Home » Articles » தலை நிமிர்ந்து வான் நோக்கு….

 
தலை நிமிர்ந்து வான் நோக்கு….


அரிகரன்
Author:

தாழ்வினால்
சுருங்கிய உன்
சூரிய முகத்தைத்
திருத்திக் கொள்!

விழிகளில்
ஒளியேற்று:
தலை நிமிர்த்து
வான் நோக்கு.

இயலாமையின்
இருப்பிடத்தை
இடம் மாற்று;
சோர்வகலும்!

வானுந்தன்
கை வசமாய்
வசப்படும்;
உறுதிகொள்!

வலியது
உன் கைகள்!
அது நம்பிக்கை;
தன்னம்பிக்கை
உணர்ந்து நில்!

கவிஞர். அரிகரன்
மதுரை – 14


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1991

தலை நிமிர்ந்து வான் நோக்கு….
நாமே நந்தவனம்
பதினெட்டே முன் வருக!
உலக உயர்வுக்கு ஒரு தனி மனிதன் உதவ முடியுமா?
நால்வகை மக்கள்
திறமைகளை வெளிக்கொணர்வது எப்படி?
இது ஒரு இந்தியக் கனவு