Home » Articles » திருமணமும் மருத்துவ சோதிடமும்

 
திருமணமும் மருத்துவ சோதிடமும்


இராமநாதன் கோ
Author:

ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணமும், குழந்தை பெறுதல் முக்கித்துவமான நிகழ்ச்சிகளாகும். திருமணம் என்றவுடன் பல்வேறு விவரங்களையும் மணமகளின் பொருத்தங்களையும் ஆராய்து செயல்படுகிறோம். மருத்துவ முறையில் சில அம்சங்களையும் ஆராய்ந்து செயல்படுகிறோம். மருத்துவ முறையில் சில அம்சங்களைப் பின்பற்றினால் அது மேலும் சிறப்பான பொருத்தமாக அமையும்.

இரத்தவகை: (Blood grouping and typing)

நமது இரத்தத்தை A, B, O, AB என்ற வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவை மேலும் Rh பாஸிடிவ் (RH POSITIVE) : Rh நெகடிவ் (RH NEGATIVE) எனப் பிரிக்கப்படுகிறது. நம்மில் பெரும்பாலோர் ஆர்.எஸ்.பாஸிடிவ்-வாகத்தான் இருப்போம். பெற்றோரில், தந்தை Rh பாஸிடிவ்-வாகவும் தாய் Rh நெகடிவ்-வாகவும் இருந்து பிறக்கும் குழந்தை Rh பாஸிடிவாக இருந்து விட்டால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே காமாலை ஏற்பட்டு இறக்க நேரிடலாம்; அல்லது கருவிலேயே வளர்ச்சி தடைபட வாய்ப்புண்டு. அதை அடுத்துப் பிறக்கின்ற குழந்தைக்கும் இந்த பாதிப்பு உண்டாகும். இதை Rh IMCOPATABILITY என்கிறோம்.

இன்றைய மருத்துவத்தில் இதைச் சரிபடுத்த ANTI-D-IMMUNGLOBIN என்ற மருந்தை தாய்க்கு செலுத்தி, இதை முழுதும் சரிப்படுத்திவிடலாம். இருப்பினும் திருமணத்தைப் பற்றி எத்தனையோ விவரங்களை பேசும் நாம் மணமகனும் மணமகளும் Rh பாஸிடிவ் அல்லது Rh நெகடிவ் என்பதைப் பேச்சுவாக்கில் கேட்டு அந்தப் பொருத்தத்தையும் செய்தால் இதைத் தடுத்துவிடலாம்.

உறவு முறைத் திருமணங்கள்: (CONSANGUINOUS MARRIAGE)

நமது நாட்டில் நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்வது தொன்றுதொட்டு வந்துள்ள பழக்கமாகும். அதுவும் இரத்த சம்பந்த உறவுகளில் (தமக்கையின் மகனை) திருமணம் செய்தல் ஒரு முறையாக கையாளப்படுகிறது. மருத்துவமுறையில் இதுபோன்று உறவு முறையில் திருமணம் செய்தவர்கட்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவிலேயே உண்டாகும் நோய்கள் (CONGENITAL DISEASES) மூளை வளர்ச்சி குன்றியிருத்தல், காது கேளாமை, இதயத்தில் துவாரம் போன்றவைகள் வர வாய்ப்புண்டு. இந்நோய்கள் வர வேறு பல காரணங்கள் உண்டு. அக்காரணங்கள் இல்லாத போது உறவு முறையில் திருமணம் செய்தோருக்குப் பிறக்கும் குழ்தைகளுக்கு உறவு முறையில்லா (UNRFLATED) திருமணங்களினால் பிறக்கும் குழந்தைகளை விடக் கணிசமான சதவீதம் அதிகம் இந்நோய்கள் வருவதாக கணக்கீடுகள் காட்டுகின்றன.

டாக்டர் ஜி. இராமநாதன்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1991

உலகம் ஒரு குடும்பம் ஆகவேண்டும்
காவிரி வீணாகாமல் தடுக்க அமெரிக்க இந்தியர்கள் யோசனை
திருமணமும் மருத்துவ சோதிடமும்
அமெரிக்காவில் ஒரு தன்னம்பிக்கை
வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள எளிய வழி..
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்