Home » Articles » நீங்கள் எப்படி?

 
நீங்கள் எப்படி?


இராமநாதன் கோ
Author:

கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் மனிதனின் குணங்களால், உடல் நலனில் உண்டாகும் விளைவுகளைக் கண்டுள்ளார்கள்.

இவர் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவர்; மேலும் உயரத்துடிப்பவர்; சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து உருவாக்க பல்வேறு வேலைகளில் ஒரே சமயத்தில் ஈடுபட்டு,பதட்டத்துடன் ஓடிக் கொண்டிருப்பார். சாப்பிட உட்கார்ந்தத்தும். அடுத்த நொடியில் முடித்துவிட்டு, வண்டியை விரட்டிக்கொண்டு ஓட்டுவார். வழியில் நிறைய வாகனங்கள் போய்க் கொண்டிருந்தால் இவர் குறுக்கிலும் பக்கவாக்கிலும் நுழைந்து வேகமாக முந்துவார். எல்லாச்செயலும் நூறு சதம் சரியாக இருக்கப் பிடிவாதமாக எண்ணுவார். சக ஊழியரோடு, கீழுள்ளவர்களோடு ஒரு சிறுதவறு செய்து விட்டாலும், பொறுக்க முடியாமல் கோபப்பட்டு எரிமலையாக வெடிப்பார். அல்லது அதக் கடினத்துடன் அடக்கி மவுனம் சாதிப்பார்.

மற்றவர்கள் முன்னேற்றம் பெற்றால், அதைப் பாராட்ட மனம் வராது; மாறாக அதில் குறை காண்பார். இவரை குடும்பத்தினரே மனதிற்குள் வெறுப்பார்கள். தாம் எடுத்த செயலை நன்கு முடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபக்கமும், மற்றவர்கள் குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கமும், இவர்களை விரட்டிக்கொண்டேயிருக்கும்.

இது போன்ற குணமுடையவர்களை ‘ஏ’ வகை குணமிக்கவிர் (TYPE A BEHAVIOUR) எனப் பிரித்துள்ளார்கள். இந்த குணங்களால் சில அபாய விளைவுகள் -நோய்கள் – உண்டாகின்றன. இவர்களுக்குள் பதட்ட உணர்வு, பல்வேறு வேலைகளில் உண்டாகும் குழப்பங்கள் மற்றவர்கள் மீதுள்ள பொறாமை உணர்வு, உடலிலுள்ள அட்ரீனல் சுரப்பிகளில் அதிக ஹார்மோன்கள் (HORMONES) உண்டாக்கி இதய வேகத்தை அதிமாக்குகிறது. இறுதியில் மாரடைப்பு நோயால் இறக்கிறார்கள் எனக் கணக்கீடுகள் காட்டுகின்றன.

இதுபோன்ற குணமுள்ளவர்களை அன்றாடம் பார்க்கிறோம். எப்படி ஒருவரிடம் இது உண்டாகிறது? குழந்தையாக பிறக்கும்போது குணங்கள் உருவாவதில்லை. தம் குழந்தைகளின் விருப்பு, வெறுப்புகளை உணராமல், தாம் விரும்புவது போலதான் படிக்க வேண்டும்; விளையாட வேண்டும்; பொழுதுபோக்கு இருக்க வேண்டும் என்று சில எண்ணங்களைக் குழந்தைகளிடம் பெற்றோர்கள் திணிப்பதுண்டு.

இதுபோன்ற குழந்தைகள் பெற்றவர்களில் அன்பு – பாராட்டுகளுக்காக ஏங்கி – பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். இதுபோன்று வளரும் குழந்தைகளுக்குப் பெரியவராகும்போது இந்தக் குணம் உண்டாகிறது. தனித்து வளர்க்கப்பட்ட குழந்தைகளுக்கும் இதுபோன்ற குணம் வரலாம்.

இவர்கள் என்ன செய்யலாம்?

வாழ்க்கையில் முன்னேற எண்ணுபவர், கடினமாக உழைக்க வேண்டும்; அதற்காக அதிக வேலைகள் செய்ய வேண்டிவரும். அதை முறைப்படுத்தி – திட்டமிட்டு செயல்படுத்தினால் பதட்டம் உண்டாவது குறையும்; சிரம்மாக இருக்காது. (Plan and Organise)

நம் தொழிலை – சக ஊழியர்களை – நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். (Love your job and People) நமக்கு உற்சாகம் உண்டாகும்.

இது போட்டியான உலகம். ஒரு துறையில் பல திறமையானவர்கள் இருக்கச் செய்வார்கள்; அவர்களை மனமாற பாராட்ட வேண்டும். மற்றவர் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடைவது. பரந்த மனப்பான்மையைக் காட்டும் நல்ல பண்பு.

தம்முடைய செயலுக்கு மற்றவர்களின் பாராட்டு கிடைக்க ஏங்குவது பல நேரங்களில் ஏமாற்றத்தை உண்டாக்கும். நாம் ஒரு செயலை சாதித்தோம் என்ற எண்ணம் உருவாகி நமக்கு நாமே தட்டிக்கொடுத்துக் கொள்ளவேண்டும்.

தோல்விகள் ஏற்பட்டால், அதைத் திரும்பச்செய்யாதிருக்க உதவும், பாடமாக – தம்மையே திருத்தி உயர்த்தும் வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதற்காக சோர்வடைவதோ தலை குனிவதோ வேண்டியதில்லை.

நம்முடைய சயல், மற்றவர்களின் நியாயமான உரிமைகளின் குக்கிடாதபோது, மற்றவரகள் என்ன நினைப்பார்களோ என்று கற்பனை செய்து பயப்படத் தேவையில்லை.

குழந்தைகளுக்கு எந்தத்துறையில் ஈடுபாடு அதிகம் உள்ளதோ அதை அறிந்து ஊக்குவித்தால் அவர்களின் திறமை அதிசயிக்கும் வண்ணம் வெளிப்படும். அவர்களின் சிறு சாதனைகளையும் பாராட்ட தவறக் கூடாது.

பொதுவாக ‘ஏ’ வகை (A Type Behaviour) குணமிக்கவர்கள், தம்முடைய எண்ணங்களை விரிவுப்படுத்தி, அனைவரையும் நேசித்து செயலாற்றினால், சிறந்த மனிதராவார்; அபாய நோயிலிருந்தும் விடுதலை பெறுவார். வாழ்த்துக்கள்!

டாக்டர் ஜி. இராமநாதன் எம்.டி.
உடையாம்பாளையம், கோவை

 

1 Comment

  1. mythi says:

    great,,inum irthupola palavtrai pakirunggal please….

Post a Comment


 

 


February 1991

நீங்கள் எப்படி?
உலகம் உன்னில்
இன்றைய சூழ்நிலையில் நாம்
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்
உலகு ஒரு குடும்பம் – டாக்டர் மு. அறம்
1991-ல் உங்கள் திட்டம்!
சிந்தனைத் துளி
எந்த திசை நோக்கி உன் பயணம்?
நீங்கள் வெற்றிபெற வேண்டுமா? இதோ இந்தப் படிக்கட்டுகளில் ஏறுங்கள்
அந்த ஜப்பானியக் கிழவர்
தன்னம்பிக்கை