Home » Articles » சின்னம்

 
சின்னம்


வேல் முத்தரசு
Author:

நிகழ்காலத்தின்
உயிருள்ள அவமானங்களை
மனத் தாழிக்குள்
புதைத்து வை!

பூமியினால்
சபிக்கப்படுகிற போதெல்லாம்
அந்த சாபங்களையே
சாட்சிகளாய் வைத்து
முன்னேற்றத்திற்கான
சபதங்கள் செய்!

முதுக்குப் பின்னால்
உரசுகிற
விமர்சன நெருப்பையே
பாதை விரிப்பாய்
பயன்படுத்திக் கொள்!

என்றேனும் ஒரு நாள் வானொலி,
தொலைக்காட்சி,
முன்னணிப் பத்திரிகைகள்
உன்
முன்னேற்ற ரகசியம்
பற்றி
வியப்புடன் வினவும்!

ஆனால்
போராட்டங்களின்
குறிப்புகள் அனைத்தும் நினைவு விளிம்பில்
முடிந்து வை!

நிச்சயம் ஒரு நாள்
அதோ
அந்த நம்பிக்கைக் கொடியில்
நீ சின்னமாய் பொறிக்கப்படுவாய்!

கவிஞர் மீ. உமாமகேஸ்வரி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1990

சின்னம்