Home » Articles » எவரஸ்டு உச்சிக்கு

 
எவரஸ்டு உச்சிக்கு


admin
Author:

இளைஞர்களோடு கை குலுக்கி, கைரேகைகளை நலம் விசாரித்து, இதயத்தை நாடிப்பிடித்து, மூளையை சமாதனம் செய்து போர்வையின்றி எவரெஸ்டின் உச்சிக்கு இழுத்துச்செல்லும் தங்களின் பயணம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்!

மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கட்கு! வணக்கம் பல. 1.7.90 அன்று அண்ணபூர்ணா கலையரங்கத்தில் தங்கள் உரை கேட்டதோடு நேரில் கண்ட வாய்ப்புக்கு மகிழ்ச்சி அடைகின்றேன்.

இனாம், சலுகை, இலவசம்,மானியம் என்று எதிர்பார்க்காத, உழைத்து வாழும் சமுதாயத்தை உருவாக உழைக்கின்ற தாங்கள் வாழ்க பல்லாண்டு. நான் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. ஆனாலும் புத்தகங்கள் படிப்பது என் பொழுது போக்கு. தங்களின் “முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்” என்னைப் பெரிதும் கவர்ந்தது.

அந்த 10-12 மணிவரை நடந்த தங்கள் உரை, கலந்துரையாடல் ‘டேப்பாக்க் கேசட்டில்’ எடுத்து அனைவரும் பயன்பெறும் வகையில் அமைய வேண்உம் என விரும்புகிறேன். “ஒவ்வொரு மணித்துளியும் பயனுள்ள வழியில் கழிய வேண்டும் என்று துவங்கிய தங்கள் சொற்பொலிவம், காந்தியடிகள் என் வாழ்க்கையே இந்த நாட்டிற்கு தரும் செய்தி என்றதுபோல் தங்களின் உண்மையே சத்தியமே கடவுள்’ என்பது வரை தங்களின் உரையைப் புத்தகமாக வெளியிட்டால் மிகுந்த பலனளிக்கும்.

தன்னம்பிக்கை வாசகர்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1990

சரித்திரம்
அர்த்தமான விடியல்கள்
பெர்ட்ரண்டு ரஸ்ஸல்
எவரஸ்டு உச்சிக்கு
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு!
இனி வரும் காலம்
ஆகஸ்டுகளும் ஜனவரிகளும்
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
வளமான வாழ்க்கைக்குத் திடமான உடல்
தேக்கு மரம் நடுவீர்
இமய உச்சியில்
முன்னேற்றத் தடைகள் மூன்று
உங்கள் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை உண்டாக்கிட
மலிவாய் எப்போது?
எதற்கு தன்னம்பிக்கை