Home » Editorial » நமது சகோதரிகள்?

 
நமது சகோதரிகள்?


admin
Author:

அண்மையில் தமிழ்நாட்டுப் பெண்கள் 824 பேரை பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து மீட்டுவந்த பெரும் பணிக்காகத் தமிழக அரசை, தமிழ்நாட்டுக் காவல்துறையைப் பெரிதும் பாராட்டலாம். நல்ல செயல்கள் என்றால் பாராட்டுவது நமது கடமை. பம்பாயிலுள்ள சமூக சேவை அமைப்பும் பெரிதும் பாராட்டுக்குரியதாகும்.

பல்வேறு காரணங்கள்

வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியில் சென்றவர்கள், கணவனால், காதலனால் கைவிடப்பட்டவர்கள், வேலை தேடி அலைந்து சிக்கிக் கொண்டவர்கள், தங்கள் அழகும் இளமையுமே பகையாகி மயக்கிக் கொண்டு செல்லப்பட்டவர்கள், சமூக விரோதிகளால் கடத்திச்செல்லப்பட்டவர்கள் இப்படி தங்களை அறியாமல் தங்கள் விருப்பம் இல்லாமல் சிக்கிக் கொண்டவர்கள்தாம் இந்த அபலைப் பெண்கள். இவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள். இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய சமுதாயத்தைத் தான் நாம் குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்.

மனிதாபிமானம்

இவர்களைப் படம் பிடித்தும் வேண்டாத கேள்விகளைக் கேட்டும் மேலும் அவர்களைத் துன்பத்திற்கு உள்ளாக்கும் மனிதர்களை நாம் அடியோடு வெற்றுகின்றோம். நொந்து கிடக்கின்ற அந்த உள்ளங்களுக்கு ஆக்கபூர்மான ஆறுதல்தான் இப்போது தேவை. இனி இரண்டுபணிகளை அரசும் சேவை நிறுவனங்களும் சமுதாயமும் செய்ய வேண்டும். ஆறுதல் சொற்களைவிட செயல்பாடுகள்தான் இனி முக்கியம்.

இனி போக்கிடம் இல்லை

இவர்களுக்கு இனி போக்கிடம் இல்லை. பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டாலும் உற்றார் உறவினர் சமுதாயம் இவர்களைக் கருணைகாட்டாது. இந்தச் சமுதாயம் நச்சுப் பாம்பாகி நாள் தோறும் சொல்லால் தீண்டும். பாம்பானது கடத்தால்தான் விசம் ஏறும். இவர்களோ பார்வையிலேயே விசத்தைக் கக்குவார்கள்.

அதனால் இவர்கள் சொந்ந உழைப்பில் தனித்து வாழ்வதுதான் சிறந்தது. இவர்கள் தனித்து வாழப்பொருளாதாரம் இருந்தால் போதும். சமுதாயம் இவர்களைக் கைநீட்டி அழைத்துக்கொள்ளும்.

சில கருத்துரைகள்

1) இவர்களில் கல்வி கற்றவர்களுக்கு, அவர்கள் கல்வி அறிவிற்கும் திறமைக்கும் ஏற்ப சிறிது காலம் பயிற்சி கொடுத்துப் பின் ஒரு அரசாங்க வேலை கொடுத்தல்.
2) கல்வித் தகுதி இல்லாதவர்களுக்கு ஏற்றவகையில் தையல் போன்ற ஏதேனும் ஒரு தொழில்பயிற்சி அளித்து அந்தத் தொழில் செய்ய வசதி செய்து கொடுத்தல்,
3) சேவை நிறுவனங்கள் தாமாக முன் வந்து இவர்களது தொழிலுக்குத் தேவையான தையல் மிசின் வாங்கக் கொடுக்கலாம்.
4) சமுதாயம் இவர்களுக்கு நேர்ந்த குறைபாடுகளை மட்டும் பார்க்காமல், ஏன் நிகழ்ந்தது, யார் காரணம் என்பதை எல்லாம் எண்ணிப்பார்த்து இவர்களை நம்மில் ஒருவராக மதித்துப் போற்றும் பரந்த நோக்கோடு அணுக வேண்டும்.
5) நவகாளியில் பெண்களுக்கு நேர்ந்த அவலநிலையைவிட மோசமானது. இந்தப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை, இந்தப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்க வரும் இளைஞர்களை உலகம் ஏற்றுப் போற்றவேண்டும்.
6) பெண்களைக் கல்வி கற்க வைப்பதாலும் அவர்களை ஒரு தொழில் பயிற்சிப்பெற செய்து , சொந்தக் காலில் நிற்க வளர்ப்பதுமே பெற்றோர்கள் செய்ய வேண்டிய பெரும் கடமையாகும்.
7) இவர்களை இந்தக் கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.
8) இல்லாவிடின் இவர்கள் மீண்டும் தாங்களாகவே பம்பாயை நோக்கிப்போகும் காலம் வந்துவிடும் அபாயம் நேரிட்டுவிடும்.

சமுதாயம் இதுப்பற்றிச் சிந்திக்குமாக.

ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1990

விவசாயிகள்
"Fool wanders wise Travels"
பிடித்தமான மூன்று கொள்கைகள்
கங்கை காவிரியை இணைப்போம்
தன்னம்பிக்கை
இனியென்ன?
மயங்கி மயங்கி…
என் கைகள் பரபரக்கின்றன
உங்கள் அறிமுகம்
கங்கை – காவிரி?
சாதனையாளராகும் தகுதி உங்களுக்கு உண்டு
நமது சகோதரிகள்?
வெய்யிலில் உழைக்கிறீர்களா? வருந்தாதீர்கள்!
நீயே வெற்றிகொள்
நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை
சிந்தனைத்துளி