– 1991 – April | தன்னம்பிக்கை

Home » 1991 » April

 
 • Categories


 • Archives


  Follow us on

  எத்தனைச் சித்திரைகள்

  எத்தனைச் சித்திரைகள் வந்து போய் விட்டன?

  நாகரிகம் வளர்ந்து, நாட்களை எண்ணும் பழக்கம் தொடங்கியதிலிருந்து ஆண்டுதோறும் சித்திரைகள் வந்து வந்து போகின்றன.

  Continue Reading »

  எண்ணத்தின் ஆற்றல்கள்

  • எண்ணங்களே உலகின் மிகச் சிறந்த சக்தியாகும்.
  • எண்ணங்கள் அசைந்து செல்லும் தன்மை உடையவை.
  • எண்ணங்கள் ஒன்று பலவாகப் பருகும் தன்மை உடையவை
  • Continue Reading »

  எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

  தன்னம்பிக்கை வாசகர்களுக்கு வணக்கம்.

  இந்த இதழில் கொடுக்கப் பெற்றுள்ள எண்ணங்கள் பற்றிய கருத்துக்கள் எமர்சன், ஜேம்ஸ் ஆலன், சுவாமி சிவானந்தர், வேதாத்திரி மகரிஷி, உதயமூர்த்தி ஆகியோரின் நூல்களிலிருந்து படித்த கருத்துக்கள். நடைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமைப்படுத்திக்கொடுக்கப் பெற்றுள்ளன.

  Continue Reading »

  பயிலரங்கம்

  Continue Reading »

  நித்திரை கொள்ள அல்ல…

  நீ
  கருவரையிலிருந்து
  கண் விழித்துக் கொண்டது
  வாலிபத்தில்
  நித்திரை கொள்ள அல்ல…!

  Continue Reading »

  இதோ சில ரகசியங்கள்

  கட்டுப்பாடான வாழ்க்கை முறை

  ஒரு துறையை மட்டும் தேர்ந்து கொள்ளுதல்

  பிரச்சனைகளை சிந்தித்து அணுகுதல்

  Continue Reading »

  இதோ.. உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்..

  நெப்போலியன் ஹில் (Nepoleon Hill 1883) என்பவர் எழுதிய ‘சிந்தி, வளம்பெறு’ (Think and grow rich) என்ற நூல் அவரது 20 ஆண்டுகால ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பெற்றது. இந்த நூல் உலக நாடுகள் அனைத்திலும் பல கோடி மக்களால் படிக்கப்பெற்ற மிகவும் பயனுடைய நூல், இந்த நூல் 1937ல் முதன் முதலில்

  Continue Reading »

  சிந்தனைத்துளிகள்

  • நதிகளைத் தேசிய உடமையாக்குவோம் – கங்கை காவிரியை இணைப்போம்..
  • நேற்றைய நமது எண்ணங்களே இன்றைய நமது வாழ்க்கை
  • நல்லவர்களைச் சந்தித்து மகிழுங்கள்
   தீயவர்களை சந்திப்பதைத் தவிருங்கள்
  • Continue Reading »

  உழைப்பே நமது இலட்சியம்

  ஒரு சில மணி நேரங்களை மட்டும் உறக்கத்திற்கும், உடல் நடை பேணவும் ஒதுக்கி விட்டு, நாளின் பெரும் பகுதியை உழைப்பதில் செலவிடுங்கள். சர்வ தேசத்தலைவர்களான நேருவைப் போல, மார்கரெட் தாட்சரைப் போல புகழ் பெறுகின்றனர். “உழைப்பே நமது இலட்சியம்” என்று கூறும்

  Continue Reading »

