Home » Editorial » இன்றைய சூழ்நிலையில் நாம்

 
இன்றைய சூழ்நிலையில் நாம்


admin
Author:

அமெரிக்க ஈராக்கிய போர் உலகின் அமைதியைக் குலைத்து அச்சத்தைத் தோற்றுவித்துவிட்டது.

ஈராக் அதிபருக்கு உலகமே வேண்டுகோள் விடுத்தும் அவர் ஏற்றுக் கொள்ளாதது மிகவும் வருந்தக்க நிகழ்ச்சியாகும்.

ஒரு நாட்டை மற்றொரு நாடு பிடித்துக் கொள்வது என்பது எப்போது நடந்தாலும் நீதிக்கு புறம்பான செயலேயாகும்.

ஐ.நா. சபை எவ்வளவோ முயன்றும் போர் தவிர்க்க முடியாத்து ஆகிவிட்டது. பன்னாட்டுப் படைகள் வெற்றி பெற்று அநீதிகள் அகற்றப்பட வேண்டும். அதுவும் விரைந்து முடிந்து மக்கள் மனதில் அச்சம் நீங்கி அமைதி நிலவ வேண்டும் என்ற தன்னம்பிக்கை வாசகர்களின் விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதுவரை தனிமனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில நியதிகளை நினைவு கூர்வோம்.

பொருள்கள் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சத்தில் தேவைக்கு அதிகமாக எந்தப் பொருளையும் வாங்கி வைக்காமல் இருப்போம்.

எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம்/ வீணாக மின் விளக்கு எரிதல், மின் விசிறி ஓடுதல் முதலியவற்றை முடிந்த அளவு குறைப்போம்.

தவிர்க்க முடியாத பயணங்கள் தவிர பிற பயணங்களை இப்போதைக்கு நிறுத்தி வைப்போம்.

பேருந்துகளின் கூட்ட நெரிசலை மனதில் கொண்டு அருகில உள்ள இடங்களுக்கு முடிந்தால் நடந்தும் அல்லது சைக்கிளிலும் சென்று வருவோம்.

சாதிமத இன உணர்வுகளைத் தூண்டிவிடும் வீணான பேச்சுக்கள் விவாதங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்வதை முழுமையாகத் தவிர்ப்போம்.

உழைப்பதில், உற்பத்தியைப் பெருக்குவதில் நாட்டம் செலுத்துவோம்.

இரத்த தானம், கண் தானம் போன்ற சிந்தனையில் ஈடுபட்டு அவற்றைச் செயல்படுத்த முனைவோம்.

குறுகிய எல்லைகளைக் கடந்து, உலகம் ஒன்று, உலக மக்கள் அனைவும் உரிமையோடும் அமைதியோடும் வாழ நம் பங்கினை ஆற்றுவோம்.

நாம் ஒரு முன் உதாரண மனிதராக நடந்து கொள்வோம்.

தன்னம்பிக்கை வாசகர்கள் இந்தச் சூழ்நிலையில் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்களாக.

– ஆசிரியர் குழு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment