Home » Editorial » பதினெட்டே முன் வருக!

 
பதினெட்டே முன் வருக!


admin
Author:

மீண்டும் தேர்தல் வருகிறது இன்று நாட்டில் மொத்தம் 297 கட்சிகள் உள்ளன. 100 கட்சிகளை அரசே அங்கீகரித்தும் இருக்கிறது. இப்படிப் புற்றீசல்கள் போல கட்சிகள் பெருகுவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல. அதனால் கட்சிகளை விடுத்து, எந்தக் கட்சியாக இருப்பினும், தேர்தலில் நிற்பவர்களில் யார் நல்லவர் என்று உனக்குத் தெரிந்த அளவில் கணித்து ஒரு முடிவுக்கு வந்து அவர்களை தேர்ந்தெடு.

ஒழுக்கமில்லாதவர்கள், கொள்ளையடித்து பணம் சேர்த்தவர்கள் நல்லவர்கள் போல் நடிப்பவர்கள், பதவியே குறிக்கோளாகக் கொண்டவர்கள், எந்தக் கட்சியைச் சார்ந்தர்களாக இருந்தாலும் அவர்களைப் புறக்கணித்துவிடு. நாட்டின் நன்மையில் அக்கரைகொண்டு உள்ள, ஒழுக்கமுள்ள, தொலைநோக்குப் பார்வை உள்ள நபர்களை நிறுத்தினால் தான் மக்கள் தேர்ந்தெடுப்பவ்ர்கள் என்ற ஓர் எண்ணத்தை கட்சித் தலைவர்களும், ஆளுகின்றவர்களும் உணரும் வகையில் உனது தேர்வு இருகட்டும்.

நாட்டின் பொருளாதாரம் வளர்கின்ற வகையில், தொழில்களைப் பெருக்கி, வேலை வாய்ப்பை உருவாக்கி, உழைத்து வாழும் சமுதாயத்தை உருவாக்காமல், மானியம் என்றும் சலுகை என்றும் தங்கள் நாற்காலிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் எந்த வாக்குறுதிகளையும், நடவடிக்கைகளையும் கண்டு நீ மயங்கிவிடாதே. இவைகள் நிர்ந்தரத் தீர்வல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சலுகைகள், இனாம்கள் என்ற பெயரால் சோம்பல் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கி வருகிறோம் என்பதை எண்ணிப்பார்.

சாதி என்றும், மதம் என்றும், இனம் என்றும் இரகசியமாக உறவு கொண்டாடி வருகின்ற ‘புனிதர்களை’ நீ கட்டாயம் புறக்கணித்துவிடு. குறுகிய மனப்பாம்மை உள்ள இவர்களால் ஒரு நன்மையும் விளையாது. ஒதுக்கிவிடு. இவர்களை, நிற்பவர்களில் நல்லவர்களைத் தேர்ந்தெடு.

ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1991

தலை நிமிர்ந்து வான் நோக்கு….
நாமே நந்தவனம்
பதினெட்டே முன் வருக!
உலக உயர்வுக்கு ஒரு தனி மனிதன் உதவ முடியுமா?
நால்வகை மக்கள்
திறமைகளை வெளிக்கொணர்வது எப்படி?
இது ஒரு இந்தியக் கனவு