Home » Cover Story » 1991-ல் உங்கள் திட்டம்!

 
1991-ல் உங்கள் திட்டம்!


கந்தசாமி இல.செ
Author:

மார்கழித் திங்கள் -டிசம்பர் மாதம் – நாம் பழக்கப்பட்டு வருகின்ற ஆங்கில ஆண்டின் முடிவு- 1990 விடை பெற்றுக்கொள்கிறது. இந்த வழியனுப்பு விழாவிகு முன்னர், நாம் சிந்திக்க வேண்டியது ஒன்று உண்டு.

என்னென்ன செய்தோம்?

இந்த ஆண்டில் நாம் செய்தவை என்னென்ன? செய்ய நினைத்தும் தவறியவை – முடியாமல் போனவை என்னென? அதற்குரிய காரணங்கள் என்னென்ன? என்றெல்லாம் சற்று நேரம் ஒதுக்கிச் சிந்திக்க வேண்டும்.

சுய விமர்சனம் தேவை

நாட்குறிப்பு எழுதுகின்றவர்கள் ஓராண்டின் நாட்குறிப்பினைப் புரட்டிப் பார்த்து உண்மையை அறியலாம்; மனதிலேயே எல்லாம் வைத்திருப்பவர்கள் மாத வாரியாக எண்ணிப் பார்த்து அறியலாம். இப்படி நம்மை நாமே கனித்துப் பார்ப்பது (Sef Assesment) மிகவும் பயனுள்ள செயலாகும். நமது வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வாய்ப்பாகவும் அமையும்.

அனுபவங்களைப் பயன்படுத்துவோம்

இந்த ஆண்டு சிலருக்குப்பயனுள்ள ஆண்டாகக் கழிந்திருக்கலாம். சிலருக்குத்துன்பம் நிறைந்த ஆண்டாகவும் இருர்ந்திருக்கலாம். என்ன நேர்ந்திருந்தாலும் கடந்த காலத்திற்காக வருந்தாமல் – இந்த அனுபவங்களைப் பயன்படுத்தி வருங்காலத்திற்கு வரவேற்பும் கூறுவோம். நிகழ்காலத்தில் வாழத்தொடங்குவோம்.

நம்பிக்கையே முதல் வெற்றி

புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்பும், நம்பிக்கைதான். எல்லாவற்றிற்கும் முதல்படி. வாழ்வில் நல்லதையே எதிர்நோக்குங்கள். எண்ணங்களே வாழ்க்கை. நமது எண்ணங்களின்படிதான் நம் செயல்கள் அமைகின்றன. நீண்ட காலமாக நீங்கள் என்ன எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவற்றின் விளைவுதான் இன்றைய உங்களது வாழ்க்கை- அதனால் நம்பிக்கையோடு நல்லதையே எண்ணுங்கள் – அதற்காக உழையுங்கள்.

திட்டமிடுங்கள்

இந்த ஆண்டிற்கு என்று திட்டமிடுங்கள். இந்த ஆண்டு முழுவதும் என்னென்ன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் என்பதை முதலில் வரிசைப்படுத்துங்கள். ஒரு தாளில், ஒரு நாட்குறிப்பில் எழுதுங்கள். பொருளாதாரத்தில் தொழிலில் -குடும்பத்தில்-சமுதாயத்தில் ந்த அளவு வளர்ச்சியை எதிர்பார்க்கிறீர்கள்? அந்த வளர்ச்சிக்காக என்னென்ன செயல்களைச் செய்யப் போகிறீர்கள்? அதற்கு என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று எழுதுங்கள். திட்டமிடாத வாழ்க்கை கால் போன போக்கில் நடப்பதைப் போல எந்த இடத்தையும் சென்று அடைய முடியாது.

