Home » Articles » 'நல் திட்டம்'

 
'நல் திட்டம்'


அறிவுச்சுடர்
Author:

இந்தியாவின் இன்னல்கள், வேலையின்மை, நாளும்
இரட்டிப்பாய் பெருவதன் காரணம்தான் என்ன?
சிந்திக்கும் நல்லவர்க்கு விடைபுரியும் நன்றாய்,
சனநெருக்கம் பெருக்குவதில் குறையில்லை என்று
இந்த நிலை வளருவதால் உணவுக்கும் பஞ்சம்
இல்லாமை வறுமை நம்மை இன்னலுற வாட்டும்
இந்த நிலை போக்கிடவும் ஒருவழிதான் உண்டு
எழில் கங்கை காவிரியில் இணைப்பது தான் நன்று
நிலமுண்டு திறமுண்டு உழைப்போரும் உண்டு
நீரின்றி வளமின்றி வறுமையால் என்றும்
இலமென்று இந்நாடு துயர்படுதல் நன்றோ?
இருக்கின்ற மாநிலங்கள் இராணுவமும் ஒன்றாய்
நலமென்றும் நல்கிடும் நல் திட்டமிது என்று
நாமுழைத்தால் நற்கங்கை காவிரியில் சேரும்
பலவளமும் பெருக்கெடுத்துப் பஞ்சங்கள் தீரும்
பாருக்கே பாரதமும் உணவளிக்க நேரும்.
கவிஞர் – அறிவுச் சுடர்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!