Home » Editorial » ஆளுக்கொரு சிறுமியின் கல்விச் செலவை ஏற்போம்

 
ஆளுக்கொரு சிறுமியின் கல்விச் செலவை ஏற்போம்


admin
Author:

அறிவு வெளிச்சம் உலகின் இருளைப் போக்கி வருகின்றது. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களைப் பெரும்பான்மையும் நூறு விழுக்காடு, கல்வி அறிவுடையவர்களாக ஆக்கி இருக்கின்றன.

அவர்களது பொது வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்டதுதான் அடிப்படைக் காரணமாகும்.

உலகில் படித்த மக்களின் எண்ணிக்கை 70%

இந்தியா உலக சராசரியிலேயே பாதி அளவுதான் உள்ளது, வருந்ததக்கது.

இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையோ 36% தான். இன்றைய நிலையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 10 ஆண்களிலும் 6 பேர் படிக்காதவர்கள். ஒவ்வொரு 10 பெண்களிலும் 7 பேர் படிக்காதவர்கள்.

இதே நிலை நீடிக்குமானால் உலகில் கல்வி அறிவு பெறாத நாடுகளில் நாம் தான் முன்னிலை வகிப்போம். உலகில் கல்வி, அறிவு பெறாத மக்கள் தொகையில் 40 வழிக்காடு நம் நாட்டில் மட்டுமே இருப்போம். அதாவது படிக்காதவர்கள் எண்ணிக்கையே அறுபது (60) கோடியைத் தாண்டிடவும அபாயம் உள்ளது.

உலகில் பல நாடுகள் எல்லோருக்கும் உயர்கல்வி என்ற நிலைக்குச் சென்று கொண்டிருக்கும்போது குறைந்தது எல்லோருக்கும் எழுத்தறிவு” என்ற இலட்சியத்தையாவது நாம் எட்ட வேண்டாமா?

அடுத்த 10 ஆண்டுகள் எழுத்தறிவைப் பரப்பும் ஆண்டுகளாக எண்ணி முன்னுரிமை கொடுத்துச் செயல்பட வேண்டும். தொடக்க பள்ளிகளின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. கரும்பலகை இல்லாத பள்ளிக் கூடங்கள் கூட இன்றும் நாட்டில் உள்ளன.

ஒரு ஆசிரியர் 80 குழந்தைகளை வைத்துக் கற்பிக்கின்ற நிலை நகர்ப்புற பகுதிகள் அதிகமாக உள்ளன.

மத்திய மாநில அரசுகள் தொடக்கக் கல்விக்கு முதன்மை கொடுத்துச் செயல்பட வேண்டும்.

வேலையில்லாத பட்டதாரிகளை குறிப்பாகப் பெண்களை ஒப்பந்த அடிப்படையில் தொடக்கப் பள்ளிகளில் கல்வி கற்பிக்க அமர்த்தலாம்.

பல்வேறு ஆடம்பரச் செலவுகளைத் தவித்து ஆரம்பக் கல்விக்குச் செலவிடலாம்.

அறநிறுவனங்களும் சேவை நிறுவனங்களும் – இப்பொழுது கிராமத்தை ஏற்பது ஒவ்வொரு சேவை நிறுவனமும் ஆண்டுக்கு 5 அல்லது 10 தொடகப் பள்ளிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் செயல்படலாம்.

வசதி உள்ளவர்கள் ஆரம்பக் கல்வி நிறுவனங்களை அமைத்துச் செயல்படலாம்.

தனிப்பட்டவர்கள் ஏதேனும் தருமம் செய்ய முனைபவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளை கல்வியைப் பரப்புவதற்காக ஒதுக்கலாம்.
மிகச்சிறு அளவில் உதவி செய்பவர்கள் கூட ஏழை எளியவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் சட்டைத் துணிகள் வாங்கிக் கொடுப்பதன் மூலம் சேவை செய்யலாம்.

அடுத்த 10 ஆண்டுகளில் 2000-ல் எல்லோருக்கும் ‘எழுத்தறிவு’ என்ற இலட்சியத்தை அடைந்தால் தான் நாம் வறுமை, அறியாமைப் பணிகளில் இருந்து நீங்க முடியும்.

ஆலயம் கட்டுவதைக்காட்டிலும் அன்னச் சாலைகள் வைப்பதைக் காட்டிலும் ஓரிரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது புண்ணியம் என்றார் பாரதி.

இந்த கொள்களையை நடைமுறைபப்டுத்த வேண்டுமானால் ஒருவர் ஒரு குழந்தையின் கல்விச் செலவை ஏற்றால் போதும் அதுவும் 5 ஆம் வகுப்பு வரை ஏற்றால்கூட போதுமானது. அதிலும் ஒரு சிறுமிக்குக் கல்வி அளிப்பதானது வருங்காலக் குடும்பம் ஒன்றிற்கே கல்வி அளிப்பதற்குச் சமமானதாகும்.

இதைப் பற்றி நல் உள்ளம் கொண்டவர்கள் சிந்திப்பார்களாக. அவரவர் அளவில் செயல் படுவார்களாக.
-ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1990

சிந்தனைத்துளி
'தன்னம்பிக்கை'
இளைஞர்களுக்கு….
மாதம் ஒரு நூல்
புன் சிரிப்பு கொஞ்சம்!
கங்கை காவிரியை இணைப்போம்
கிழவனும் மரமும்
தீர்வு
இளைஞர்களிடையே காதலும் காமமும்
அறிஞர்கள்…
நம்பிக்கை இழைகள்
முற்போக்காக சிந்தித்தால்…
புறப்படு நண்பனே!
இதோ ஓர் அனுபவம் பேசுகிறது
வெற்றி உங்களை வந்தடைய
அறிவு வளர்ச்சியோடு இதய வளர்ச்சியும் தேவை
ஆளுக்கொரு சிறுமியின் கல்விச் செலவை ஏற்போம்
என் சக ஜீவனே….