Home » Articles » இனிய நண்பர்களே! வணக்கம்.

 
இனிய நண்பர்களே! வணக்கம்.


admin
Author:

இந்த நாட்டு மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் செய்கின்ற செயல்களினால் ஏதேனும் துன்பமும் தொல்லைகளும் நேருமாயின் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்ள தாயாரக இருக்கின்றோம்.

      நன்மை செய்வதால் தீமைவருமாயின் நேரிய வழியில் போக்கிக்கொள்வதும் முடியாத நிலையில் அதை ஏற்றுக்கொள்வதும் அந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொள்வதுமே “தன்னம்பிக்கையின்” இலட்சியம்.
  • இந்த வகையில் ஆசிரியர் குழு செயல்படும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்கிறோம். இந்த நாட்டில் வறுமையும் அறியாமையும் இருக்கும்வரை இந்நாடு ஒருகாலும் முன்னேறாது.

வறுமையை ஒழிக்க சொந்த உழைப்பை நம்புவோம். உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் கடமை என்பதை உணர்த்துவோம்.

வெறும் இனாம்களும் சலுகைகளும் வேட்டியும், சேலையும், அரிசியும், பருப்பும் வறுமையை நிரந்தரப்படுத்தும் செயலே அன்றி வறுமையை ஒழிக்க எடுக்கும் நிரந்தர தீர்வு அல்ல என்பதை மக்கள் மத்தியில் எடுத்துவைப்போம். இந்த புனிதப் பணியில் தங்களை இணைத்துக் கொள்பவர்கள் தன்னம்பிக்கையில் பங்கு கொள்ளுங்கள்.

அறிவு பூர்வமாகச் சிந்தித்து செயல்படுகின்ற, நன்மை தீமைகளைக் கணித்துத்தீர்மானிக்கின்ற ஆயிரம் இளைய இதயங்களை நோக்கி தன்னம்பிக்கை தன் கைகளை நீட்டி நின்கின்றது.


Share
 

1 Comment

Post a Comment


 

 


December 1989

நம்பிக்கை…
கவிதைகள்
சிந்தனைத்துளி
வெள்ளைப் புறாக்களே!
இனிய நண்பர்களே! வணக்கம்.
புதிய அரசை வரவேற்போம்
நிரந்தர வெற்றிக்கு….
நமக்கு வந்த கடிதங்கள்
ஒரு சாதனையாளரை சந்தித்தபோது…
தோழா உனக்கென்ன..!