![]() |
Author: கந்தசாமி இல.செ
Oct 1991 | Posted in Cover Story |
மன அமைதியின்மையால்
மனதை அமைதியாக வைத்திருப்பது என்பது கடினமான காரியம்தான். ஆனால் ஒருவர் தனது மனதை அமைதியாக வைத்திருப்பது மிக மிக அவசியமாகும்.
மனம் அமைதியாக இல்லாவிட்டால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது.
திடீர் திடீர் என்று கோபம் வரும் – மிக நெருங்கியவர்கள் மீது அந்தக் கோபத்தைவிட வேண்டிவரும். அதனால் அருகில் நெருக்கமாக உள்ளவர்கள் எல்லாம் பகைவர்களாக மாறுவார்கள்.
மன அமைதி இல்லாதபோது அறிவு தடுமாறும். எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. முடிவு எடுத்தாலும் தவறானதாகவே முடிந்து விடும்.
மன அமைதி இன்மையால் உறக்கம் வராது. பலர் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு உறங்குவதற்கு மன அமைதி இன்மையே காரணமாகும்.
மன அமைதி இன்மை உறக்கத்தைக் கெடுப்பதோடு உடல் நலனையும கெடுக்கும். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்த நோயும் உடம்பில் இருக்காது, ஆனால் உடல் நலமாக இருக்காது.
மன அமைதி இன்மை புகை, மது, மங்கை என்ற தவறான வழிகட்கு எல்லாம் இட்டுச் செல்லும் – பல குடும்பங்கள் அழிந்தது – அழிவது எல்லாம் – ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் மன அமைதி இன்மையே அடிப்படைக் காரணமாகும்.
மன அமைதி இல்லாதவர்கள் மனம் விட்டு சிரிக்கவும் முடியாது. எப்போதும் முகம் இருளடைந்தே இருக்கும். அதனால் மன அமைதியின் இன்றியமையாமையைப் புறக்கணிக்காமல் எச்சரிக்கையாக இருந்து அமைதியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மன அமைதி கெடக் காரணங்கள்
இரண்டு வகையில் மன அமைதி கெடுகின்றது. ஒன்று ஒருவன் தனது எண்ணங்களால், பேச்சால், செயல்பாடுகளால் மன அமைதியை இழந்து விடுதல்.
இரண்டு மற்றவர்களால், மன அமைதி இழத்தல். ஆக நம்மாலும் மற்றவர்களாலும் இந்த இரண்டு வகையாலும் மன அமைதி கெடுகின்றது.
தன் செயல்
ஒரு சிலர் தாங்கள் அறியாது, ஆராயாது, ஆசை காரணமாகச் செய்கின்ற செயல்களின் விளைவினால் மன அமைதியை இழக்கிறார்கள். இவர்கள் தங்கள்தவறுகளைப் புறக்கணித்த போதும் மனசாட்சி இடைவிடாது உறுத்திக்கொண்டே இருக்கும். அதனால் மன அமைதியை இழப்பர்.
யாரையேனும் கடுமையாகப்பேசிவிட்டு வருந்துதல்; தனக்கு இருக்கும் செல்வாக்கால் வரம்பு மீறிய செயல்களைச் செய்து விட்டு வருந்துதல், இவைகள் எல்லாம் மன அமைதியை கெடுத்து விடுகின்றன.
சிலர் வீண் செலவு செய்து விட்டு வருந்துதல், நேரத்தை வீண்டித்துவிட்டு வருந்ததல் இதுபோன்ற செயல்களால் அமைதியை இழந்து தவிப்பதும் உண்டு.
