தன்னம்பிக்கை இரண்டாம் ஆண்டில் தன் அடியினை எடுத்து வைக்கின்றது.
தன்னம்பிக்கை இதழ் மீண்டும் தனது இலட்சியத்தை ஒரு முறை நினைவுகூர்ந்து கொள்கிறது.
இளைஞர்கிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பது
சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது
மருத்துவம், பொறியியல் வேளாண்மை முதலிய அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வழி கோலுவது
தரமான இலக்கியப்படைப்பிற்கு ஆதரவு நல்குவது
இளைஞர்களிடையே உலகளாவிய பார்வையை உருவாக்குவது
முதல் கட்டமாக தமிழகத்தில் மாவடத்திற்கு 50 பேர் என்ற வகையில் ஆயிரம் பேரை ஒன்று திரட்டுவது. இந்த இலட்சியத்தில் ஓராண்டில் 50 விழுக்காடு வெற்றிகண்டுள்ளோம்.
தன்னம்பிக்கையால் வாழ்வில் உயர்ந்த நண்பர்களையே முன் உதாரணமாக்கிக் காட்டுவது.
பொழுது போக்கிற்கான இதழ் அல்ல. இவ்விதழ் பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க – ஒவ்வொரு எழுத்தும் பயன்பட வேண்டும் என்பதே தன்னம்பிக்கையின் விருப்பம்.
தன்னம்பிக்கையில் கேளிக்கைகளுக்கு இடமில்லை. கருமமே கண்ணாக இருப்போர்க்கு இலட்சிய நோக்கே முதன்மையானது.
முகம் தெரியாத நண்பர்கள் ஐயாயிரத்துக்கு மேல் இருந்தாலும் முகவரி தெரிந்தவர்கள் 500 பேர் மட்டும் இருக்கிறார்கள். நமக்கு எண்ணிக்கையை விட இதயம் ஒன்றிய நண்பர்களே முக்கியமானவர்கள்.
வருந்தி சேர்ப்பவர்களைவிட விரும்பிச் சேர்ப்பவர்கள் பயனுள்ளவர்களாக இருப்பார்கள்.
இப்போது இருக்கின்ற நண்பர்கள் அனைவரும் ஆலம் விதை போன்றவர்கள். விதைகள் மரமாகும் போது உலகத்து உயிர்கள் எல்லாம் நிழல்பெறும் – வாழ்வு பெறும்.
இந்த நாட்டுக்குக்காக நம் தன்னம்பிக்கைத் தேரினைச் செலுத்திக் கொண்டே இருப்போம்.
வாழ்க்கை – சோகங்களைச் சுமப்பதற்காக அல்ல! சுகங்களைப் பெறுவதற்காகவே!
தன்னம்பிக்கை உடையவன் சுகத்திற்குச் சொந்தக்காரன் ஆகிறான். தன்னம்பிக்கை உடையவன் இந்த உலகிற்காக உழைக்க முன் வருகிறான்.
நண்பர்களே! இந்தத் தன்னம்பிக்கை ஆண்டில் உங்கள் செயல்கள் “எடுத்தை முடித்தோம்” என்ற வகையில் முற்றுப் பெற்றவையாக அமையட்டும். தன்னம்பிக்கைக்காக உங்கள் நண்பர்களில் ஒருவரை அறிமுகப் படுத்துங்கள். அது தன்னம்பிக்கைக்குச் செய்கின்ற சேவையாக இருக்கட்டும்.
-ஆசிரியர் குழு

November 1990











1 Comment
மிக நன்றாக உள்ளது …. “தன்னம்பிக்கையில் கேளிக்கைகளுக்கு இடமில்லை. கருமமே கண்ணாக இருப்போர்க்கு இலட்சிய நோக்கே முதன்மையானது. ”
சேரன் ச