– 1990 – June | தன்னம்பிக்கை

Home » 1990 » June

 
 • Categories


 • Archives


  Follow us on

  விவசாயிகள்

  மின்விசிறி சுற்றுகிறது!
  மனிதன் தூங்கிப் போகிறான்…
  தென்றல் வருகிறது!
  செடிகள் தூங்கிப் போயின..

  Continue Reading »

  "Fool wanders wise Travels"

  “Fool wanders wise Travels” ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அது போல எவ்வளவோ பேர்கள் வெளிநாடுகளுக்கு விளம்பரத்திற்காக செல்வதுண்டு. அவர்களால்பிறர் பயன் அடையார், அது மட்டுமல்ல அவருடைய பயணத்தைப் பற்றியும்

  Continue Reading »

  பிடித்தமான மூன்று கொள்கைகள்

  சமுதாயம் – அறிவியல் – இலக்கியம்.. இம் மூன்றையும் தாங்கி ஒரு சிறப்பிதழ் வருவது இதுவாகத் தான் இருக்கும்.

  இந்தியர் அனைவருக்கும் ஒரே சட்டம், நதிகளை தேசிய உடமையாக்குதல், கங்கை – காவிரி இணைப்பை ஆதரித்தல்.

  Continue Reading »

  கங்கை காவிரியை இணைப்போம்

  (சென்ற இதழ் தொடர்ச்சி)

  கங்கை காவிரி திட்டம் நிறைவேறும்வரை நம் கருத்துக்களை ஓயாமல் தெளிவுடன் தெரிவித்துக் கொண்டே இருப்பது இன்றியமையாதது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்

  Continue Reading »

  தன்னம்பிக்கை

  குயிலுக்குத் தோகையில்லை
  மயிலுக்குக் குலில்லை
  வருந்தி வருந்தி
  மடிந்தன இரண்டும்

  Continue Reading »

  இனியென்ன?

  நிகழ்காலத்தை நேசி நீ
  எதிர்காலம் – உன்
  ஏவலுக்கு அடி வணங்கும்.

  நாளைய நடப்புகளில் – நீ

  Continue Reading »

  மயங்கி மயங்கி…

  பெண்ணே
  வெறும் மல்லிகைக்கே
  மயங்கி மயங்கி
  மயங்கிக் கிடக்கும்
  பெண்ணே!

  Continue Reading »

  என் கைகள் பரபரக்கின்றன

  ஏப்ரல் மாத இதழின் அனைத்து அம்சங்களும் அருமை. ஒரு தோழர் எழுதியிருந்ததைப்போல் மக்களின் உணர்ச்சிகளைச் சுரண்டிக் கொண்டிருந்த பத்திரிக்கைகளுக்கு மத்தியில் ‘தன்னம்பிக்கை’ இதழ் தனிப்பட்டு நிற்கிறது. “காயம்படின் என்ன…? காலம் ஆற்றும். தேர்ச் சக்கரம் நீ, ஓரிடத்தில் நிற்காதே சுழல்” என்ற கவிஞர் சீத்தாபாரதியின் வரிகள் மனதுள் புத்துணர்ச்சியை வாரி இறைத்தது. வாழ்வின் அர்த்தத்தை அறிவித்தது. கவிஞர் வெற்றிப் பேரொளியின் ‘சலனச்சிறை’ தெளிவு தந்தது. கவிஞர் மீ. உமாமகேஸ்வரியின் ‘சரிநிகர் சமானம்’ தெளிவுள்ள அனைத்துத் தோழிகளுக்கும், தோழர்களுக்கும் வேதமாக மனதுள் ஊடுறுவும். ‘ஒரு நட்சத்திரமாக வேனும் இரு’ எனும் வரிகள் உண்மை சொன்னது: சத்தியத்தின் ஆரம்ப몮ப்புள்ளியை தொட்டுக்காட்டியது. விதை தூவிய ஆசிரியர் அருகில் வந்து “Why con’t you” என்று கேட்பது போல் இருந்ததது. ‘இஸ்ரவேல் நாட்டின் கட்டாய இராணுவப்பயிற்சி’ கட்டுரை படித்ததும் என்னை யறியாமால் என் தேகத்தைப் பார்த்தேன். என் தேசத்திற்காய் என் நரம்புகள் முறுக்கேறுவதை உணர்ந்தேன். கங்கை காவிரியை இணைக்க என் கைகள் பரபரக்கின்றன.

  -கவிஞர் சிவநேசன்
  மைசூர்.

  உங்கள் அறிமுகம்

  வெளிநாடு சென்று வந்தவர்கள் அங்கு நண்பர்கள் இல்லத்தில் அரிசிச் சோறும், வத்தல் குழம்பும் சாப்பிட்ட சாதனைகளையும், நைட் கிளப்புகளில் கூத்தடித்த அனுபவங்களையும் இதயம் பேசும் பயணக் கட்டுரைகளாக்கி காசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்களோ இஸ்ரேல் நாட்டின் சொட்டு நீர்ப்பாசன சிறப்பைக் கட்டுரையாக்கிக் கொண்டு இருக்கின்றீர்கள். காதலராய் இருக்கும் நடிக நடிகையருக்குள் திருமண இணைப்பை ஏற்படுத்துவதில் முன்னின்று முயற்சித்து நாட்டுத் தொண்டை ஆனந்தமாய் விகடமாய் ஆற்றி வருபவர்களுக்கு இடையில் கங்கை காவிரி இணைப்புக்காக ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள். தங்கள் அறிமுகம் கிடைத்த நல் வாய்ப்புக்களில் தலையானது என மகிழ்கிறேன். இதழலில் அனைத்துக் கவிதைகளும் கட்டுரைகளும் நெஞ்சில் தன்னம்பிக்கையினையூட்டி வாழ்வில் தற்சார்பினை வளர்க்க கூடியன.

  கவிஞர். வெற்றிப்பேரொளி
  திருக்குவளை – 610204

  கங்கை – காவிரி?

  கங்கை காவிரி இணைப்பு கன்னியரையும் காளையரையும் களிக்க வைக்கும் காதல் மொழியென்றோ நினைத்தீர்.

  வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் கற்பனையன்றோ செய்தீர்.

  Continue Reading »