பிறரால் மன அமைதி கெடுதல்
பலர் மன அமைதியை இழப்பதற்கு அவர்களோடுதொடர்புடையவர்கள் காரணமாக இருப்பார்கள். மன உறுதி இல்லாதவர்கள் பிறரால் மன அமைதி கெடுவதே அதிகமாகும். குடும்பத்தில் இருந்தே இந்தச் சிக்கல்கள் தொடங்குகின்றன. குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை, வீட்டில் உள்ளவர்கள் சொன்னபடி கேட்கவில்லை, குடும்பத்தில் அளவிற்கு மீறிய செலவினங்கள் – இப்படி ஏதேனும் ஒரு காரணம் பெற்றோரின் மன அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
சிலர் தம் தாட்சண்யம், கருணை காரணமாகவே மன அமைதியை இழந்து விடுகிறார்கள். பாவம் என்று வேலை தெரியாதவனை ஒரு வேலைக்கு வைத்துக்கொள்ளுதல், பாவம் என்று உதவி செய்துவிட்டு அது திரும்ப வராதபோது மன அமைதியை இழத்தல் – அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்து விட்டு அதனை வசூல் செய்யாதபோது மன அமைதி இழந்து விடுதல் – ஒருவரை நம்பி மோசம் போனபோது மன அமைதியை இழத்தல் – இப்படிச் சிலர் மன அமைதியை இழந்து விடுகின்றனர்.
தொழில் செய்யும் இடத்தில் தேவையில்லாததைப் பேசி அதனால் ஏற்படும் துன்பத்தால் மன அமைதியை இழப்பவர்கள் உண்டு. அவசரப்பட்டு ஏதோ சொல்வதும் சில செயல்களைச் செய்வதாலும் விளைவு வேறாக வரும்போது மன அமைதி போய்விடுகிறது.
வீட்டில் அமைதி இல்லாதவர்களால் தொழில் செய்யும் இடத்தில் அமைதியாக இருக்க முடியாது. தொழில் செய்யும் இடத்தில் அமைதியை இழந்தவர்கள் வீட்டில் அமைதியைக் கெடுத்து விடுவார்கள். எல்லோரும் இழந்த அமைதியை மீண்டும் தேடி அலைகிறார்கள் என்பதுதான் உண்மை. அமைதி என்பது வெளியில் இல்லை. அது நம்முள்ளேதான் இருக்கிறது. அதைக் கண்டறிந்து நாம்தான் பாதுகாக்க வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும்.
காரணம் கண்டறியுங்கள்
ஒரு தாளை எடுங்கள், உங்கள் அமைதி கெட்டதற்குரிய காரணங்களை வரிசைப்படுத்துங்கள். அமைதியாக இருந்த நாட்களை எண்ணிப் பாருங்கள். அதற்குப் பிறகு எப்போதிலிருந்து, எப்படி அமைதி கெட்டது என்பதற்குரிய காரணங்களை கண்டறியுங்கள். வரிசைப்படுத்துங்கள்.
1. யாரேனும் உங்களைப்பற்றித் தவறாகப் பேசியதால் நீங்கள் அமைதியை இழந்திருக்கலாம்.
2. நீங்கள் வாங்கிய கடனைத்திரும்பக் கேட்டபோது உங்கள் அமைதிக்குப் பாதிப்பு நேர்ந்திருக்கலாம்.
3. நடக்க வேண்டிய காரியங்கள் சரியாக, சீராக நடக்கவில்லையானாலும் நீங்கள் நினைத்தக் காரியம் நினைத்தபடி நடக்கவில்லையானாலும் அமைதி இழக்கும் நிலை ஏற்படும்.
4.. நீங்கள் அன்பு செலுத்தியவர்கள் உங்களைப் புறக்கணித்த போது அமைதியை இழந்திருக்கலாம்.
5. ஒரு பொருளை வாங்க எண்ணி முடியாதபோது, ஒரு பதவியை அடைய முயற்சித்துத் தோல்வி அடைந்தபோது அமைதியை இழந்திருக்கலாம்.
6. உங்கள் குழந்தைகள் தவறான பழக்கத்தற்கு அடிமையாகி விட்டமை அறிந்தபோது அமைதியை இழந்திருக்கலாம்.
7. அநியாயமாகச் செயல்கள் நடைபெறுகின்றபோதும், அதனால் தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கப்பட்ட போதும் அமைதியை இழந்து இருக்கலாம்.
8. உடல் நலக்குறைவு, தீராத நோய், உடல் ஊனம் போன்றவைகளும் மன அமைதியைக் குலைத்து விடும்.
