Home » Cover Story » உலகம் ஒரு குடும்பம் ஆகவேண்டும்

 
உலகம் ஒரு குடும்பம் ஆகவேண்டும்


அறம் மு
Author:

இன்றைய பொருளாதாரம் உலகளாவிய நிலையில் அமைந்துள்ளது. ஆகவே, உலக சமுதாயம், தேசிய சமுதாயம் ஆகியவற்றிற்கிடையே நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டுவிட்டன. இந்தியா போன்ற பெரிய பரந நாட்டில் தேசியப் பொருளாதாரத்திற்கும் மாநிலப் பொருளாதாரத்திற்கும் இடையே நெருங்கியே தொடர்புகள் உண்டு.

ஒரு முனையில் ஊராட்சி, இன்னொரு முனையில் உலக ஆட்சி. இவ்விருமுனைகளுக்கிடையே மாவட்ட ஆட்சி, மாநில ஆட்சி, தேசிய ஆட்சி மூன்று நிலைகள் உள்ளன. வளர்ச்சித்துறையின் எந்த அம்சத்தையும் எடுத்துக்கொள்வோம். வேளாண்மை, தொழில், கல்வி, சுகாதாரம், ஒவ்வொரு துறைக்கும் இன்று உலக அளவில் நிறுவனங்கள் உள்ளன. தேசிய நிலையில் நிறுவனங்கள் அது போலவே மாநில நிலையிலும் நிறுவனங்கள் உள்ளன.

குடும்ப முறை

சமுதாயத்தின் இயல்பான மூல உறுப்பு; குடும்பம். இந்திய சமுதாயத்தின் சிறப்பு இக்குடும்ப அமைப்பு இன்றும் உறுதியாக உள்ளது என்பதே. அமெரிக்காவில் அல்லது ஐரோப்பாவில் குடும்ப அமைப்பு வலுவற்றுப் போய்விட்டது. இதனால் புதிய பிரச்சினைகள் அங்கே தோன்றியுள்ளன. இது நமக்கு எச்சரிக்கை. மேலை முறையைக் கண் மூடிப் பின்பற்றுவோர் கவனிக்கவும்.

குடும்பத்தின் சிறப்பு என்ன? குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாக உள்ளனர். ஒருவருக்கு இன்பம் வந்தால் எல்லோரும் இன்பம் கொள்கின்றனர். ஒருவருக்கத் துன்பம் வந்தால் எல்லோருக்கும்துன்பம் குடும்பத்தில் மூன்று தலைமுறைகள் சேர்ந்து வாழ்கின்றனர். குடும்பம் ஓர் அன்பு அமைப்பு, சமுதாயமும் ஓர் அன்பு அமைப்பாக மாற வேண்டும்.

குடும்பங்களின் கூட்டு கிராமம். ஆங்கிலத்தில் சொன்னால் ‘Federation of familiies” கிராமம் ஒரு பெருங்குடும்பம். ஒரு கிராமம் குடும்பமுறையில் இயங்க வேண்டும். ஆங்கிலத்தில் இதனை ‘Familial principle” என்று சொல்கிறோம்.

குடும்ப முறையை நாம் கடைப்பிடித்தால் ஊர்ச் சமுதாயத்தில் ஒற்றுமை உண்டாகும். கூட்டுறவு வளரும். எல்லோரும் சேர்ந்து முன்னே நல்ல சூழ்நிலை உருவாகும். இதுவே இந்திய நாகரிகம். தமிழ் நாகரிகம்.

‘வாசுதேவ குடும்பகம்’

இந்தக் குடும்ப முறை ஊரோடு நிற்பதல்ல. மாவட்டமும் ஒரு குடும்பம்போல் ஆக வேண்டும். இது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். மாநிலமும் ஒரு குடும்பம் போல் இயங்க வேண்டும். நாடும் அப்படியே. உலகமும் ஒரு குடும்பம். வாசு தேவ குடும்பகம்’ என்பது வடமொழியில் உள்ள அழகான தொடர்.

ஆன்மீக நோக்கம்

மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? இது அடிப்படையான கேள்வி. இந்தக் கேள்விக்குத் தெளிவான விடை தர வேண்டும். நமது நாகரிகம் சொல்வது வாழ்க்கையின் நோக்கம் மெய்க்காட்சி அல்லது தெய்வதரிசனம்.

