Home » Articles » நீங்கள் இறுக்கமான மனிதரா? இணக்கமான மனிதராகுங்கள்!

 
நீங்கள் இறுக்கமான மனிதரா? இணக்கமான மனிதராகுங்கள்!


கந்தசாமி இல.செ
Author:

(சென்ற இதழ் தொடர்ச்சி)

6 எந்த ஒரு செயலைச் செய்தாலும் சற்றுக் கூடுதலான நேரத்தை ஒதுக்குங்கள். அதற்குள் அது முடிந்துவிடும். இல்லாவிடினும் முடியும் தருவாயில் இருக்கும். அதனால் நமக்கு மன உலைச்சல் ஏற்படாது.

7. எங்கேனும் காத்திருக்க நேர்ந்தால் படிக்க கையில் ஒரு புத்தகம் வைத்திருங்கள். அல்லது அங்குள்ள மக்களைப் பற்றிச் சிந்தியுங்கள். உங்களை நேசிப்பவர்களைப் பற்றி எண்ணிப்பாருங்கள். உங்கள் வருங்காலத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அங்குள்ள பிறரோடு அன்பாகப் பேசி அந்த நேரத்தைப் பயனுள்ளதாக்குங்கள். அல்லது எரிச்சலடையாமல் இருக்கவாவது பயன்படுத்துங்கள்.

8. ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை ஒத்து கொள்ளாதீர்கள்? அல்லது இதை இப்போது முடித்துத்தருகிறேன் என்று நெருக்கமாக முடிவு தேதி அறிவிக்காதீர்கள். 11 மணிக்குச் சந்திப்பு என்றால் 11 முதல் 11-30 வரை என்று சொல்லுங்கள். இதனால் அதிக மன உழைச்சல் தோன்றாது.

9. வழக்கமாக எழுதுவதைவிட ஒரு 15 மணித்துளிகள் முன்னதாக எழுந்திருங்கள். உங்கள் வேலைகளை அவசரமில்லாமல் தொடங்க அது வாய்ப்பாக இருக்கும். முன்னதாக எழுந்ததற்கு உங்கள் மனசில் மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் தோன்றும்.

10. ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையில் பேசாதீர்கள். இது பண்புடையவர்கள் செயல் அல்ல. பிறர் பேசுவதை முதலில் கேட்கப் பழகுங்கள். அதேபோல் ஒருவர் மெதுவாகச் செய்து கொண்டிருக்கும் வேலையை இடையில் புகுந்து அதிகரம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். அவ்வேலை முடியும் வரை பொறுத்திருங்கள். பொறுக்க முடியவில்லையாயின் அந்த இடத்தில் நிற்காதீர்கள். ஒதுங்கி விடுங்கள்.

11. ரயில் தாமதமாக வருவதற்கும், திடீரென்று உங்களை ஒருவர் வந்து சந்திக்க முனைந்ததற்கும், மழை, காற்று போன்று இயற்கை எதிராக நிற்பதற்கும் கோபிப்பது பயன்றற செயல் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

12. உங்களைச் சீண்டி விடுகின்ற நண்பர்களை சந்திப்பதைத் தவிர்த்து விடுங்கள். அப்படி நேர்ந்நாலும் அதை மிகவும் பெரிய செயலாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இதனால் உங்களைச் சுற்றிலும் பகைமைதான் பெருகும் என்பதை உணருங்கள்.

13 இணக்கமான நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் அதிகம் உங்களுக்குச் சொல்லாவிட்டாலும் நீங்கள் சொல்வதைக் கேட்டு ஒரு முன் மாதிரியாக நடப்பார்கள். அதுவே உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் நடந்து கொள்ள வேண்டிய முறையை அவர்கள் நடைமுறையில் உணர்த்துவார்கள்.

14. மிகவும் அவசரப்படும் பழக்கமும் போட்டியால் நிகழும் பகைமை உணர்வும் இதயத் துடிப்பை பாதிக்கும். முக்கிய காரணிகளாகும். முடிந்தால் மனம்விட்டுச் சிரிக்கப் பழகி இந்த மன உலைச்சலைப் போக்கிக்கொள்ளுங்கள்.

நன்றி
ரீடர்ஸ் டைஜஸ்டு
ஜேம்ஸ்–பிராடி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1990

உலக சமாதான முயற்சிக்கு முதல் வெற்றி
வாழ்வில் வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சிறப்பான எட்டுப் பண்புகள்
நேரம் பொன்னானது
நாட்டின் இன்றைய சிக்கல்களும் தீர்வுகளும்
பயனுள்ள ஒரு பாடத்திட்டம்
'நல்லெண்ணமே சிறந்த மருந்து'
நீங்கள் இறுக்கமான மனிதரா? இணக்கமான மனிதராகுங்கள்!
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…
போர் தொடு…!
சோகங்களைச் சுமப்பதற்காக அல்ல வாழ்க்கை! சுகங்களைப் பெறுவதற்காக அமைந்ததே வாழ்க்கை!
பாவேந்தர் அறைகூவல்