Home » Articles » அந்த ஜப்பானியக் கிழவர்

 
அந்த ஜப்பானியக் கிழவர்


admin
Author:

நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் ஜப்பானிய மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஜப்பானியனும் தேச்சொத்தைத் தன்னுடைய சொந்தச் சொத்தாக எண்ணி அவற்றை பாதுகாக்கின்றான்.

ஒரு சமயம் பிரிட்டிஷ் நாட்டுத் தொழில்துறையைச் சேர்ந்த ஒருவர் ஜப்பானிய தேசிய ரயில்வேயின் முதல் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அதே பெட்டியில் வயது முதிர்ந்த ஜப்பானியர் ஒருவரும் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் தாம் அமர்ந்திருந்த இருக்கையில் ஏத செய்து கொண்டிருந்ததைப் பிரிட்டிஷ்கார்ர் தற்செயலாக்க் கவனித்தார். எழுந்துப்போய்ப் பார்த்தார்.

கிழவர் இருந்த ஆசனத்தில் ஒரு ஓரம் லேசாகக் கிழிந்திருந்தது. அதை அந்தக் கிழவன் தைத்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்டதும் பிரிட்டிஷ்காரருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. ஒருவேளை ரயில்வே தொழிலாளியோ என்று யோசித்தார். இருக்க முடியாது. எந்த ரயிலவேயும் பழுதுபார்ப்பதை ஓடும் ரயிலில் செய்வது கிடையாது. ரயில்வே தொழிலாளிக்கான சீருடையும் இவர் நிச்சயமாகத் தம்மைப் போல ஒரு பயணிதான் என்று எண்ணினார்.

அந்த ஜப்பானியப் பெரியவரிடம் “மன்னியுங்கள்! நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் அறியலாமா?” என்று பிரிட்டிஷ்காரர் கேட்டார்.

கிழவர், “கொஞ்சம் பொறுங்கள். வேலையை முடித்து விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அடுத்த ஐந்தாவது நிமிடம், தைப்பதிலேயே கவனமாக இருந்து விட்டு பிறகு நிமிர்ந்தார்.

“இந்த ரயிலும் இந்த இருக்கையும் எங்கள் நாட்டுத் தேசியச்சொத்து. இது சற்றுக் கிழிந்திருக்கிறது. அதைத்தான் நான் பழுதுபார்த்துக்கொண்டிருந்தேன்” என்றார்.

அதாவது “தேசத்தின் சொத்து அனைத்தும் எனக்குச் சொந்தம். அதிலே பழுது ஏற்படாது பார்த்துக்கொள்வது என் பொறுப்பு”. என்பதுதான் அந்த ஜப்பானியப் பெரியவர் சொன்னதன் பொருள்.

ஜப்பானியர் இத்தகைய மனப்போக்கே அவர்களுடைய தேசத்தின் மகத்தான ஆரோக்கியத்திற்கு காரணமாகும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1991

நீங்கள் எப்படி?
உலகம் உன்னில்
இன்றைய சூழ்நிலையில் நாம்
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்
உலகு ஒரு குடும்பம் – டாக்டர் மு. அறம்
1991-ல் உங்கள் திட்டம்!
சிந்தனைத் துளி
எந்த திசை நோக்கி உன் பயணம்?
நீங்கள் வெற்றிபெற வேண்டுமா? இதோ இந்தப் படிக்கட்டுகளில் ஏறுங்கள்
அந்த ஜப்பானியக் கிழவர்
தன்னம்பிக்கை