Home » Cover Story » ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…

 
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…


admin
Author:

இளம் வயதிலேயே தந்தை தாயை இழந்த அந்தப் பையன்கள் எட்டாம் வகுப்புவரை தம் சித்தப்பா அரவணைப்பில் படிக்கிறார்கள். அவரும் வசதி இல்லாதவர். லாடி டிரைவர்.

ஒருநாள் அந்தப் பையன்களை அழைத்து இனி நீங்கள் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவிடுகிறார்.

இருவரும் தினம் 1 ரூபாய் கூலியில் நிலம் அளக்கும்போது முட்டுக்கல் நடும் வேலையில் அமர்கிறார்கள். அவர்களுக்கு மூன்று மாதம் அதில் வேலை – காலையில் 4 இட்லி, மதியம் – நாலு இட்லி. அவ்வளவுதான் சாப்பாடு. சாப்பாட்டுச் செலவு போக மீதித்தொகையைத் தருவதாகச் சொன்னவர் கடைசி நேரத்தில் அவர்களை ஏமாற்றி விட்டு, போய்விட்டார்.

அந்த வேலைக்குப் பிறகு சென்னை பயணம் – அண்ணன் தம்பி இருவரும் பிரிந்துபோய் விடுகிறார்கள்.

அண்ணன் சென்னை சென்றார். கிடைத்த வேலை எல்லாம் செய்தார். உணவு விடுதி முதற்கொண்டு எங்கு எந்த வேலை கிடைத்தாலும் செய்தார். பிறகு கார்ஓட்டக் கற்றுக்கொண்டு டிரைவராகப் பணியாற்றினார். மனிதனாக வாழ நம்பிக்கை தோன்றியது.

சில ஆண்டுகள் அவர் சேர்த்துவைத்த 500 ரூபாயில் அவருக்குத் திருமணம். அந்தத் திருமணத்தில் பணம் இல்லாமையால்பட்ட அவமானத்தை நினைத்து இப்போதும கண்கலங்குகின்றார்.

சென்னையில் குடித்தனம், பழைய டிரைவர் வேலைதான். மனைவியின் அகால மரணம் மனச்சோர்வு, வறமை கைகால் விலங்காமல் தரையில் ஊர்ந்து பிச்சை எடுக்கும் நிலை – அரசு மருத்துவமனையில் அனுமதிப் பெறப்பட்டபாடு, நோயாளிக்குத்தான் இங்கு இடம், சாப்பாடு இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை என மறுப்பு. ஒருவாரம் இடம்பெற்று மீண்டும் நடக்கத் தொட்ங்கினார். சிறிதளவு தெம்பு வந்தது

கோயமுத்தூருக்கே திரும்பி வருகிறார். மீண்டும் டிரைவர் உத்தியோகம். தொழில் தொடங்க நினைக்கிறார்.

அரிசிக்கடை வைத்தார். அதில் முதல் தோல்வி. வாடிக்கையாளர்களிடம் அணுகுமுறையை மாற்றி அமைத்தல், உண்மையாக நடந்து கொள்வதே வளர்சிக்கு வழி என்ற முடிவுக்கு வருதல். அதன்படியே நடந்தார். அவர் வாடகைக்கு இருந்த கடையையே சொந்தமாக வாங்கித் தொழில் செய்யும் அளவிற்கு அணுகுமுறையில் வளர்ச்சி. சொந்தவீடு கார் வைத்து வாழும் வாழ்க்கை இப்படி ஒரு மனிதர் கோவையிலேயே இருக்கிறார். பொன்னி அரிசி மண்டி என்பது அவரது கடையின் பெயர்.

உண்மையான உழைப்பு – இடைவிடாத முயற்சி. அவரது சரியான அணுகுமுறை. இதுதான் அவரது வெற்றியின் ரகசியங்கள்.

டாக்டர் மு.வ.வும், டாக்டர் உதயமூர்த்தியும் அவரது ஆசான்கள். சத்தியசோதனை, படித்த பிறகு தான் வேறு நூல்களைப் படிப்பதையே நிறுத்திவிட்டேன் என்று தெளிவாகச்சொல்கிறார். உண்மையாக நடந்து கொள்வதைப் போன்ற உயர்வான செயல் வேறு ஒன்றுமில்லை. அப்படி வாழ்க்கையே வெற்றியான வாழ்வாகக் கருதுகிறேன் என்று தெளிவாகக் கூறுகிறார்.

முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தில் கோபுரம் கட்டி விளம்பரப்படுத்திக்கொள்வதைக் காட்டிலும் ஒன்றுமே இல்லாத மனிர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையேயும் சமுதாயம் சிக்கல்களுக்கு இடையேயும் தன்னம்பிக்கையாலும் விடா முயற்சியாலும் உயர்வதே சாதனையாகும். பொன்னி அரிசி மண்டியார்க்கு வளமான வாழ்த்துக்கள்!

இன்றைய இளைஞர்கள் தன்னம்பிக்கை விடாமுயற்சி என்ற இந்த முதலீட்டை சரியான அணுகுமுறையுடன் மூலதனமாகக் கொண்டு முன்னேறுவார்களாக.

–சிறப்பாசிரியர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1990

உலக சமாதான முயற்சிக்கு முதல் வெற்றி
வாழ்வில் வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சிறப்பான எட்டுப் பண்புகள்
நேரம் பொன்னானது
நாட்டின் இன்றைய சிக்கல்களும் தீர்வுகளும்
பயனுள்ள ஒரு பாடத்திட்டம்
'நல்லெண்ணமே சிறந்த மருந்து'
நீங்கள் இறுக்கமான மனிதரா? இணக்கமான மனிதராகுங்கள்!
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…
போர் தொடு…!
சோகங்களைச் சுமப்பதற்காக அல்ல வாழ்க்கை! சுகங்களைப் பெறுவதற்காக அமைந்ததே வாழ்க்கை!
பாவேந்தர் அறைகூவல்