Home » Articles » புற்று நோயைப் பற்றி சில உண்மைகள்

 
புற்று நோயைப் பற்றி சில உண்மைகள்


இராமநாதன் கோ
Author:

– டாக்டர் ஜி. இராமநாதன் எம்.டி

நமக்குப் புற்று நோய் வந்து விடுமோ, அல்லது இருக்குமோ எனப் பயப்படுபவர்களும், புற்றுநோய் வந்தால், விடுதலையே இல்லை என எண்ணுவோரும் ஏராளம். அவர்களுக்கு இக்கட்டுரை விளக்கமளிக்கும்.

புற்றுநோய் என்றால் என்ன?

நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் ( செல் ) தொடர்ந்து வளர்ந்து பெருகிக் கொண்டே இருக்கும். அச்செயலே வழக்கத்திற்கு அதிகமாகப் பன்மடங்கு வளரும்போது அதைப்புற்றுநோய் என்கிறோம். உதாரணத்திற்கு 1 மி.லி இரத்தத்தில் பத்தாயிரம் வெள்ளைணுக்கள் உள்ளன. அதுவே பல லட்சக் கணக்கில் பெருகும் போது அதை இரத்தப் புற்றுநோய் ( Blood Cancer ) ( பிளட் கான்சர் ) என்கிறோம். ஆயிரம் பேரில் சுமார் ஒன்று முதல் மூன்று பேருக்குப் புற்று நோய் வர வாய்ப்புண்டு.

புற்று நோய் வரக்காரணம் என்ன?

புற்றுநோயிற்கான தெளிவான காரணத்தை இன்னும் கண்டறியவில்லை

1.) புகைப்பிடிப்போருக்கு நுரையீரலில் புற்றுநோயும்,

2.) வெற்றிலைப் பாக்கு, புகையிலை அதிகம் உபயோகிப் போருக்கு வாயில் புற்றுநோயும்,

3.) கதிர்வீச்சுகளாலும்

4.) சில இரசாயனப் பொருள்களினாலும், புற்றநோய் வரவாய்ப்புகள் அதிகம்.

நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?

1.) நீண்ட நாட்களாக இருக்கும் கட்டி திடீரென்று பெரியதாகும்,

2.) வழக்கத்திற்கு மாறாக இரத்தம் வடிதல்,

3.) உணவு விழுங்கும்போது தடை ஏற்படுதல்,

4.) குரல் மாற்றத்துடன் கூடிய இருமல்,

5.) உடலிலுள்ள மச்சம் பெருகுதல்,

6.) நீண்ட நாள் ஆறாமல் இருக்கும் புண்,

7.) சிறுநீர், மலம் கழித்தலில் மாற்றங்கள்,

8.) உணவு உட்கொள்ளுவதில், உடல் எடையில் திடீரென குறைவு

மேற்கண்ட அறி குறிகள் பதினைந்து நாட்களுக்கு மேலிருந்தால், புற்றுநோய் இருக்குமா சந்தேகப்பட வாய்புண்டு. இப்படிச் சொல்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவருக்கு இருமலில் இரத்தம் வந்தால் அது காச நோயாகவோ, வேறு சாதாரண நோயின் அறி குறியாகவோ இருக்கலாம் மற்ற நோய்கள் இல்லாதபோது புற்றுநோயாக இருக்கலாம் மற்ற நோய்கள் இல்லாதபோது புற்றுநோயாக இருக்கலாம். ஆகவே இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்தவரை அணுகி, தேவையான பரிசோதனைகளைச் செய்து கொண்டு தெளிவு பெறுதல் நலம்.

புற்றுநோய் எப்படிப் பரவுகிறது ?

புற்றுநோய் உற்பத்தியான இடத்திலிருந்து வளர்ந்து அருகிலுள்ள உறுப்புகளைத் தாக்குகிறது. பிறகு இரத்தத்தின் மூலமாகவும், நிணநீர் மண்டலம் ( Lymphatics ) மூலமாகவும், உடலில் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. புற்றுநோய், தொற்றுவியாதியல்ல, ஒருவரைத்தொடுவதாலோ, உடனிருப்பதாலோ அது மற்றவருக்கு உண்டாகாது.

குணப்படுத்த முடியாமா?

இதற்கு மூன்று வகைச் சிகிச்சை முறைகள் உள்ளன.

1.) அறுவை சிகிச்சை

2.) கதிர் வீச்சுமுறை

3.) மருந்துகள் என்பன.

புற்றுநோய் மற்ற இடங்களுக்கு பரவாமல் ஒருகுறிப்பிட்ட எல்லையில் இருக்குமானால் ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் பூரண குணம் பெற முடியும். உடலின் பல பாகங்களுக்கும் பரவி; முற்றிய நிலையில் மருந்துகளும், மற்ற சிகிச்சைகளும் தற்காலிக் குணத்தை ( Temporary Relief ) கொடுக்கும். இந்நிலையில், நான் குணப்படுத்துறேன் என்று போலிகள் சொன்னால் அதை நம்பி ஏமாறக் கூடாது.

புற்றுநோயை நினைத்துப் பயப்படத் தேவையில்லை. நம் உடலில் ஏதேனும் மாறுதல்கள், அறிகுறிகள் தென்பட்டால் தகுத்த பரிசோதனை செய்து, அதற்கான சிகிச்சையை உடனே பெற்று, நலமான வாழ்க்கை வாழலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1991

விரல்கள் அல்ல வேர்கள்!
ஊரிலிருந்து உலகம் வரை
சுமை.. சுமை.. சுமை
இரும்பைத் தங்கமாக்கும் கல் !
தன்னொழுக்கம் இல்லாத தலைவர்களால் நாடு சீர்குலையும்
உங்களைப் பிறர் விரும்ப வேண்டுமானால். . .
சுமைகளே சுகங்கள் !
புற்று நோயைப் பற்றி சில உண்மைகள்
சிந்தனைத் துளிகள்
மன உறுதி பெற பயிற்சி…