Home » Cover Story » இதோ.. உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்..

 
இதோ.. உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்..


admin
Author:

நெப்போலியன் ஹில் (Nepoleon Hill 1883) என்பவர் எழுதிய ‘சிந்தி, வளம்பெறு’ (Think and grow rich) என்ற நூல் அவரது 20 ஆண்டுகால ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பெற்றது. இந்த நூல் உலக நாடுகள் அனைத்திலும் பல கோடி மக்களால் படிக்கப்பெற்ற மிகவும் பயனுடைய நூல், இந்த நூல் 1937ல் முதன் முதலில் வெளியாகியது. கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலமாக உலகம் பயன்படுத்தி வெற்றி கண்ட இந்த நூலை தமிழக மக்களில் பலர் இன்னும் அறிந்திருக்கவும் மாட்டார்கள்.

இந்த நூல் தமிழ் கூறும் நல்லுக மக்களுடைய சிந்தனையில் ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்கும் என்ற நம்பிக்கையில் 300 பக்கம் ஒண்ட இந்த நூலின் கருத்துக்கள் மிகச் சுருக்கமான முறையில் தொகுத்து கொடுக்கப்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களில் ஆங்கிலம் அறிந்தவர்கள், மூலநூலைப் படிக்க இது ஒரு தூண்டுகாலாகவும் உதவியாகவும் இருக்கும் என்று நம்புகின்றேன். மூல நூலைப் படிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

நெப்போலியன் ஹில், அவரே தன்முன்னேற்றத்திற்கு முன் உதாரணமானவர். படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து உலகப் புகழ் பெற்றவர். 1883-ல் அமெரிக்காவில் பிறந்த அவர், தன் படிப்புச் செலவைச் சரிகட்ட படித்துக் கொண்டே செய்தி நிருபராகப் பணியாற்றத் தொடங்கினார்.

தமது 25-ஆம் வயதில் வாழ்வில் உயர்ந்த பெரிய மனிதர்களைச் சந்தித்து அவர்களது முன்னேற்றத்திற்கான அடிப்படைக்காரணங்களை ஆராய்ந்து கட்டுரைகள் எழுத்த் தொடங்கினார். பின்னர், ‘கோல்டன் ரூல்’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். அதன்பிறகு முழு நேர எழுத்துப் பணியை மேற்கொண்டார்.

1963 -ல் ‘நெப்போலியன் ஹில் புவண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை நிறுவினார். அதன் மூலம் உலகம் முழுவதும் பயன்படும் வகையில் ‘தன் முன்னேற்றக்கல்வி நிறுவனம், பணிசெய்து வருகிறது. ‘தன்முன்னேற்ற நூல்கள் எழுதியே உலகப் புகழ்ப்பெற்ற அவரின் தலையாய கருத்து’ நாம் எதை ஆழமாக எண்ணி, அதற்காகச் செயல்படுகிறோமே அதை அடைந்தே தீருகிறோம்’ என்பது தான்.

‘வளமாக வழ சிந்தித்துச் செயல்படு’ (Think and growrich) என்ற நூலின் சில முக்கிய கருத்துக்கள்.

நாம் எண்ணுகின்ற எண்ணங்கள்தாம் செயல்களாகின்றன. அந்தச் செயல்களை தாம் பொருள்களாக உருப்பெறுகின்றன. நாம் எதை எண்ணிச் செயல்படுகிறோமே அது செயல் வடிவம் பெற்றுத் தோற்றமளிக்கிறது. வாழ்க்கையில் இன்று பலர் அடைந்திருக்கும் முன்னேற்றம் எல்லாம், பல ஆண்டுகட்கு முன்னர் அவர்கள் மனதில் கருக்ககொண்ட எண்ணங்களே அடிப்படையாகும்.

விருப்பம்

ஒரு மனிதன் சிறப்பாக வாழ வேண்டுமானால் முதலில் ‘சிறப்பானதொரு வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்ப வேண்டும். தீவிரமான விருப்பமே ஒருவனைச் செயல்படத் தூண்டுகிறது. அந்த் தூண்டுதலே அவனை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறது.

தெளிவான இலட்சியம் அடைவதற்கான கால அளவு, அதற்கான திட்டம், செயல்பாடு இவையே வெற்றியின் நான்கு படிகள். உங்கள் விருப்பம் இந்த அடிப்படையில் அமைய வேண்டும்.

வாழ்க்கை ஒரு எஜமானைப போன்றது. நீங்கள் எவ்வளவு கேட்கிறீர்களோ அந்த அளவு மட்டும்தான் கிடக்கும். அதிகம் கேட்டு அதற்கேற்ற முயற்சியினை மேற்கொண்டால் அதிகம் கிடைக்கும்.