  எண்ணத்தின் செயல்கள்

  • ஒருவரது நல்லெண்ணங்கள் பிறர் மனதில் புகுநந்து நல்ல செயல்களைத் தோற்றுவிக்கின்றன.
  • ஒருமுகப்படுத்தப்பட்ட எண்ணங்கள் அந்த திசையில் சென்று தம் பணியினைச் செய்து முடிக்கின்றன.
  • நம் எண்ணங்களைத் தொலை தூரத்தில் உள்ளவர்களுக்குச் செய்தியாக அனுப்பி அவர்களின் பதிலையும் பெறலாம்.
  • நம் எண்ணங்கள் ஒத்த எண்ணங்களுடையர்களிடத்தில் அதிர்வகளை உண்டாக்குகின்றன. அவர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள். இரண்டு எண்ணங்களும் சேரும்போது இருமடங்கு வலிமை பெருகுகின்றது.
  • இன்றைய உலகமே எண்ணங்கள் செயல்வடிவம்தான்.
  • ஆற்றல் மிகுந்த எண்ணங்கள் பலவீனமான எண்ணம் உடையவர்களைக் கட்டுப்படுத்தும்.
  • ஒருவர் அனுப்பும் எண்ணங்கள் இறுதியில் அவரையே வந்து சேர்கின்றன.
  • நம்மிடம் இருக்கும் எல்லாம் நம் எண்ணங்களால் ஆனவைதாம்.
  • நல்ல எண்ணங்கள் மூலமே நாம் உலகுக்கு தொண்டு செய்யலாம்.
  • மருத்துவர்கள் எண்ணங்கள் மூலமும் நோயைக் குணப்படுத்த முடியும்.
  • யோகிகள் எண்ணங்கள் மூலமே உலகுக்கு நன்மை செய்து வருகிறார்கள்.
  • ஆர்வமுள்ள எண்ணங்கள் உடலை ஆர்வமாகச் செயல்பட வைக்கிறது.
  • விதி என்பது நம் எண்ணத்தின் விளைவு. நம் எண்ணங்கள் மூலம் விதியை மாற்றி அமைக்கலாம்.
  • நல்ல எண்ணங்களை மனதில் நிரப்பிக் கொள்வதால் தீய எண்ணங்கள் உள்ளேபுக இடமில்லா வண்ணம் செய்யலாம்.
  • எண்ணங்களே சந்தர்ப்பங்களை உருவாக்குகின்றன.
  • எண்ணங்கள் வழி சொற்கள் பிறக்கின்றன. நல்ல சொற்களுக்கு ஆற்றல் அதிகம்.
  • எண்ணங்கள் தாம் வெற்றி தோல்விகளை உருவாக்குகின்றன. எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன.
  • எண்

  • ண விதைகளே செயல்களாக விளைகின்றன.
  • கண்ணுக்குப் புலப்படாத எண்ணங்களின் தோற்றம்தான் சொற்கள்.
  • தூய்மையான எண்ணங்கள் வாழ்க்கைக்குக் புத்துயிர் ஊட்டுகின்றது.
  • நல்ல எண்ணங்களை நாள்தோறும் உலகிற்கு வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • நல்ல எண்ணங்களை நாம் எண்ணிணாலே போதும். அவை உலகில் பரவி விடுகின்றன.
  • எண்ணங்களின்படியே மனம் செயல்படுகிது. மனம் நமது எண்ணங்களைப் பரப்பும் கருவி.
  • மனத்தி

  • ன் வெளிப்படையான தோற்றமே உடல்
  • ஒரு உருவத்தை மனக்கண் முன் நிறுத்துவதன் மூலம் மனதை ஒருமைப்படுத்தலாம்.
  • மனம் பழகிய தடத்திலேயே செல்லும் அதனை உயர்வான வழியில் செலுத்த முயற்சி வேண்டும்.
  • மனத்தோட்டத்தில் நல்ல பயிர்களைப் பயிரிடும்போது களைகள் முளைக்க இட் இல்லாமல் போய்விடுகின்றன.
  • ஒவ்வொரு புலன் நுகர்ச்சியும் நம் மனதில் நுண்ணிய அடையாளங்களை ஏற்படுத்துகின்றன.
  • மனம் பேராற்றல் வாய்ந்தது.மனதில் நல்ல எண்ணங்களை ஆழ எண்ணம் போது அது நடந்தேறி விடுகிறது.