Home » Cover Story » உலக உயர்வுக்கு ஒரு தனி மனிதன் உதவ முடியுமா?

 
உலக உயர்வுக்கு ஒரு தனி மனிதன் உதவ முடியுமா?


கந்தசாமி இல.செ
Author:

இன்றைய உலகம் 530 கோடி மக்களால் நிரம்பி வழிகின்றது. தொடர்ந்து பெருகிக்கொண்டே வரும் மக்கள் தொகை, அறிஞர்களிடையே பெரும் அச்சத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வளராத நாடுகள் வறுமையுற்று தம் மக்களுக்கு உண்ண உணவுக்கும் வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலை ஒருபுறம். நாங்கள் தாம் பெரியவர்கள் என்று தங்கள் நாட்டின் பெருமையையும், இனத்தின் பெலுமயையும் நிலைநாட்டத் துடித்துக் கொண்டு இருக்கும் அநாகரிகம் பிறிதொருபுறம்.

இந்தப் பல்வேறு சிக்கல்களுக்கும் இடையேதான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நல்லது கெட்டது சுகம் துக்கம் என்ற நாலு வகை நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஈராக் தந்த பாடம்

அண்மையில் நடந்த போரில் நாம் கற்றுக் கொண்ட பாடம் மகத்தானது. ஒரு தனிமனிதனின் பிடிவாதத்தால் உலகமே அல்லல் உற்றது.

விலைவாசிகள் ஏறிப்போயின. பல்வேறு நாட்டுப்போர் வீர்ர்களும் ஈராக் நாட்டு அப்பாவி மக்களும் உயிரிழந்தனர். அந்தக் கொடுமையின் பின் விளைவுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு தனி மனிதனால்

எது எவ்வாறு இருப்பினும் நாம் “சும்மா” ஓய்ந்து கிடப்பதில் பயனில்லை. ‘ஒரு தனி மனிதனால் இந்த உலகை உயர்த்த என்ன செய்து விட முடியும்? எல்லாம் இப்படித்தான் இருக்கும்’ என்று சமாதானம் கொள்வதில் பயனில்லை.

ஒரு மார்க்கோனியினால் நம் குரல் உலகம் முழுதும் கேட்கிறது. ஒரு ரைட் சகோதரர்களால் உலகில் எந்த மூலைக்கும் நாம் சென்று வர முடிகின்றது. ஒரு ஐன்ஸ்டினால் உலக இருள் விரட்டப்பட்டுவிட்டது.

உலகம் சிந்திக்கத் தொடங்கியது

ஒரு புத்தர், ஒரு ஏசுநாதர், ஒரு முகமது நபி, ஒரு காந்தி இவர்களால் உலகம் அமைதியைக் காண முடிந்தது. ஒரு சாக்கரட்டீஸ் – ஒரு டால்ஸ்டாய் – ஒரு பெர்னாட்ஷாவால் உலகம் சிந்திக்கத் தொடங்கியது.

இந்த உலக வளர்ச்சிக்கு தனி மனிதர்களின் சாதனையே பெரும் பங்கு ஆற்றியுள்ளது. நாம் ஏன் நம்மால் ஆனதை ஆற்ற முடியாது?

முடியும் என்று நம்புவோம்

உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படைத் தேவைகளிலும் மக்கள் தொகைப் பெருக்கம், வேலை வாய்ப்பு, சுற்றுப்புறத் தூய்மை அணு ஆயுதபெருக்கம் மக்கள் உரிமை போன்ற உலகம் தழுவிய சிக்கல்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

உணவு, உடையைப் பொறுத்தவரை உற்பத்திக்கு ஒரு தனிமனிதன் முடிந்தவரை தன்னால் ஆன செயல்களைச் செய்யலாம். முடியாவிடின் உணவுப் பொருள்களை வீண்டிக்காமல் பயன்படுத்தலாம், அளவாகப் பயன்படுத்தலாம்.

உணவுப் பழக்க வழக்கங்களில் நாம் முன்னோடியாக இருந்து பிறருக்கு வழிகாட்டியாக விளங்கலாம். உடையில் எளிமை – தேவைக்கேற்ப அளவு போன்றவற்றைப் பின்பற்றலாம். உறையுளைப் பொறுத்த அளவில் எளிய – சுகாதார அமைப்புள்ள சூழலை மேற்கொள்ளலாம்.

கல்வி – சுகாதாரம் – இரண்டிலும் பிறருக்கு உதவுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. நாமே உட்கார்ந்து தான் கற்பிக்க வேண்டும் என்பதில்லை. கல்விக்கும் கற்போர்க்கும் பொருளால் உதவலாம். கல்வி நிறுவனங்களுக்கு நம்மாலான உதவியினைச் செய்யலாம்.