நம்பிக்கை

விரும்புவதோடு மட்டும் நின்றுவிடாமல் நம் விருப்பங்களை நாம் அடைய முடியும் என்ற நம்பிக்கை நமது உள்ளத்தில் தோன்ற வேண்டும். நம்மீதே நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நாம் வெற்றிபெற முடியாது. நம்மீது நமக்கு நம்பிக்கை தோன்றும் வகையில் நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கையைப் பெற – நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள – இடைவிடாத முயற்சியும் – ஒன்றிலேயே கவனத்தை செலுத்துவதும் தொடர்ந்து செய்களைச்செய்து கொண்டே இருப்பதும் அவசியமாகும்.

முடியும் என்று யார் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களால் தான் எதுவும் செய்ய முடிகின்றது. அவர்கள் தாம் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.

வெற்றி என்பதும் வளம் என்பதும் எண்ணங்களால் தொடக்கம் பெறுகிறது. ‘விருப்பம் நம்பிக்கை விடாமுயற்சி ஆகியவை ஒன்று சேரும்போது நம் எண்ணங்கள் வடிவம் பெற்றுவிடுகின்றன.

தேவையான அறிவு

நாம் எந்தத் தொழிலை – எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறோமோ – அதை முதலில் முடிவு செய்துவிட வேண்டும். அது முடிவானவுடன் அதற்கேற்ற – வேண்டிய சிறப்பான அறிவினைப் பெற வேண்டும். நம் இட்சியத்திற்குத் தேவையில்லாதவற்றையெல்லாம் ஒதுக்கிவிட வேண்டும்.

உலகப் புகழ் பெற்ற மோட்டார் மன்னன் ஹென்றி போர்டை ஒருமுறை பேட்டி கண்டார்கள். அவருக்குப் பொது அறிவு மட்டுமின்றி, தன் தொழிற் பற்றிய அறிவும் கூடக் குறைவு என்று பத்திரிக்கை எழுதியது.

அதற்கு ஹென்றி போர்டு பதில் கூறினார் – என்னுடைய இலட்சியம் என்ன என்பது எனக்குத் தெரியும். அதை எப்படி அடைவது என்ற வழிமுறைகள் – அதற்கான திட்டங்கள் – இவை அனைத்தையும் நான் அறிவேன். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் வேண்டுமென்றால் இதோ பட்டனை அழுத்துகிறேன் – அந்தத்தந்த துறையைச் சேர்ந்த என் உதவியாளர்கள் பதில் சொல்வார்கள் என்று பதில் கூறினார்.

உலகம் வெற்றி பெற்றவர்களையே விரும்புகிறது. விளக்கம் சொல்பவர்களை அல்ல. முறையான வாழ்க்கை – பயிற்சி — அனுபவம் ஆகியவை சிறப்பு அறிவினை மேம்படுத்தும்.

கற்பனை

நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை மனக்கண்ணில் உருவப்படுத்திப் பார்க்க வேண்டும். கற்பனையில் காண வேண்டும். நம் செயல்பாடுகள் விரைவடையவும் செறிவடையவும் இத்தகைய கற்பனை ஓட்டம் மிகவும் தேவையானதாகும். காந்தியடிகளின் 25 ஆண்டு காலத்திற்கும் முன்னான கற்பனை அதற்கேற்ற செயல்பாடுகள் தாம் விடுதலையாக உருவெடுக்கிறது.

முறைப்படுத்தப்பட்ட திட்டம்

நாம் எடுத்துக் கொண்ட இலட்சியத்திற்கு ஏற்ப நம் திட்டம் அமைய வேண்டும். ஒரு தலைவனாக வேண்டுமென்றால் என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வேலை வாங்க வேண்டுமானால் அதற்கு எப்படித் திட்டமிட வேண்டும் என்று சிந்தித்துத் திட்டமிட வேண்டும்.

திட்டமிடும் போது நம்மிடம் உள்ள குறைகளைக் களைய வேண்டும் வாழ்வில் குறிக்கோள் இன்மை. ஒழுக்கமின்மை, போதிய கல்வி அறிவின்மை, உடல்நலமின்மை, ஆர்வமின்மை, பொறுமையினமை, போன்ற தன்மைகள் தோல்வியை நல்கும் பண்புகளாகும். திட்டமிடும்போது இக்குறைகளைக் களைந்து திட்டமிட வேண்டும்.

எதுவும் நம்மைத் தடுத்து நிறுத்த முடியாது. நாமே நமக்குத் தடை விதித்துக் கொண்டால் ஒழிய. ஆதலின் திட்டமிடுங்கள். அதைச் செயல்படுத்துங்கள்.