மேலைச் சமுதாயத்தில் வாழ்க்கையின் இறுதி நோக்கம் பற்றிய தெளிவு இல்லை. அங்கு உண்மையை நாடுதல் இல்லாமல் இல்லை. அதன் நல்ல வடிவம் மேலை நாட்டு அறிவியல். ஆனால், மேலை நாகரிகத்தில் உலகாயதம் மண்டிக் கிடப்பதால் அங்கு வன்முறையும்போரும் மிகுந்துள்ளன. மேலை நோய் நம்மையும் பிடித்துள்ளது. ஆகவே வன்முறைக் கிளரச்சி இங்கும் மிகுந்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சி

நம் நாடு அரசியல் விடுதலை பெற்ற பிறகு நாம் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளோம். வேளாண் துறையில் பெரும் வெற்றி கிட்டியுள்ளது. உணவுத் தானிய உற்பத்தி 5 கோடி டன்னிலிருந்து 18 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. தன் நிறைவு, ஏற்றுமதி ஆற்றல் நமக்கு வந்துள்ளன. இது மாபெரும் வெற்றி. இது போல தொஇல் துறையிலும் நாம் பெறும் வெற்றி பெற்றுள்ளோம்.

ஆனால், நாட்டில் அமைதி இல்லை. கலவரமும் போராட்டமும் பெருகி வருகின்றன. இதற்குக் காரணம், நாம மேலை நாட்டு முறைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது.

எட்டாவது திட்டம்

எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ‘வேலை உரிமை’ (Right to Work) கொடுக்கப்படுகிறது. இது ஓர் அடிப்படை உரிமை (Fundamental right) ஆகும் என்று கூறப்படுகிறது. இது வரவேற்தக்கது. ஆனால், ‘வேலை உரிமை’யை நடைமுறையில் அமல்படுத்த முடியுமா என்பது அறிஞர்கள் கேட்கும் கேள்வி. வேலை வாய்ப்பினை அடிப்படை உரிமை என்று பிரகடனம் செய்தால் மட்டும் போதாது.

வேலை தேடும் ஒவ்வொருவருக்கும் வேலை கொடுப்பது எளிதல்ல. கடினம். ஆனால், எது முடியுமென்றால் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளிப்பது.

ஊராட்சி

இந்தப் பொறுப்பை ஊராட்சியிடம் கொடுக்க வேண்டும். அரசு மட்டும் இதைச் சாதிக்க முடியாது. அரசு ஊராட்சிக்கு ஆதரவாக இருக்கவேண்டும். ஊராட்சிக்குத் தேவையான நிதியையும் அதிகாரத்தையும் கொடுத்துவிட வேண்டும்.

ஆகவே பரவல் முறை ஆட்சி தேவை. இதையே மகாத்மா காந்தி வறுபுறுத்திக் கூறினார். எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறையும் இதனை வற்புறுத்துகிறது. இதை நாம் வரவேற்போம்.

எட்டாவது திட்ட அணுகுமுறை பஞ்சாயத்து ஆட்சியைக் கொண்டுவர அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும் என்று கூறுகிறது. இதனை உடனடியாக கால தாமதம் செய்யாமல் செய்ய வேண்டும்.

மலிவு மது

மனித மேம்பாட்டிற்கு கல்வியும் கலையும் தேவை. மனித மேம்பாட்டிற்கு தடையாக இருப்பவை மதுவும் – போதைப் பொருளும். கல்வி மூலமாக கதை மூலமாக மனித மனம் வளரும். ஆனால், மதுவின் மூலம் போதைப்பொருளின் மூலம் மனம் குழப்பமுறும். வலுவிழக்கும். மதுவினால் குடும்பம் கவலையுறும்.

திருவள்ளுவர் முதல் பல பேரறிஞர்கள் மதுவைக் கண்டித்திருக்கிறார்கள். திருவள்ளுவர் வழியைப் பின்பற்றுகின்ற தமிழக அரசு ‘மலிவு மது’ பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாண்பு மிகு முதல்வர் இதுபற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

போதைப் பொருள் இன்னொரு பெரிய ஆபத்து, இது உலகம் எங்கும் பரவிவரும் சமூக நோய். இதையும் ஒழிக்க வேண்டும்.

நன்றி: சர்வோதயம் அக்-90

(மேலும் விவரங்கள் அடுத்த இதழில்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1991

உலகம் ஒரு குடும்பம் ஆகவேண்டும்
காவிரி வீணாகாமல் தடுக்க அமெரிக்க இந்தியர்கள் யோசனை
திருமணமும் மருத்துவ சோதிடமும்
அமெரிக்காவில் ஒரு தன்னம்பிக்கை
வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள எளிய வழி..
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்