சுகாதாரத்தில் – நாம் வீட்டிலிருந்தே தொடங்கலாம். குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்டும் பழக்கம் – கண்ட இடங்களில் எச்சில் துப்பாமை, நெரிசலான இடங்களுக்கு அவசியம் நேர்ந்தால் ஒழிய செல்லாமை, நெரிசலான காலங்களில் பயணம் செய்யாமை, போன்றவற்றில் நாம் இந்த உலகுக்கு உதவ முடியும்.

மரங்களை வெட்டியதால் உலக வெப்பமே கூடி வருகின்றது. இன்று உலகம் சுற்றுப்புறத் தூய்மையை இழந்து வருகிறது. புகை பிடியாதிருத்தல் – வாகனங்களை அளவாக மேற்கொள்ளல் போன்றவற்றால் நாம் வீட்டுக்கு நாட்டுக்கும் உலகுக்கும் உதவலாம்.

இயற்கை உரங்களின் நன்மையை உலகுக்கு உணர்த்திய அமெரிக்கா விவசாய ராபர்ட் டேவிட் ரொடேல் போல, ஆளுக்கு ஒரு மரம்’ நடுவதன் மூலம் இந்த உலகுக்கு – சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு உதவலாம். மரம் வளர்க்க எந்த வசதியும் இல்லாதவர்கள் ஒரு பூந்தொட்டி வாங்கி அதில் ஒரு செடி வளர்பதன் மூலம் இந்த உலகின் இயற்கைச் சூழல் பாதுகாப்புக்கு உதவலாம்.

மக்கள் தொகைப் பெருக்கம் மாபெரம் அச்சத்தை விளைக்கின்ற செயலாக உள்ளது. தனி மனிதன் ஒன்றே போதும் என்ற உணர்வினைப் பெற வேண்டும். இன்னும் மனம் வளர்ச்சி பெற்றவர்கள், இந்த உலகிற்குத் தங்கள் வாழ்நாளைத் தியாகம் செய்யலாம். இந்த உலகம் விழிப்புணர்ச்சி அடைய, மக்கள் தொகை கட்டுப்பாடு ஒல்லும் வகையில் உதவலாம்.

உலகம் வேலை இலிலாத் திண்டாத்தினால் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்றது. ஐ. நா. சபை போன்ற உலக அமைப்புகள் இதற்கு வழி வகை செய்யலாம். எந்த நாட்டில் வேலை வாய்ப்பு உள்ளது? எந்த நாட்டில் மக்கள் வளம் உள்ளது என்பதை அறிந்து உழைப்பைப் பயன்படுத்தி இந்த உலகின் உற்பத்திக்கு – வளத்திற்கு வழி கோலலாம். தனி மனிதர்கள் ஒருவருக்கு ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் அத உலகிற்குச் செய்த பெரும் தொண்டாக அமையும்.

அவ்வப்போது சூழும் போர் மேகங்களால் இன்று உலகம் பாதுகாப்பு இழந்து தவிக்கின்றது. போரில்லாத ஓர் பாதுகாப்பான உலகை ஏற்படுத்த, உலகத் தலைவர்கள் உலகத்து மக்கள் அனைவரும் எங்கள் நாடு பெரியது – எங்கள் மதம் உயர்ந்தது – ங்கள் இனம் சிறந்தது என்ற ‘தான்’ என்ற மனப்பான்மை நீங்கி, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை பெருக வேண்டும். எல்லோரும் சம்ம் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும்.

உலகம் அமைதி வாழ்வை விரும்புகிறது. அமைதிக்கு உரிமையான வாழ்வு வேண்டும். எண்ணவம் பேசவும் உரிமை வேண்டும். பிறர் வாழ்வில் நாம் தலையிடாத நாம் வாழ்வில் பிறர் தலையிடாத – உரிமைகள் வேண்டும். இந்த வாழ்வுக்காக உலகம் ஏங்கித் தவிக்கிறது. இதை ஒரு னி மனிதன் தாராளமாகச் செய்ய முடியும்.

அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுக்காத, அடுத்தவர் உரிமையில் தலையிடாத வாழ்க்கை முறையை மேற்கொண்டாலே போதும் – நாம் உலகை உயர்த்த உதவியர்களாவோம்.

வாருங்கள் நண்பர்களே! நாம் இன்றைய கடமைகளை சரியாக செய்து முடிப்போம்.

-இல.செ.க.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1991

தலை நிமிர்ந்து வான் நோக்கு….
நாமே நந்தவனம்
பதினெட்டே முன் வருக!
உலக உயர்வுக்கு ஒரு தனி மனிதன் உதவ முடியுமா?
நால்வகை மக்கள்
திறமைகளை வெளிக்கொணர்வது எப்படி?
இது ஒரு இந்தியக் கனவு