Home » Articles » இனியென்ன?

 
இனியென்ன?


ஆனந்தி இரா
Author:

நிகழ்காலத்தை நேசி நீ
எதிர்காலம் – உன்
ஏவலுக்கு அடி வணங்கும்.

நாளைய நடப்புகளில் – நீ
நாட்டம் கொண்டால்
நம்பிக்கையின் முயற்சி இன்று
ஆட்டம் காணும்.

நாளை நாளை என்று
நாட்களை விரட்டிச் சென்றால்
அவை பக்கம் வாராது
விலகியே செல்லும்.

செல்பவற்றைப் பார்த்து
செல்லரித்துப் போகாதே
சிதைந்த கனவுகளை எண்ணி
சிந்தை கலங்கி நில்லாதே.
சுற்றிலும் கவனி நீ.
செய்திகளைச் சேகரி

செயல் எதுவாகிலும்
‘இன்றே’ செய்குவோம் – என
இனிதே உச்சரி.

வேற்றொருவர் பாதையில்
உன் பயணம்?
வேண்டாம் விலகு.
தனி வழி தேர்ந்தெடு
உன் வழி உருவாக்கு.
உயர்வாக்கு

இன்று திட்டமிடு
தெளிந்து செயல்படு
நாட்கள் – உன்னை வட்டமிடும்

இனியென்ன?
உன் உன்னத உலகில்
நீயே அனைத்துமாவாய்!

இரா. ஆனந்தி
இராஜபாளையம் 626117


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1990

விவசாயிகள்
"Fool wanders wise Travels"
பிடித்தமான மூன்று கொள்கைகள்
கங்கை காவிரியை இணைப்போம்
தன்னம்பிக்கை
இனியென்ன?
மயங்கி மயங்கி…
என் கைகள் பரபரக்கின்றன
உங்கள் அறிமுகம்
கங்கை – காவிரி?
சாதனையாளராகும் தகுதி உங்களுக்கு உண்டு
நமது சகோதரிகள்?
வெய்யிலில் உழைக்கிறீர்களா? வருந்தாதீர்கள்!
நீயே வெற்றிகொள்
நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை
சிந்தனைத்துளி