Home » Articles » உழைப்பே நமது இலட்சியம்

 
உழைப்பே நமது இலட்சியம்


admin
Author:

ஒரு சில மணி நேரங்களை மட்டும் உறக்கத்திற்கும், உடல் நடை பேணவும் ஒதுக்கி விட்டு, நாளின் பெரும் பகுதியை உழைப்பதில் செலவிடுங்கள். சர்வ தேசத்தலைவர்களான நேருவைப் போல, மார்கரெட் தாட்சரைப் போல புகழ் பெறுகின்றனர். “உழைப்பே நமது இலட்சியம்” என்று கூறும் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் எந்த அளவிற்கு உழைக்க வேண்டும் என்பது குறித்துச்சில எண்ணங்கள் – இங்கே.

எவ்வளவு நேரம் உழைப்பது?

அண்மையில் BBC தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாரத்திற்கு 40 முதல் 60 மணி நேரம் உழைப்பதைச் சரியான அளவு உழைப்பதாக்க் ஒள்ளலாம் 60 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைப்பவர்களை உழைப்புப் போதையில் மூழ்கியவர்களாகக் (workaholics) கருதலாம் என்ற கருத்து வெளியிடப்பட்டது. இது முன்னேறிய நாடாகக் கருதப்படும். இங்கிலாந்து மக்களுக்கு முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவிற்கு இந்த அளவு சரியானதா? வாரத்திற்கு 5 நாட்கள் உழைப்பதா, 6 நாட்கள் உழைப்பதா? போன்ற கேள்விகளையும் ஒதுக்கி விட்டு, 60 மணி நேர உழைப்பைச் செயல்படுத்துவோம்.

எப்படி உழைப்பது?

பணியில் ஈடுபடும் நேரத்தை அதிகரிப்பது மட்டும் போதாது வேலைத் திறனும் (Productivity) அதிகரிக்க வேண்டும். அதே சமயம் வேலையின் தரமும் பராமரிக்கப்பட வேண்டும். ஒரு நாளுக்கு 1 ஏக்கர் உழுகின்ற உழவன், 11/2 ஏக்கர் செய்தால் வேலைத் திறன் அதிகரித்ததாகக் கொள்ளலாம். அதிக நேரம், அதிக வேலைத் திறன் என்று கூறிக் கொண்டு, உழவன் தரத்தில் தாழ்ந்துவிடக்கூடாது; இதைத்தான் ஒவ்வொரு பணியிலும் எதிர்ப்பார்க்கிறோம்.

நாம் எங்கே அவர்கள் எங்கே?

கடந்த 6 மாத காலமாக இங்குள்ள மக்களைக், குறிப்பாக இளைஞர்களை, கவனித்தும் கலந்துரையாடியும் கற்றுக் கொண்ட பாங்கள் பல. அவர்கள் எங்கே என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன். நாம் எங்கே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

1. ‘தனித்திரு’

ஆங்கிலேயர்கள் சுமுகமாகப் பழக மாட்டார்கள். தனிமையை அதிகம் விரும்புவார்கள் என்ற கருத்து எனக்கு ஒருவகை முன்னசரிக்கையாக் கூறப்பட்டது. தனிமை விரும்பிகள் என்பது உண்மைதான். ஆனால்,அதில்தான் எவ்வளவு பயன்கள்! அனாவசிய அரட்டையில் ஈடுபடாது பணியாற்றப் போதிய நேரம் கிடைக்கின்றது. பிறரது தலையீடு குறைவதால், கவனம் சிதறாது பணியாற்றும் சூழ்நிலை அமைகின்றது. மேலும் இயன்ற அளவிற்கு பிறரைச் சாராதிருப்பதால் வெள்ளிக்குத் தேவையான சுய தேவைப் பூர்த்தி (self reliant) நிலையை எட்ட முடிகிறது. ஆகையால், பணியில் ஈடுபடுகின்ற நேரத்திலேனும் தனத்திருக்க் கற்றுக் கொள்வோம்.

2. ‘விழித்திரு’

இந்திய உணவுப் பழக்கங்களை நன்கு அறிந்துள்ள பேராசிரியர் மாரிஸ் ரோல்ஸ் அவர்கள் அண்மையில் தங்களது உணவுப் பழக்கங்களை ஒப்படிட்டுக் கருத்துத் தெரிவித்தார். இங்கு காலையிலும், மதிய நேரத்திலும் உணவுக்காகச் செலவிடும் நேரம் சுமார் 15 நிமடங்கள் தான். மேலும். இவ்விரு வேலையிலும் மிகக்குறைவான அளவே உட்கொள்கின்றனர். இவ்வாறு உணவு தயாரிப்பு நேரத்தைச் சேமிப்பதோடு, உண்ட ‘களைப்பு இல்லாமல்’ நாள் முழுதும் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகின்றனர்.

3. ‘நேசித்திரு’

என்னோடு வசிக்கும் கிரேக்க நண்பர் திரு. நிக்கோலஸ் மற்றும் ஆங்கிலேயப் பெண்மணி செல்வி சாலி இருவரும் வாரத்திற்கு சுமார் 75 மணி நேரம் (5 நாட்களில்) உழைக்கும் மாணவ நண்பர்கள். அவர்களது பணி குறித்து உரையாடும்போது அவர்களது முகத்தில் காணப்படும் மகிழ்ச்சி; உணவையும், நேரத்தையும் பொருட்படுத்தாது ஆய்வுக் கூடப் பரிசோதனைகளில் ஈடுபடும் ஆர்வம்; மேற்பார்வையாளர் (பேராசிரியர்)) வெளிநாடு சென்றுவிட்டபோதிலும் தொடர்ந்து செயலாற்றும் பண்பு ஆகியவை அவர்கள் எந்த அளவுக்குத் தங்களது பணியை நேசிக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன. எனவே, நமது பணியை நேசிக்கக் கற்றுக்கொள்வோம்.

நம்மால் முடியுமா?

கடின உழைபு என்பதுகுறித்து எழுதுவதும், பேசுவதும் இனிமையானது. செயல்படுத்துதல் அவ்வளவு இனிமையானதோ, எளிதானதோ அல்ல. ஆதலால்தான் கடினமாக உழைப்பவர்களைச் சந்திக்கும் வேலைகளில் வியப்பின் செயல்படுகிறோம். அத்தகு மனிதர்கள் ஓரிருவர் என்றால் பெரும்பாலும் பாராட்டுவதோடு நின்று விடுகிறோம். ஆனால், நிறையப் பேர் அப்படி இருந்தால், நம்மால் முடியாதா என்ற கேள்வி எழுகின்றது. இங்குள்ள இளைஞர்கள் நிறையப் பேர் ‘அப்படித்தான்’ அதனால்தான் கேள்வியோடு நின்று விடாமல் நம்மால் முடியும்’ என்ற பதிலோடு புதிய பாதையில் புறப்பட்டுள்ளேன்.

நீங்கள்?

லண்டனிலிருந்து டாக்டர் ஜே. வசந்தகுமார்.

Dr J. Vasantha Kumar, 90 Kendrick Road, Reding RGs 5 Dn,
England U.K.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1991

எத்தனைச் சித்திரைகள்
எண்ணத்தின் ஆற்றல்கள்
எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்
நித்திரை கொள்ள அல்ல…
இதோ சில ரகசியங்கள்
இதோ.. உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்..
சிந்தனைத்துளிகள்
உழைப்பே நமது இலட்சியம்
எண்ணத்தின் செயல்கள்