9. காதல் தோல்வி – இது போன்ற உள்ளார்ந்த செயல்பாடுகளால் அமைதியை இழக்க நேரிடலாம்.
10. நாட்டின் நிலையை நினைத்து சிலர் அமைதியை இழப்பதும் உண்டு.
இத்தகைய இவை போன்ற பல காரணங்களால் நம் மன அமைதிக்கு பாதிப்பு நேர்வதுண்டு எதனால் என்று கண்டறிந்து அதை நீக்க முயற்சிக்க வேண்டும். அதுவே மன அமைதியை மீண்டும் பெறுவதற்குரிய சிறந்த வழியாகும்.
அமைதியை வளர்த்துக் கொள்ள சில விதி முறைகள்.
1. நல்ல பழக்க வழக்கங்கள்.
முறையான பழக்க வழக்கங்கள் அமைதியை நல்கும். நமது முறையான பழக்க, வழக்கங்களே – அதிகாலையில் எழுதல், குளித்துவிட்டுப் பணிகளுக்குச் செல்லல் போன்ற சிறு சிறு செயல்கள்தாம் நம் குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்கு நிரந்தர பாடமாக அமைகின்றன.
தநதை தாம் புகை பிடிப்பதை அங்கீகரித்துக் கொள்கிறார். தன் மகன் புகை பிடிக்கும்போது மன அமைதியை இழந்து விடுகின்றார். காரணம் மகனைத் திருத்தும் தகுதியை அவர் இழந்துவிடுகிறார்.
2. நேர்மையாக நடந்துகொள்ளுதல்
முடிவதை முடியும் என்றும் முடியாத்தை மறுத்துவிடுதலும் அப்போதைக்குச் சிரமாக இருந்தாலும் நாளடைவில் மன அமைதி கிட்டும். இல்லாவிடின் மன அமைதி கெட்டுவிடும். முறை தவறி, தாட்சண்யம் கருதிச் செய்வதால் பலர் துன்பத்திற்கு ஆளாகி மன அமைதியை இழந்து விடுகின்றனர்.
நல்ல நண்பர்கள் சேர்க்கை
நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும் பேறாகும். நல்ல நண்பர்கள் இருக்கும்போது தீய சிந்தனைக்கோ, தீய பேச்சுக்களுக்கோ இடமில்லை. தீமையில்லாதபோது அமைதி நிலைபெறுகிறது. நல்ல நூல்களும் மன அமைதிக்கு வழி வகுக்கிறது.
மன்னிக்கும் மனப்பான்மை
பிறர் செய்யும் சில குறைகளை – பொறுத்துக் கொள்ளவும் – சில குறைகளை மன்னிக்கவும் – சிலவற்றை முழுமையாக மறந்து விடவும் கற்றுக் கொள்வதால் பலரது அமைதி பாதுகாக்கப்படுகிறது.
தியானம்
தியானப் பயிற்சியால் மனம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி காக்கப்படுகிறது; தியானப் பயிற்சி – முறையாக – நீண்ட நாள் – தொடர்ந்து செய்தால் அன்றிப் பயன் நல்காது. ஈடுபாடு இல்லாத தியானத்தாலும் பயனில்லை.
இறையருள்
சில வகையான துன்பங்கள் – விரைவில் தீர்க்கமுடியாத – ஊனங்கள் அவமானங்கள் – மன அமைதியைக் கெடுத்து விடுவதுண்டு. அத்தகைய சூழலில் இறையருளை எண்ணி நமது கடமையைச் செவ்வனே ஆற்றுவதே மன அமைதிக்குச் சிறந்த வழியாகும். அறிவுக்கும் அப்பாற்பட்டு – காரணம் காணவே முடியாத சில துன்பங்களுக்கு இறையருள்தான் வழிகாட்ட வேண்டும். அந்த நம்பிகையோடு செயல்படுவதுதான் மன அமைதிக்கு சிறந்த வழியாகும்.
