்டான் இப்படி எத்தனையோ நாள் நடந்து கொண்டிருக்க அதற்கிடையே ஒரு நாள் உண்மையானன் பரிசவேதிக் கல்லைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்.

இந்தக் கவிதை சிகரஜோதியாக அமைந்திருக்கும் பகுதியைத்தான் என்னென்பது? சூரியாஸ்தமான சமயம், வானம் பொன்தகடு வேய்ந்தது போல் இருக்கிறது. மறுபடியும் வழக்கம்போல் கல்லைத் தேடும் வேலையில் கவனத்தைச் செலுத்துகிறது அந்த ஸ்பரிச வேதிப்பைத்தியம்.

‘ அவன் உடல்வலி குன்றிப் போயிருந்தது; முதுகு கூனிப் போய்விட்டது. இதயம் மண்ணில் விழுந்து கிடக்க, வேர் அறும்படி வெட்டிச் சாய்க்கும் மரம்போல் ஆகிவிட்டான் – பி.ஸ்ரீ.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1991

விரல்கள் அல்ல வேர்கள்!
ஊரிலிருந்து உலகம் வரை
சுமை.. சுமை.. சுமை
இரும்பைத் தங்கமாக்கும் கல் !
தன்னொழுக்கம் இல்லாத தலைவர்களால் நாடு சீர்குலையும்
உங்களைப் பிறர் விரும்ப வேண்டுமானால். . .
சுமைகளே சுகங்கள் !
புற்று நோயைப் பற்றி சில உண்மைகள்
சிந்தனைத் துளிகள்
மன உறுதி பெற பயிற்சி…