Home » Articles » உலகு ஒரு குடும்பம் – டாக்டர் மு. அறம்

 
உலகு ஒரு குடும்பம் – டாக்டர் மு. அறம்


அறம் மு
Author:

(சென்ற இதழ் தொடர்ச்சி)

குழந்தையிலிருந்து தொடங்குவோம்

மனித மேம்பாடு குழந்தையிலிருந்து தொடங்குகிறது. குடும்பதிலிருந்து தொடங்குகிறது.

இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும்வ வளரும் நாடுகளில் 40.000 குழந்தைகள் (5 வயதிற்குக் கீழ்) அடிப்படை வசதி இன்மையால் இறக்கின்றன. இதனை நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் நிறுவனம் (U.N.O.) அண்மையில் குழந்தைகளின் உரிமகள் சாசனம் (Convention of the Rights of the Child) ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது.

இந்த ஐ.நா. சாசனத்தை எல்லா நாடுகளும் ஏற்க வேண்டும் அண்மையில் இந்திய அரசு ஏற்பு அறிவித்ததற்குப் பாராட்டுத் தெரிவிக்கிறேன். இதுபோல் உலகில் உள்ள 160 நாடுகளும் ஏற்பு அறிவிக்க வேண்டும். அமுல்படுத்த வேண்டும். அமுல்படுத்தினால் வரும் பத்தாண்டில் 5 கோடி குழந்தைகள் பிழைப்பார்கள்.

உலகக் கண்ணோட்டம்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பூங்குன்றனார் 2,000 ஆண்டுகட்கு முன்றே கூறினார். தமிழ்நாட்டில் எப்பொழுதும் உலக்க் கண்ணோட்டம் உண்டு. இன்று உலக சமுதாயம் உண்மையிலேயே உருவாகி வருகிறது. இன்று மனித வரலாற்றில் முக்கிய மாறுதல் கட்டம். உலகம் குடும்பம் ஆக வேண்டும். அதற்கு ஊர் குடும்பம் ஆக வேண்டும். ஆகவே ஊர் குடும்பம் ஆகுக!

Think globally, Act localy

உலகளாவிய சிந்தனை, ஊராளாவிய செயல்
நன்றி: சர்வோதயம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1991

நீங்கள் எப்படி?
உலகம் உன்னில்
இன்றைய சூழ்நிலையில் நாம்
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்
உலகு ஒரு குடும்பம் – டாக்டர் மு. அறம்
1991-ல் உங்கள் திட்டம்!
சிந்தனைத் துளி
எந்த திசை நோக்கி உன் பயணம்?
நீங்கள் வெற்றிபெற வேண்டுமா? இதோ இந்தப் படிக்கட்டுகளில் ஏறுங்கள்
அந்த ஜப்பானியக் கிழவர்
தன்னம்பிக்கை