ஈடு செய்தல்
நாம் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்து இருப்போம். அதற்குப் பிராயச்சித்தமாக – அதற்கு ஈடுசெய்யும் வகையில் – இசல நன்மைகளைச் செய்யும்போது நமக்கு மன அமைதி ஏற்படுகின்றது.
இது ஒரு வகை. மற்றொரு வகை நாம் செய்யாத ஒரு தவறுக்காக தண்டனை ஏற்க வேண்டிவரும். அப்போது, நமக்கு இப்போது ஏற்பட்டுள்ள துன்பம் ஏற்கனவே செய்த தவறுக்கு உரியது என்று சமநிலைப்படுத்திக்கொண்டால் அமைதியை இழக்க நேரிடாது.
மன அமைதியும் மன உறுதியும்
மன அமைதியும் மன உறுதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனதை அமைதியாக வைத்திருப்பவர்கள் எந்தக் காரியத்திலும் மன உறுதியுடன் இருப்பார்கள். அதேபோல் மன உறுதியுடன் இருப்பர்கள் ஒருபோதும் மன அமைதியை இழக்கமாட்டார்கள்.
மாறாக ஒன்றை இழந்தால் மற்றொன்றையும் இழந்துவிட நேரிடும், ஆகவே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக விளங்கும் இரண்டையும் ஒரு சேரப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
இந்த இரண்டு தன்மைகளையும் பாதுகாக்கவும் வளர்த்துக்கொள்ளவும் எவ்வித முதலீடு தேவை இல்லை. பொருட் செலவும் செய்ய வேண்டுவதில்லை. உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விடுத்து அறிவு பூர்வமாகச் சிந்தித்து நம்மை நாமே சரிசெய்துகொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.
சிலரைப் பாருங்கள். எப்போதும் சிரித்த முகத்துடனேயே செயலாற்றுவார்கள். அவர்களுக்கு நம்மைக் காட்டிலும் அதிகமாப் பொருளாதாரப் பிரச்னைகள், தீர்க்கமுடியாத குடும்ப பிரச்சினைகள். பல்வேறு வெளி விவகாரங்கள் என்று பல இருக்கும்.
அவற்றை அவர்கள் அணுகும் முறை – அவற்றைக் கையாளும்முறை – அவற்றைச் சீரணிக்கும் முறை – அவற்றை ஏற்றுக்கொள்ளும் முறை இவற்றை உற்றுக் கவனித்தால் – உண்மை விளங்கும். நாம் எந்த அளவுக்கு – இந்த அணுகு முறைகளில் குறைபாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பது விளங்கும்.
(இல.செ.க.)

October 1991




155 Comments
very good it is very useful
super. iam follow the things
sir u r great
வெரி குட் இட் இஸ் வெரி உசெபிஉல்
உங்கள் கருத்துகள் நல்லது
sir urs commed is all tamil peopel person very use full advice
thaks
Warm & Regards
Viswanathan.P
Sir, i am follow the things.thaks
தங்க யு சார்
உண்மாயில் இந்த கருத்து மிகவும் நல்ல இருக்கு , நான் மிகவும் மன உளைச்சலில் இருக்றேன் . முடிந்தால் எனக்கு உதவி புரியவும் . என் செல் நம்பர் 9003614113
Sir,It’s really very nice.thanks for posting this useful topic.like me it will be very useful for todays youngesters.
படிக்கும் போதே மன அமைதி ஏற்படுகிறது.
Nallathoru vazhikaatti
nandri iya
Thanks
Kala
Ungal en manathai amaithi padithiullathu Thangalukku en manamarntha Nanri
ஐயா நான் மிகும் துயரத்தில் இருக்றேன். என் மனம் அமைதி பெற வலி கூறுங்கள்.
வெரி குட் ரேஅல்லி கிரேட்
very good it is very useful thanks sir
very nice the life story
ungal karuththu nan valimozhikiren
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க நன்றி…….
super sir thank u
sir thank u about ur words , i will be distrubed in so many problems like in my home and office and my atmosphere also
மிக மிக பயனுள்ளதாக இருந்தது. படிக்கும் போதே மன அமைதி ஏற்படுகிறது மிக்க நன்றி……. மிக்க நன்றி…….
