Home » Articles » விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்

 
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்


admin
Author:

எனது பதினேழாவது வயதில் வயலூர் முருகன் கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பும் வழியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒரு கால் இழந்தேன். எனினும் இதயத்தில் சூழ்ந்த இருளை அகற்றி – புதிய பாதையை உருவாக்கிக்கொள்ளும் தன்னம்பிக்கையுடன் செயற்கைக் காலைப்பொருத்திக்கொண்டு – சொல்லொன்னாத சிரமங்களை மேற்கொண்டு! நடனப் பயிற்சியைத் தொடர்ந்து மீண்டும் அதே முருகன் சந்நிநியில் நடனமாடியதை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது! இது எனது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் மட்டுமல்ல. அந்த வயலூர் முருகனின் அருளாலும்தான் என்பதில் ஐயமில்லை! இந்த நிகழ்ச்சியைத் தான் மயூரியாகப் படமெடுத்து – பெரும் வெற்றி கண்டார்கள்!

எனது நடன நிகழ்ச்சிகள் அரபு நாடுகளிலும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸதிரேலியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும் நடந்திருக்கின்றன. அந்த நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் புனர் வாழ்வுக்காகவே நடத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.

அனுதாபம் என்பது உள்ளத்தில் உருவானால் போதும், உதட்டிலே உருவாகி அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை மேன் மேலும் அதிகரித்துவிடக் கூடாது.

வெளிநாடுகளில் – குறிப்பாக அமெரிக்காவில், லண்டனில் ஊனமுற்ற ஒருவர் கீழே தவறி விழுந்து விடுகிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். வெளியார் உதவியை அந்த ஊனமுற்றவர் ஏற்றுக் கொள்ளுவதில்லை! என்ன கஷ்டப்பட்டாலும் சொந்த முயற்சியிலேயே நின்று, நிலைக்க விரும்புவார்கள்.

அப்படிப்பட்ட தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் நமது நாட்டிலும் ஊனமுற்றவருக்கு ஏற்பட வேண்டும். நாம் அவர்களை மறைமுகமாக செயல்வடிவில் ஆதரிக்க வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1991

நீங்கள் எப்படி?
உலகம் உன்னில்
இன்றைய சூழ்நிலையில் நாம்
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்
உலகு ஒரு குடும்பம் – டாக்டர் மு. அறம்
1991-ல் உங்கள் திட்டம்!
சிந்தனைத் துளி
எந்த திசை நோக்கி உன் பயணம்?
நீங்கள் வெற்றிபெற வேண்டுமா? இதோ இந்தப் படிக்கட்டுகளில் ஏறுங்கள்
அந்த ஜப்பானியக் கிழவர்
தன்னம்பிக்கை