காலவரையறை செய்யுங்கள்

ஏராளமாகத் திட்டங்கள் தீட்டலாம். எதையும் முடிக்கிட்டால் என்ன பயன்? அதனால் எந்தத் திட்டத்திற்கும் கால அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். பத்து நாள், ஒரு மாதம், இரண்டு மாதம் என கால அளவு நிறைவேறுவதில்லை – நிறைவேறினாலும் காலங்கடந்த செயல் பயன்தருவதில்லை. அதனால் உங்கள் செயல்களுக்குக் கால எல்லையை நிர்ணயுங்கள். அதுதான் வளர்ச்சிக்கு வழி.

செயலில் இறங்குங்கள்

வாழ்வில் வெற்றிபெறச் செயல்தான் முதல்படி. சிந்தித்துச் செயல்பட வேண்டியது என்பது உண்மைதான். ஆனால் பலர் சிந்தித்துக் கொண்டே பல மாதங்கள் – பல ஆண்டுகளை – ஏன் வாழ்நாளையே கடத்தி விடுகின்றவர்களும் உண்டு. சிந்திப்பதற்குக்கூட ஒரு கால அளவு உண்டு. செயலுக்கு ஏற்ற கால அளவு கொடுத்து முடிவு எடுங்கள். எடுத்தபின் செயலில் இறங்குங்கள் – வெற்றி தோல்விகள் என்பது இயற்கை- ஆனால் வாழ்வின் இறுதி இலட்சியம் வெற்றிதான் – இடையறாத செயல் இறுதியில் வெற்றியையே நல்கும். இது ஏதோ அறிவுரையல்ல. பலரது வாழ்வின் அனுபவம்.

சரியான அணுகுமுறை தேவை

தனி மனித உழைப்பில் செய்கின்ற எந்தச் செயலிலும் விரைவில் வெற்றி கண்டுவிட முடியும். குடும்பத்தார் துணையோடு. வேலையாட்கள் துணையோடு செய்கின்ற செயல்கள்- அரசாங்கத்தின் உதவியோடு செய்கின்ற செயல்கள் – இப்படிச் செயல்களில் பல விதம் உண்டு. அதற்கான அணுகு முறைகள் வெவ்வேறானவை. ஒரு அரசாங்க அலுவலரைப் போய் நியாயமாக இருந்தாலும் அதிகார தோரணையில் அணுகினால் எதிர் விளைவாகவே முடியும். பலர் நியாயம் – சரியானது என்ற கருத்தில் சரியான அணுகு முறையோடு செயல்படாமல், தன்னை மாற்றிக் கொள்ளாமல் மற்றவர்களிடம் மட்டும் மாற்றத்தை எதிர்பார்த்து துன்பத்திற்கும் தோல்விக்கும் ஆளாகிறார்கள். அவர்கள் சரியான அணுகுமுறையோடு செயல்படுவார்களானால் பல்வேறு செயல்கள் சுலபமாக எளிமையாக முடியும்.

தொண்ணூற்றி ஒன்றே வருக

இந்தப் புத்தாண்டை வரவேற்று மகிழுங்கள். இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் வளம் கூட்டும் ஆண்டாக அமையட்டும். நீங்கள் நன்றாக – மன நிறைவோடு இருந்தால் – இந்தச் சமுதாயம் நன்றாக இருக்கும். இந்தச் சமுதாய மேம்பாட்டிற்காக செலவு செய்யுங்கள். இது நமது சமுதாயத்திற்கு ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய இன்றியமையாத கடமையாகும். வாழ்த்துக்கள்!

இல.செ.க.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1991

நீங்கள் எப்படி?
உலகம் உன்னில்
இன்றைய சூழ்நிலையில் நாம்
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்
உலகு ஒரு குடும்பம் – டாக்டர் மு. அறம்
1991-ல் உங்கள் திட்டம்!
சிந்தனைத் துளி
எந்த திசை நோக்கி உன் பயணம்?
நீங்கள் வெற்றிபெற வேண்டுமா? இதோ இந்தப் படிக்கட்டுகளில் ஏறுங்கள்
அந்த ஜப்பானியக் கிழவர்
தன்னம்பிக்கை