நல்ல தகவல்
very nice sir
மிக நன்று
உண்மாயில் இந்த கருத்து மிகவும் நல்ல இருக்கு , நான் மிகவும் மன உளைச்சலில் இருக்றேன் . முடிந்தால் எனக்கு உதவி புரியவும்
வெரி குட் ஐடியா சூப்பர் ஐடியா யாம் இம்ப்ரெஸ் போர் தி pages
is very usful in maind
thondu saivathil ippadium ouru vitham
சூப்பர் சார் எனக்கு நோய்களை பற்றி பயம் இருந்ததது ஆனால் இ தனால தூக்கம் வரலை இதை பார்த்து தெரிஞ்சுக்கிறேன்
thank you so much……………………….
Sir,It’s really very nice.
thanks for posting this useful topic.
thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks
தேங்க்ஸ்………………………………………………………………………………………
very good and very useful for me
டியர் சார்,
திஸ் மெசேஜ் வெரி வெரி சூப்பர் சார்,
செல்வகுமார்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
இட்’ச வெரி நிசே சார்.. i அம் ரேஅல்லி லவ் திஸ் சுப்ஜெக்ட் தங்க உ சோ மச் sir
சூப்பர் சார்
நன்றி
வணக்கம் மேடம்,
நான் ஈரோடு நகரத்தை சேர்ந்தவள் ,
நான் காதல் திருமணம் செய்து கொண்டவள், நான் 3 வருடங்கள் நன்றாக இருந்தேன் ஆனனல் இப்போது இல்லை, எல்லா பெண்களை போல எனக்கும் வரதட்சணை கொடுமை தான், தினமும் வீட்டில் கொடுமை தான் நடக்கிறது அதனால்தான் என் மன அமைதி கேட்டு விட்டது, ஆனனல் இப்பொது உங்கள் கரத்தை படித்த பிறகு மன அமைதி எப்படி வைத்து கொள்வது என்று தெரிந்த கொண்டேன், மிக மிக நன்றி தேங்க்ஸ் டு உ
மன அமைதிகான இன்னும் பல கருத்துகளை எதிர் பார்க்கிறேன்…இந்த கருத்துகளுக்கு நன்றி….
thanks for giving tips
THANK YOU SIR
வி ஹவே சென்ட் திஇஸ் மெசேஜ் மி ஆல் பிரீண்டே டு ஷேர்
அன்பான வாசகர்களே
மிக நன்றாக உங்கள் கருத்துக்களை கூறியுள்ளிர்கள். மன அமைதி பற்றிய இக்கட்டுரையை கொடுத்த பேராசிரியர் இல.செ.கந்தசாமி இன்ன்று நம்மிடையே இல்லை. நான் இவரிடம் முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவன். அவரின் எழுத்துக்கள் சாகா வரம் பெற்று iruppathu கண்டு மிக மகிழ்ச்சி
பேராசிரியர் சங்கரநாராயணன்
ஆப்ரிக்கா
கருத்துகள் அழகாகவும் தெழிவாகவும் இருக்கிறது
நன்றாக உள்ளது, எனக்கு தேவையானதுதான்
மிக்க நன்றி!!
very nice
மிகவும் நன்றாக உள்ளது.உங்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பனி தொடரட்டும். உங்களை போன்றவர்கள் நல்ல கருத்துகளை சொல்வதால் மன அமைதியை இழந்த நாங்கள் மன அமைதி அடைகிறோம். கோடானு கோடி நன்றி.
இட்ஸ் வெரி உஸ் புல் அட்வைஸ் தந்க்யௌ
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
ஒரு சிலர் தாங்கள் அறியாது, ஆராயாது, ஆசை காரணமாகச் செய்கின்ற செயல்களின் விளைவினால் மன அமைதியை இழக்கிறார்கள். இவர்கள் தங்கள்தவறுகளைப் புறக்கணித்த போதும் மனசாட்சி இடைவிடாது உறுத்திக்கொண்டே இருக்கும். அதனால் மன அமைதியை இழப்பர்.கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு ஆனா இப்ப அப்படி இல்லை ரொம்ப தேங்க்ஸ் நா முதோ காமன் ஆசை இருந்து நா ரொம்ப கை அடிசு மனசு கஷ்டமா இருந்துஷு ஆனா இப்ப அது இல்லை
மிக மிக பயனுள்ளதாக இருந்தது. படிக்கும் போதே மன அமைதி ஏற்படுகிறது மிக்க நன்றி…….