முடிவு எடுத்தல்

25.000 பேரைப் பேட்டி கண்டதில் உரிய நேரத்தில் முடிவு எடுக்காமையே தோல்விக்கு காரணம் என்பதைத் தெரிவித்தார்கள். முடிவு எடுப்பதில் தெளிவும் துணிவும் விரைவும் இருக்க வேண்டும். நாம் எடுத்த முடிவைப் பற்றி பலர் பலவாறு கருத்துக் கூறலாம். அதைப்பொருட்படுத்தக் கூடாது. ஏனெனில் கருத்துரை கூறுவது என்பது உலகில் மிகச் சாதாரணமான ஒரு செயலாகும். யார் வேண்டுமானாலும் கூறலாம். நம் எடுத்த முடிவே முடிவானது என்று செயல்பட வேண்டும். ஒரு முடிவு எடுத்த பிறகு மனமும் உடலும் அதற்குக் கட்டுப்பட்டுச் செயலாற்றும்போது திறன் கூடுகிறது. கவனச் சிதறல் இல்லாமல் செயல்பட முடிகிறது. எடுத்த பணி விரைவில் முடிந்துவிடுகிறது.

விடாமுயற்சி

எந்த மனிதனுக்கும் சிற்சில பலவீனங்கள் இருக்கலாம். ஆனால் அதை விடாமுயற்சியால் வெற்றி கொள்ளமுடியும். சிலருக்கு எவ்வளவோ திறமை இருந்தும் விடாமுயற்சி அதாவது எடுத்தசெயலை தொடர்ந்து செய்து முடிக்கும் ஆற்றல் இன்மையால் தோல்விக்கு ஆளாகிவிடுகின்றனர். சிலசமயங்களில் தோல்வி கூட விடாமுயற்சி உள்ளவர்களுக்குச் சாதகமாக அமைந்து விடுவது உண்டு. பொதுவாகவே தோல்வி என்பது தற்காலிகமானது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

விடாமுய்சியை வளர்த்துக் கொள்ள சில அடிப்படைக் கருத்துகளை நாம் பின்பற்ற வேண்டும்.

நாம் எதை அடைய நினைக்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவான நோக்கம், இருக்க வேண்டும்.

அதை அடைவதில் தீவிர நாட்டம் கொள்ள வேண்டும்.

நம்மீது நமக்குத் தேவையான நம்பிக்கை பிறக்கவேண்டும்.

நாம் எடுத்துக்கொண்ட செயலைச் செய்து முடிப்பதற்கான தெளிவான திட்டம் தீட்ட வேண்டும்.

நாம் எடுத்துக்கொண்ட செயலுக்குத் தேவையான நுட்பமான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நம்மோடு இணைந்து செயல்படுகின்றவர்களிடையே நமக்கு இணக்கமான நல்லுறவு இருக்க வேண்டும்.

எதுவாயினும் மன உறுதியோடு செயல்பட வேண்டும்.

நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

இவை நமது விடாமுயற்சியை வளர்க்க நிலை நிறுத்த தேவையான – கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக்களாகும்.

நீங்கள் சாதனைகளை நிகழ்த்த வேண்டுமானால் விடாமுயற்சி + மன உறுதி + தெளிவான இலட்சியம் ஆகிய இம்மூன்றும் உங்களுள் இணைய வேண்டும்.

ஒருவன் தான் எடுத்த செயலில் வெற்றி கொள்ள, தனக்கு ஆதரவாக உள்ளவர்களின் அறிவு – அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னோடு, அல்லது தன்னிடம் வேலை செய்கின்றவர்களது அறிவினையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இத்தகையவர்களின் கருத்துக்களை துணைக்கொண்டு நேர்வழியில் சிந்திக்கும்போது அதற்குத் தனித்த கூடுதல் ஆற்றல் உண்டாகிறது. ஆற்றல் செயலை முற்றுவிக்கின்றது.

(தொடரும்)

 

3 Comments

 1. kannansami says:

  after i am reading this comment self confident i got power in my mind and heart. reading this comment after two or three i work powerfully and confidently and after five or more hours i get negative mind and i feel so lazy. so give me a power comment to me

 2. R.Gurusamy says:

  Dear sir,

  I want to share one information. The same book has been translated and published by Kannathasan pathippagam. Name is ” Maanam Tharum Panam”.

  Anyway Thanks for the best article

  Regards,

  Guru

 3. Kuhandoas says:

  Worth Post Sir,
  Thank You Soooo Much,
  I Am Looking For This.. Nice…

Post a Comment