Home » Articles » சிறந்த தலைவன் யார்?

 
சிறந்த தலைவன் யார்?


admin
Author:

சிறந்த தலைவன் என்பவன் தண்ணீரைப் போன்றவன். தண்ணீரைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

அது எல்லா உயிரனங்களையும் பாரபட்சமில்லாமல், கருத்து வேறுபாடில்லாமல், தூய்மைப்படுத்தி புத்துணர்ச்சி ஊட்டுகிறது.

எளிதில் வளைந்து கொடுக்கக் கூடிய தன்மையுடையது. திரவங்களுக்கு உரிய விதிகளை இயல்பாக பின்பற்றுகிறது.

தலைவனைப் பற்றி சிந்தியுங்கள். அவன் எந்த ஒரு அமைப்பிலும் குறை காணாமல் பணியாற்றுகிறான். அனைத்து வகையான காரியங்களையும் ஏற்றுச் செயல்படுகிறான்.

தான் அடையப்போகும் பயனைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு சேவை செய்கிறான்.

அவன் அனைரும் தெளிவுபெற ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே குறுக்கிட்டு பகட்டில்லாமல் தெளிவாகவும் உண்மையாகவும் பேசுகிறான்.

தண்ணீரின் அசைவுகளிலிருந்து நடைமுறையில் குறித்த காலம் என்பது முக்கிய இடம் வகிக்கிறது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுகிறார்.

தண்ணீரைப் போல் சிறந்த தலைவன் என்பவன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்துப் போகக்கூடியவன்.

அவன் நிதானமாகக் காரியங்களை வகைப்படுத்துவதால் அவனுடைய குழு அவனுக்கு எதிர்ப்போ மறுப்போ தெரிவிக்காமல் செயல்படுகிறது.

– டாவோவின் நூலிலிருந்து. …


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1990

கங்கை காவிரியை இணைப்போம்
வெளிநாடு பயணம்
பதில் சொல்!
உழைக்க நினைத்துவிடு
ஏன் வீழ்ந்து கிடக்கிறாய்?
இந்தியாவில் உயர் கல்வியின் நிலை
சிறந்த தலைவன் யார்?
உனக்குள் ஒருவன்
நேரத்தை நிர்வகிப்போம்
தன்னம்பிக்கையின் பணி
இளைஞர்களிடையே காதலும் காமும்..
ஓ.. என்றன் நெல்சன் மண்டேலாவே!
இன்னொரு பூ..