Very good and Useful for me and others.
thank u sir,
thanks
நீங்கள் அளித்த தகவல் மிக சிறப்பாக இருந்தது.நன்றி.
THANK YOU VERY MUCH SIR
மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. மிகவும் நன்றி ஐயா
thanks
nan ellarukkum uthavi pannaphoyi nan ippa kadankaranaga erukkiren nan ithulerunthu vidupadunum sir enakku oru vazhi sollunga sir pls my cell 9092901050
Nanri
super sir
very nice tips
thanks sir iam verry happy
மிகவும் நயமான வார்த்தைகளால் வழங்கப்பட்ட தங்களின் தொகுப்பு மிகவும் அருமை. மனதிற்கு மிகவும் இதமான அமைகின்றது. பலர் கூறியுள்ளது போது நிலைப்பாடின்றி இருந்த மனநிலையுடன் தங்களின் தொகுப்பை படித்த போது மனதை வருடுகிறது.. மிக்க நன்றி…
megavum nandru
Nalla varthaigal very thanks
Thank you so much sir..it is very useful for me..
ஐயா மிக மிக ரொம்ப நன்றி!
இன்று முதல் நான் என்னுடைய கஷ்டங்களை ஏற்று கொண்டு சந்தோஷமாக இருப்பேன்!……
SUPER SIR.NA EN LIFELA NIRAYA NIMATHIYA ELATUTTA.ETHA PIDISA PERAKU ENNAKULLA ORU NAMBEKA VANTHURUSU.THANKS
very good message
மிக மிக பயனுள்ளதாக இருந்தது. படிக்கும் போதே மன அமைதி ஏற்படுகிறது மிக்க நன்றி…….
very good
AAHA ENNA ORU MANA AMAITHI
Mana amaithi,mana uruthi irandum irunthal, valvil ethakaiya thunbathaium vellalam, entra vilipunarvai erpadithiyamaiku mikka nanri
கட்டாயம் இதனை பின்பற்றினால் வாழ்க்கை ஜொலிக்கும் ok….மிக்க நன்றி…
Nice
Sir Epa Nan Romba kastathula erukan enaku mana amathi vanam pl uagalal Help Painna mudiyouma
sir very good,and thanking you,its very beautiful words and again thank u
Thanku sir its usefull message
you are very great sir,Thank you for your information.
Really nice ….
Realy super, expecting more more letters from you sir, thanks a lot, I don’t have mana amaithy, after reading your message, I will change 100%. Usefull message for all peoples. any book available sir, same topic, If yes, kindly send reply my email address.please. I am awaiting for your valuable reply. my email I.D. sudhamaqsood@yahoo.in.
Thank you!! Namacku varum pirachnaigalucku naame kaaranam endru Meendum orumurai Thanks for you
Thanks for the message
Thanku sir
good
மிகவும் நன்றாக உள்ளது
Thank you sir,
my trus is gone thank you….
REALLY super sir, Naan Karur.enakku thirumanam nadanthu 7 years .romba finanancial problem manasula nimmathi illama irunthean but itha padichathukku appuram i feel better.
THANK U SIR. ITS VERY USEFULL
realy superb
Ayya mikka nandri, realy super, thanks a lot.
மிக மிக பயனுள்ளதாக இருந்தது. படிக்கும் போதே மன அமைதி ஏற்படுகிறது மிக்க நன்றி…….
vannakkam, en manam siruvayathelinthe naramputhalarchi, udalnalakuraivu, kudumba prisanaigal, thevaiyatra sinthanaigal,thevaiyatra karpanaigal, en manam amaithi ezhandu davikkiradhu. mele kanda ungal arivuraigal amaithikana nalluraigal avatrai kadaipidithu en manam amaithy pe thannampikkai erpaduthi ulladu melum arivuraigal vazhanga panivudan kettukolkiren.
