Home » Articles » பயனுள்ள ஒரு பாடத்திட்டம்

 
பயனுள்ள ஒரு பாடத்திட்டம்


கந்தசாமி இல.செ
Author:

புதுவைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் இளநிலை ஆய்வாளர் (எம்ஃபில்) பட்டத்திற்கு உரிய பாடமாகத் தமிழ், பிற இலக்கியங்களின் வழி ஆளுமை வளர்ச்சி (Personality Development through Literatures) என்ற பாடதிட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் நடக்கிறது. பாடத்திட்டத்தை டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் வகுத்தளித்துள்ளார்கள்.

“தமிழில் தன்னம்பிக்கை வளர்க்கும் நூல்கள் ஒரு மதிப்பீடு” என்னும் தலைப்பில் செல்வி ப. அனுராதா என்பவர் டாக்டர் க.ப. அறவாணன் அவர்கள் மேற்பார்வையில் கீழ் ஆய்வு செய்து வருகிறார்.

‘புதுவைப் பல்கலைக்கழகம்
நமக்குத் தொழில் எழுத்து
நாட்டுக்கு உழைத்தல்
உயர்வுக்குநல் வழிகாணல்”

பாரதியால் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக (senatemembers) தமிழக ஆளுநர் அவர்கள் எம்மை நியமித்தமை குறித்து பாராட்டு விழாக்கள் நடத்தியும் வாழ்த்துக்கள் அனுப்பியும் நேரில் வந்து பாராட்டுக்களைத் தெரிவித்தும் பெருமைப்படுத்திய அனைவருக்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக பல்சமய உறவு நிறுவனமாகிய திவ்யோதயா தமிழ்நாடு இலக்கியப்பேரவை கல்வி அறிஞர்கள் நண்பர்கள் தன்னம்பிக்கை வாசகர்கள் ஆகியோர் தங்கள் பாராட்டுக்கள் மூலம் எனது கடமையையும் பொறுப்பையும் உணர்த்தினார்கள். அவர்கள் அனைவர்கட்கும் எனது நன்றிகள் பலப்பல.

இப்பேரவை உறுப்பினர் பதவியை ஒரு ஆடம்பர மணிமுடியாகக் கருதி அணிந்து மகிழாமல் அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கல்வித்துறைக்கும் இச்சமுதாய மேம்பாட்டிற்கும் பாடுபடுவேன் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரன்புடன்
இல.செ. கந்தசாமி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1990

உலக சமாதான முயற்சிக்கு முதல் வெற்றி
வாழ்வில் வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சிறப்பான எட்டுப் பண்புகள்
நேரம் பொன்னானது
நாட்டின் இன்றைய சிக்கல்களும் தீர்வுகளும்
பயனுள்ள ஒரு பாடத்திட்டம்
'நல்லெண்ணமே சிறந்த மருந்து'
நீங்கள் இறுக்கமான மனிதரா? இணக்கமான மனிதராகுங்கள்!
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…
போர் தொடு…!
சோகங்களைச் சுமப்பதற்காக அல்ல வாழ்க்கை! சுகங்களைப் பெறுவதற்காக அமைந்ததே வாழ்க்கை!
பாவேந்தர் அறைகூவல்