Home » Articles » தன்னம்பிக்கை

 
தன்னம்பிக்கை


admin
Author:

“வானம் வல்லூறுகளுக்கு மட்டும் அல்ல. வானம்பாடிகளுக்கும் தான் வாருங்கள்” என்றார் கவிஞர் கண்ணதாசன். நம்மால் முடியும் என்று உறுதியாக நம்புவோம். நம்மால் விடியும் என்று விடாமுயற்சியோடு செயல்படுவோம்.

மனித வாழ்க்கையில் தோல்விகள் நேரலாம். சோதனைகள் தொடரலாம். இன்னல்கள் எதிர்ப்படலாம். இவற்றை எல்லாம் கண்டு துவண்டு விடாமல் சோர்ந்து போகாமல் தடைகற்களை படிகற்களாக மாற்றி முன்னேற மிக மிக அவசியமானது தன்னம்பிக்கை.

மனதில் நல்ல எண்ணங்களை நுழையவிடுங்கள். நமது வாழ்நாளில் உண்டோம், உறங்கினோம், பயனின்றி வாழ்ந்தோம் என்று இருப்பதைவிட, கடுமையாக உழைத்தோம், முன்னேறினோம் சமுதாயத்தை முன்னேற்றினோம் என்று திருப்தி அடையும் முறையில் நாம் வாழவேண்டும். வாழ்க்கையில் குறிக்கோள் இருக்க வேண்டும். சில நேரங்களில் குறிக்கோள் சிற்ந்தத்தாக இருக்கலாம். ஆனால் அதை அடையும் வழி தவறாகவும் வாய்ப்பு உண்டு. தவறு என அறிந்தால் அதை உடனே நீக்கி நேர் வழியைக் கடைபிடித்து குறிக்கோளை அடைய வேண்டும்.

தளராதமனம் வேண்டும். தாங்கும் குணம் வேண்டும். சமுதாயத்தில் நடக்கும் தீமைகளை களையும் துணிவு வேண்டும். “நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனைகள் செய்வாராடி கிளியே அவர் வாய்ச்சொல்லில் வீர்ரடி என்று மனம் நொந்து பாடினார். மகாவி பாரதி. நெஞ்சு பொறுக்குதில்லையே என்று நெஞ்சம் குமறினார்.

அந்நாளில் நடைபெற்ற தீமைகள் சொல்லில் அடங்கா. சமுதாயத்தை அழிக்க புறப்பட்டிருக்கும் கரையானகள். பசுத்தோல் போர்த்திய புலிகள். மதவறி என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் ஓநாய்கள். இவற்றிடையேதான் நம் நாடு சிக்குண்டு தவிக்கிறது.

அந்நாளைய அரசியலும், அரசியலில் ஈடுபட்ட தலைவர்களுக்கும், நேர்மை, தியாகம், தான் அழிந்தாலும் நாடு வாழ வேண்டும். என்ற உயர்ந்த நோக்கம் ஆகியன இருந்தன. ஆனால் இன்றோ பதவி வெறி, தான் வாழ தன் சுற்றம் வாழ, நாட்டையே அழிக்க முயலும் அரசியல் வாதிகள், வாக்குகளைப்பெற மனித குலத்தை வேற்றுமைப்படுத்தி இன்பம் காணும் தலைவர்கள். இது இன்றைய இந்தியாவின் சாபக்கேடு.

நமக்கென்ன வந்தது என்று இராமல் நமது வாழ்நாளில் நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் அன்பினால் அனைத்து தீமையை களைந்து, நேர்வழி சென்று பாரதம் உயர சபதம் ஏற்போம். அச்சமின்றி வாழ்வோம். தன்னம்பிக்கை பெறுவோம்.

இரா. பஞாசாபகேசன்
சென்னை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1991

நீங்கள் எப்படி?
உலகம் உன்னில்
இன்றைய சூழ்நிலையில் நாம்
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்
உலகு ஒரு குடும்பம் – டாக்டர் மு. அறம்
1991-ல் உங்கள் திட்டம்!
சிந்தனைத் துளி
எந்த திசை நோக்கி உன் பயணம்?
நீங்கள் வெற்றிபெற வேண்டுமா? இதோ இந்தப் படிக்கட்டுகளில் ஏறுங்கள்
அந்த ஜப்பானியக் கிழவர்
தன்னம்பிக்கை