Home » Articles » நால்வகை மக்கள்

 
நால்வகை மக்கள்


admin
Author:

-ஆளுநர். சி. சுப்பிரமணியன்

சமுதாயத்தில் நான்கு வகையான மக்கள் உள்ளனர்.

முதல் வகையினர் மேன்மக்கள். இவர்கள் நல்லதே எண்ணி நல்லதே செய்பவர்கள். மற்றவர் நலனுக்காகத் தம் நலனையும் விட்டுக்கொடுத்து வாழ்கையைப் பொதுப் பணிக்கு அர்ப்பணிப்பவர்கள்.

இரண்டாம் வகையினர் நல்லவர்கள். நியாயத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் பிறர் நலனுக்கு ஊறு செய்யாதவர்கள். ஆனால் இவர்கள் தம் நலனைப் பிறர் நலனுக்காகத் தியாகம் செய்யத் துணியாமல், தமது பணியைச் செய்து கொண்டு வாழ்பவர்கள்.

மூன்றாம் வகையினர், தம் சொந்த நலனுக்காக என்று கூட இலாமல், இயல்பாகவே கேடுகளேச் செய்பவர்கள். தமக்கு எவ்வித ஆதாயமும் கிட்டப் போவதில்லை என்றாலும் இவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதில் இன்பம் காண்பார்கள்.

இந்த நான்கு வகையினரில் முதல் வகையினர் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்.

இரண்டாம் வகையினர் தான் சமுதாயத்தில் மிகப் பெரும் பான்மையினராக இருப்பார்கள்.

மூன்றாம் வகையினரும் நான்காம் வகையினரும்கூடச் சிறுபான்மையினரே.

ஒரு சமுதாயத்தல் எவ்வளவுக் கெவ்வளவு முதல் வகையினரும் இரண்டாம் வகையினரும் கூடுதலாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அந்த சமுதாயம் நல்லவிதமாக இருக்கும்.

மூன்றாம் வகையினர் நான்காம் வகையினர் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதன் அழிவும் கூடுதலாகும்.

நம் நாடு அரசியல், விடுதலையடைந்த தருணத்தில் நம் சமுதாயத்தில் முதல்வகையினர் அதிக அளவிலும் இரண்டாம் வகையினர் மிகப் பெரும்பான்மையினராகவும் மூன்றாம் நான்காம் வகையினர் மிக மிக்க் குறைந்த அளவிலும் இருந்தனர்.

இன்றோ நான்காம் வகையினரின் எண்ணிக்கை மிக அதிகரித்து நாட்டின் ஒழுக்கம் வளர்ச்சி பொது அமைதி எல்லாவற்றுக்கும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதற்கென்றே பெரும் செலவை மேற்கொள்ள வேண்டிய நிலை இன்று உள்ளது.

நமது நாகரிகத்தில் மதிநுட்பம் போற்றிக் காப்பாற்றப்படுவதைத் தான் நான் சுதந்திரம் என்று கருதுகிறேன். பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் ஒவ்வொரு விசயத்திலும் ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுப்பதே நமது நாகரிகத்தின் சிறப்பு அம்சமாகும். என்று காந்திஜி 1930-ல் தமது ‘யங் இந்தியா’ இதழில் எழுதினார்.

ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்தே அவர் இயக்கத்தை முன்னின்று நடத்தினார். ‘சமயப் பொறை’ என்னும் சகிப்புத் தன்மையும் நமது நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். அசோகர் காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கை இது.

சகிப்புத் தன்மையும் அனைவராலும் ஏற்கத்தக்க தன்மையும் கொண்ட சமயத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்’ என்று தான். சுவாமி விவேகானந்தரும் சிக்காகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் பிரகடனம் செய்தார்.

நாங்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மட்டுமல்ல, எல்லாச் சமயங்களுமே மெய்ப்பருளை உள்ளடக்கியிருப்பவை என்பதையும் ஒப்புக் கொள்பவர்கள் நாங்கள்’ என்று அவர் மேலும் அறிவித்தார்.

நமது கடந்த காலச் சிறப்பு அம்சங்களையெல்லாம் நாம் கடைப் பிடித்து இன்றைய பிளவு சக்திகளையும், அறியாமை இருளையும் வெற்றி கொள்ள முன்வர வேண்டும்.

உலகமே ஒரு குடும்பம் என்பது நமது புரதானக் கோட்பாடு அதற்கிணங்கள் நம நடத்தை அமைய வேண்டும்.

அறிவியல் சந்திரனின் இருண்ட பகுதியை மனிதனுக்குக் காட்டிவிட்டதைப் போல் உண்மையான சமயம் மனிதனுள் உறையும் தெய்வீகத் தன்மையை அவனுக்கு உணர்த்த வேண்டும். அதன் பயனாக அவனது ஆன்மீக வளர்ச்சிக்கு அது அடிகோலவேண்டும்.

நன்றி: தினமணி, ஏப்ர் 20-1991


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1991

தலை நிமிர்ந்து வான் நோக்கு….
நாமே நந்தவனம்
பதினெட்டே முன் வருக!
உலக உயர்வுக்கு ஒரு தனி மனிதன் உதவ முடியுமா?
நால்வகை மக்கள்
திறமைகளை வெளிக்கொணர்வது எப்படி?
இது ஒரு இந்தியக் கனவு