Home » Editorial » ஆகஸ்டுகளும் ஜனவரிகளும்

 
ஆகஸ்டுகளும் ஜனவரிகளும்


admin
Author:

ஆண்டுதோறும் ஆகஸ்டு 15ம், ஜனவரி 26ம் வந்து வந்து போகின்றன. விடுதலை பெற்றோம் குடியரசு ஆனோம் என்பதில் ஓரளவு மகிழ்ச்சி கொள்ளலாம்.

ஆனாலும் நமது அடிப்படைத் தேவைகளைக் கூட நாம் இன்னும் நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையில்தான் நாம் இன்றும் உள்ளோம்.

உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம் ஆகிய ஐந்தினையும் நாம் இன்னும் நமது மக்களுக்குக் கொடுக்க முடியவில்லை.

உழைக்கின்ற மனப்பான்மையுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கத் தவறி விட்டோம். ஜனநாயகம் என்ற பெயரில் கட்சித் தலைவர்கள் சர்வாதிகாரிகளாக மாறி வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். (இதில் சிலர் பலர் விதிவிலக்காக இருக்கலாம்.)

ஆக நாம் இந்த நாளில் விடுதலை பெற்ற இந்த நாளில் – நமது போக்கை மறு பரிசீலனை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.

நமது திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செய்தாலன்றி வெற்றி பெறமுடியாது.

சாதி, மத வேறுபாடின்றி மக்கள் தொகையைக் கட்டுபடுத்த நாம் முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்.

பொருள் உற்பத்திக்கு முன்னிரை கொடுத்து நாம் வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும்.

வேளாண்மையை முதன்மைத் தொழிலாக்க்கொண்ட நம்நாட்டில், நீர்வள ஆதாரங்களை முறைப்படுத்தி பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

அரசின் ஆடம்பரச் செலவுகளைக்குறைத்து மட்டுப்படுத்தி, ஆடம்பரச் செலவே இல்லாத நிலைக்குக் கொண்டு வரவேண்டும்.

எவ்வளவு நன்மை விளைவதாக இருந்தாலும் ‘மது விலக்கை’ ஒரு காலும் தளர்த்தக் கூடாது. இதனால் கிராம மக்களும் ஏழைகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வருமானத்தைக் கொண்டு ஏழைகளுக்கு பாதிக்கப்படுகின்றனர். இந்த வருமானத்தைக் கொண்டு ஏழைகளுக்கு நன்மை செய்வது என்பது நன்றாக இருந்த அவர்களின் கைகால்களை ஒடித்துவிட்டு பிறகு மருத்துவம் பார்ப்பதற்கு ஒப்பாகும்.

இவைகள் எல்லாம் நாம் நமது சிந்தனைக்கு உரிய கருத்துகளாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

‘தன்னம்பிக்கை’ நண்பர்கள் தங்களால் ஆன நற் செயல்களில் ஈடுபட வேண்டுகிறோம்.

குறைந்தது நாம் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாவிடினும் நாம் முன்னுதாரணமாகவேணும் வாழ முயற்சிப்போம். அல்லது மனிதர் களாவாவது வாழக் கற்றுக்கொள்வோம். தன்னம்பிக்கை வாசகர்களுக்கும் உலகத்து மக்களுக்கும் விடுதலை நாள் வாழ்த்துக்கள்.

-ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1990

சரித்திரம்
அர்த்தமான விடியல்கள்
பெர்ட்ரண்டு ரஸ்ஸல்
எவரஸ்டு உச்சிக்கு
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு!
இனி வரும் காலம்
ஆகஸ்டுகளும் ஜனவரிகளும்
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
வளமான வாழ்க்கைக்குத் திடமான உடல்
தேக்கு மரம் நடுவீர்
இமய உச்சியில்
முன்னேற்றத் தடைகள் மூன்று
உங்கள் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை உண்டாக்கிட
மலிவாய் எப்போது?
எதற்கு தன்னம்பிக்கை