Home » Articles » எத்தனைச் சித்திரைகள்

 
எத்தனைச் சித்திரைகள்


admin
Author:

எத்தனைச் சித்திரைகள் வந்து போய் விட்டன?

நாகரிகம் வளர்ந்து, நாட்களை எண்ணும் பழக்கம் தொடங்கியதிலிருந்து ஆண்டுதோறும் சித்திரைகள் வந்து வந்து போகின்றன.

ஆயிரக்கணக்கான சித்திரைகளை காலங்காலமாக நம் மக்கள் கண்டே வந்துள்ளனர்.

இருந்தாலும் என்ன பயன்? சித்திரைக்குச் சொந்தக்காரர்கள் இன்னும் சுகமாக இல்லையே!

ஏழ்மையும் அறியாமையும்தானே அவர்களின் தனிச் சொத்தாக இன்றும் இருக்கிறன்றது.

புள்ளி விவரங்கள் வேண்டுமானால் நம் பெருமையைப் பெரிதுபடுத்திக்காட்டலாம். நாம் 63 விழுக்காடு படித்து விட்டோம் என்று.

நாடு தேர்ந்தெடுக்கும் தலைவர்களைப் பார்த்தல்லவா நம் கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்?

வேசதாரிகள் அல்லவா நம் தலைவர்களாக வருகிறார்கள்? நம் அறிவின் செழிப்புக்கு வேறென்ன சான்று வேண்டும்?

நம் பொருளாதாரச் செழுமையை அறிய சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை ஒரு கற்பனைப் பயணம் செய்து பாருங்கள்.

அங்கிங்கெனாதபடி எங்கும் கையேந்தும் நம் மண்ணின்மைந்தர்கள் சிலர் வெளிப்படையாக – சிலர் மறைமுகமாக – சிலர் அதிகாரத்தோடு சிலர் செல்வாக்கோடு – சிலர் ஆணவத்தோடு – சிலர் அடித்து பிடுங்கும் பாவனையில் – இப்படிப் பலரகமான பிச்சைக்காரர்கள்.

எங்கு நோக்கினும் ஒரே வறட்சி, தமிழகமே பாலைவனமாகக் காட்சியளிக்கும் அவலநிலை.

51/2 கோடித் தமிழர்கள்தான் இப்படி என்று இல்லை. அங்கென்ன வாழ்கிறது? வடக்கேயும் இதே நிலை. இதை விட மோசம்.

இமயம் தொடங்கி எங்கு நோக்கினும் இப்படித்தான். ஆனால் ஒன்றில் மட்டும் நாம் நிலையான வளர்ச்சியைக் காட்டி வருகிறோம். மக்கள் தொகைப் பெருக்கம் இப்போது 841/2 கோடி. (1991)

கல்வி அறிவிலும் இதே நிலைதான். தமிழ் நாட்டில் 63 விழுக்காடு படித்தவர்கள் என்றால் ஏக இந்தியாவில் 52 விழுக்காடு தான் படித்தவர்கள்.

புள்ளி விவரங்கள் நாம் நம் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டுகின்றனவே தவிர நம் நிலை தினம் 10 ரூபாய்க்கு மேல் இல்லை. நம் தேசிய வருமானமே தனி நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 10 ரூபாய்தான். 50 விழுக்காடு மக்களுக்கு மேல் அரை வயிறும் கால் வயிறும்தான்.

ஆனால் இந்தப் புண்ணிய பூமியில் பிற்ந்த ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்தியக் குழ்தைகளுக்கும்கூட அரசாங்கம் குறைந்தது 1000 ரூபாயை கடனாகப் பிரித்துக் கொடுத்துள்ளது.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு மனித உயிருக்கும் அரசாங்கம் வங்கி வைத்துள்ள தலைக்கு 1000 ரூபாய் கடனை கட்டித் தீர்த்துவிட்டுத்தான் சாக வேண்டும்.

இப்படிக் கசப்னா உணர்வுகளையே நம் நாடு நமக்குத் தந்து வந்துள்ளது. அங்கங்கே சில பாலைவனச் சோலைகளும் உண்டு.

இனியும் நாம் சரியாகச் செயல்படாவிட்டால் இன்றைய நிலையை விட மோசமாகி விடுவோம்.

சிந்தனைக்குரிய வேளை சித்திரையில் வந்து விட்டது. செயல்பட வேண்டிய கட்டமிது. வெற்றி தோல்விகளைவிட இலட்சியமே பெரிது.

இளைஞ்ஞர்களே! இனிய நண்பர்களே! சிந்தியுங்கள். செயல்படுங்கள்…

ஏக இந்தியாவிலும் வேளாண்மை முதன்மையான தொழில் – இதற்கு நீர்வளம்தான் உயிர்நாடி. இருக்கின்ற நீர்வளத்தை – நதிகளை – ஆறுகளை இணைத்தாலே போதும். ந்திகளை தேசிய உடைமையாக்கிப் பகிர்ந்து கொடுத்தாலே போதும். நாம் சொந்தக்காலில் நிற்க முடியும்.

இதற்கு யார் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுகிறார்களோ அவர்களை நம் தலைவர்களாகத் தேர்ந்து கொள்வோம்.

மக்கள் தொகை நாளும் பெருகி வருகிறது. இதே போக்கில் போனால் அடுத்த பத்தாண்டில் நாம் 100 கோடியைத் தாண்டிவிடுவோம். அவசரமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

சாதி, மதம், இனம், மொழி, சிறுபான்மை என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு குடும்பக்கட்டுப்பாட்டை புறக்கணிக்கும் நிலையை மாற்றிட இந்தியாவில் வாழும் அனைவர்க்கும் ஒரே விதி முறைகள் வகுப்போம்.

இனாம்களைக் காட்டி ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கின்ற அவல நிலையை மாற்றி சாதி, மத இனங்களைக் கடந்த உழைத்து வாழும் சமுதாயத்தை உருவாக்க – உழைக்கும் வாய்ப்பகளை உருவாக்கும் முன்னோக்குச் சிந்தனையுள்ள தலைவர்களைத் தேர்ந்தடுப்போம்.

யாருமே இல்லை என்று கருதாதீர்கள். இப்போது இருப்பதில் நல்லதைத் தேர்வோம். நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் நாற்காலியில் அமர்ந்ததும் மலடாகிப் போகாமல் இருக்க திரும்ப அழைதுக் கொள்ளும், அதிகாரத்தைப் பெறுவோம்

உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் உணவு – உடை- உறையுள் – கல்வி -சுகாதாரம்- தொழில் வாய்ப்பு உரிமை வாழ்வு – அமைதி கிடைத்திட நாம் நம் வாழ்வில் குறைந்தது 2 விழுக்காட்டினையாவது செலவிடுவோம்.

இவையெல்லாம் நமது சிந்தனைகள். பொன் ஏர் பூட்டத்தொடங்கி விட்டோம். விரும்பியர்கள் பின் ஏர் ஓட்டி வரலாம்.

இதுவே இந்தச் சித்திரை நமக்கு வழங்கும் சிந்தனையாக இருக்கட்டும்.

-ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1991

எத்தனைச் சித்திரைகள்
எண்ணத்தின் ஆற்றல்கள்
எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்
நித்திரை கொள்ள அல்ல…
இதோ சில ரகசியங்கள்
இதோ.. உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்..
சிந்தனைத்துளிகள்
உழைப்பே நமது இலட்சியம்
எண்ணத்தின் செயல்கள்