Thanking you.
k.govindasamy
very nice sir
It is really useful for me. It gave an insight to view my problems bodly
Thank you sir .I was disappointed in every stage. your message read i wil be alright
THANK YOU VERY MUCH SIR FOR YOUR CLARIFICATIONS.MY MIND AND HEART BE FREE NOW,BECAUSE OF I AM STUDIED YOUR THOUGHTS.THANKS A LOT.
Nice
Nejamave rompa nallarukkku ….
Its true thanks for this best advice
Enakku kovathai atakka mutiyala apram eppavum mugam alugura mathiri tha irukku enakke enna putikkala itha ellam enakku control pannum athuku advice pannunga
Thank u SO Much. unarchi poorvama ellama arivu poorvama erundha mana amaithi kedadhu nu sonnega sir romba correct sir thank u
vry gud it is vry useful these kind of words a man become challenging and sucessful life
மிக மிக பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி…….
sir very good,and thanking you,its very beautiful words and again thank u
THANX
I have seen your suggestion,
Thanks for you
You give more suggestion different angle to other.
sir
i got a trouble from my family members and wife at various incident and
i got a trouble from my unnecessary thinking mind.
how will i release from both ?
please help me
Nanum manasa katupadutha mudiyama thavikuren. Nanbarkaley..
Thanks sir, very useful msg,
Fact I will try
ஐயா மிகவும் நன்றி.நான் நீங்கள கூரியதை கண்டிப்பாக எனது வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்வேன்
ஐயா மிகவும் நன்றி.நான் நீங்கள கூரியதை கண்டிப்பாக எனது வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்வேன்.நான் எனது தவறுகளை உணர்ந்துவிட்டேன்.மிக்க நன்றி….
Thanks sir
super. its very useful for mind relaxation.. than
k u sir
Miga arbuthamana thagaval sir….nantri
Respected sir,
It’s true in my life, last la erunthu 5th para i like that words.
We are missing too much…
Thanks
Pradeep Tamilnadu
sir , past six montha romba manasorvodu irukiren
ennal ithaium seyya mudiya villai
pls help pannunga
hi
karanam illamal or karanam theriyal mana aamaithiyai nan sela samayangalil illanthu vedugren… enakku sela valigalai sollungal. mana amaitheikkaga.
thk u
thks
Very good writing on peace of mind. Realistic approach. Useful and easy to follow
hi sir this page very use ful…
but a doubt… i spoke english… bt i cant
then rotate of my mind only thinging love… bt i still not a lover.. so sad bt i change the definaty… thank u so much
navin
merchanding
thank you sir,i can understand my self
Thank u sir
Really it is very useful to all persons must follow it
thousands of thanks {nandri}
Super i will follow
thanks ennudaya kuraipadu therinthadhu athai neekuven.enaku manam amaithi kidaikum sure nabukiren.nandri vanakam
its very useful
sir ab very nice to me.
Very nice and useful
ketpatharku easy ya irukku but nadaimurai paduththa mudiyala … Nan enna seiyyalam sollungal pls
THANKYOU SIR TIPS IS VERY USEFULL
thank u sir and then yaraavadhu konjam harsh pesunaa manasuu udane upset aayidudhu sir appodhikku manasula bayamum yerpadudhu sir
SUPER SIR
thank you so much
Sir na mana nimathi ilama iruken thukam ilama iruken itha follow pana enala mudium nu nampikai iruku inum tips sona usefula irukum
Thank you very mach sir.. ..
Really thanks for your essay…
thankyou sir rompa nalla valimuraigal
sir ,
vananakam,yeanaku meegavum manaooolachalaga erukeradhu ….
yen mana amaitheiku yeathavadhu aaruthalana vecheyam erunthaall yeanaku sollavum ..
Super
Very Useful Wordings
Sir en life la innaiku than start
Paniruken na ivlo kasta padurenu
Thanks sir