Home » Articles » கங்கை காவிரியை இணைப்போம்

 
கங்கை காவிரியை இணைப்போம்


பாரதி
Author:

(சென்ற இதழ் தொடர்ச்சி)

கங்கை காவிரி திட்டம் நிறைவேறும்வரை நம் கருத்துக்களை ஓயாமல் தெளிவுடன் தெரிவித்துக் கொண்டே இருப்பது இன்றியமையாதது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்

நினைவு கூர்வது நல்லது

இந்திய நாடு ஒரு குடையின்கீழ் இருப்பது. அதனையே பெரும்பான்மை மக்கள் விரும்புகின்றனர். ஆனால் ஒரு சகோதரன் நீரில் மிதப்பதும் நீர் வளத்தை வீணடிப்பதுமாக இருக்கும் அதே நேரத்தில், மற்றொரு சகோதரன் குடிப்பதற்கும் நீரின்றித் தவிப்பது தற்காலிக விபத்தாக இருக்கலாம். அதுவே நிரந்தரமாக, நிலையாக இருக்குமானால் சகோதர பாசம் எப்படி வரும்? என்பதை ஆளும் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தேசிய ஒருமைப்பாடு என்பது இருப்பவர்கள் இல்லாதோர்க்குக் கொடுத்து உதவும்போது வலுப்படும் என்து ஒன்றும் புதிய கருதல்ல.

நாட்டு மக்களுக்கும் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் பங்குண்டு. வீரத் தலைவன் லெனின் தலைமையில் சோவியத்து தேசிய மக்கள் புரட்சி செய்து மிகக்குறுகிய கால அளவில் வால்கா – பீப்பர் நதிகளின் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றினார்கள். இரண்டாவது உலகப்போரில் ஈடுபட்டிருந்த நேரத்திலும் இந்தத் திட்டத்தையும் அந்த இக்கட்டான நேரத்திலேயே சோவியத்து மக்கள் செய்து முடித்தார்கள் என்ற வரலாற்று நிகழ்ச்சிகளும் இருக்கவே செய்கின்றன.

ஏன்? நம் நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலம், பாலைவனத்தைச் சோலை வனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சுமார் 658 கிலோ மீட்டர் நீளமுள்ள காய்வாயை அமைத்து வெற்றி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆதலின் நடுவண் அரசு இக்கருத்துக்களில் பொதிந்துள்ள உள்ளுணர்வை ஆராய்ந்து, எப்பணிக்கும் முதற்பணியாக இப்பணியை மேற்கொண்டு நதிகளை, நாட்டுடமையாக்கி நீர்வள ஆதாரங்களைப் பரவலாக்குவது ஒன்றே நிரந்தரத் தீர்வுக்கு வழியாகும்.

இன்று இல்லாவிட்டால் நாளை

டாக்டர்.. வா. செ. குழந்தைசாமி அவர்கள் கூறுவது போல் “இன்றிலிருந்து 25 ஆண்டுகளுக்குள்ளாக நாட்டின் பல பகுதிகளுக்குத் தொழில் வளர்ச்சிக்கு, குடி நீருக்குக் கூட கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று எண்ணும் போது எவ்விலை கொடுத்தேனும் அதைச் செய்ய வேண்டியது முக்கியமாகிறது.

தேசிய நீர் இணைப்பு தேவையான ஒன்று. செயல்படுத்த இயன்ற ஒன்று. இன்றில்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள், செயல்படுத்தக்கூடிய ஒன்று நீண்ட கால அளவில் தவிர்க்க இயலாத ஒன்று. எவ்வளவு முன் நோக்கத்தோடு இன்று நாம் செயல்படுகிறோமோ அவ்வளவு பெரிய அளவில் நமது எதிர்காலத் தலைமுறைக்கு நாம் உதவியவர்களாவோம்.

இந்தக் கருத்தினை நாம் ஓர் எச்சரிக்கையாகக் கொண்டு எப்பாடுபட்டேனும் தற்காலிக வெற்றிகளை மறந்து துறந்து நிரந்தரத்தீர்வுக்கு வழி காண்போம். இது இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமை என்றும் உணர்வோம்.

வங்கத்து ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.
-பாரதி.

(நன்றி: களஞ்சியம், அக். 1989)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1990

விவசாயிகள்
"Fool wanders wise Travels"
பிடித்தமான மூன்று கொள்கைகள்
கங்கை காவிரியை இணைப்போம்
தன்னம்பிக்கை
இனியென்ன?
மயங்கி மயங்கி…
என் கைகள் பரபரக்கின்றன
உங்கள் அறிமுகம்
கங்கை – காவிரி?
சாதனையாளராகும் தகுதி உங்களுக்கு உண்டு
நமது சகோதரிகள்?
வெய்யிலில் உழைக்கிறீர்களா? வருந்தாதீர்கள்!
நீயே வெற்றிகொள்
நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை
சிந்தனைத்துளி